Amalraj vs Aravind – Closeup Ad


தமிழ்ப்பதிவு என்றாலே பொடி வைக்காமல் எழுதலாமா? பட்டிமன்ற கேள்வி அல்ல.

விடை: எழுதலாம். உதாரணம்: கீழே

‘தெருவிளக்கில் படித்து ஜட்ஜானார் இன்னார்’ என்று இடித்தே வளர்க்கப்பட்டவன் நான். அந்த மாதிரி படிக்க முடியாமல், வீட்டுக்குள்ளேயே நடுநிசி எண்ணெய்யை (மிட்நைட் ஆயில்) செல்வழித்து வந்தவன்.

இன்று, ‘விளம்பரங்கள் எவ்வளவு புத்திசாலித்தனமாக இருக்கும்… தெரியுமா?’ என்று வளர்க்கிறேன் நான். அவளோ, DVR-இல் எல்லாம் ஓடியேப் போவதால் மூன்று பாட்டு ஒலியும்-ஒளியுமுக்கு முப்பது நிமிட விளம்பரம் பார்க்காமல் வளர்கிறாள்.

அப்படி தவறவிட்டிருக்க வாய்ப்பு இருந்தும், என் மகளைக் கவர்ந்த விளம்பரம் என்று தடுத்தாட் கொண்டாள். நான் தூர்தர்சன் பார்த்த காலங்களில் எனக்கும் (வேறு காரணங்களுக்காக) ரசனையான க்ளோசப் விளம்பரம்.

முதலில் வருகிறார். அமல்ராஜ்.

பௌலிங் வெளிச்சம். ஆர்கானிக் விக்கோ வஜ்ரதந்தி பயன்படுத்துபவர் போல. வாயை மூடிக்கொண்டு கெக்கே பிக்கே சிரிக்கிறார். பெண்கள் முகஞ்சுளிக்கிறார்கள். புன்சிரிப்பு விநோத சப்தம் எழுப்புகிறது.

அடுத்தவர் அர்விந்த்.

ஸ்னூக்கர் அரையிருட்டு. க்ளோசப் மந்தகாசப் புன்னகை. மாருதம் பொழிய கடோத்கஜ இடிச் சிரிப்பு.  Drop Waist-களும் Halter-களும் Faux Wrap-களும் களை கட்ட தொற்றிக் கொள்ளும் பற்கள்.

பிரச்சினை என்ன?

அசமஞ்சம் பெயர் ஏன் கிறித்துவ மதத்தை சேர்ந்த அமல்ராஜ் என்று வைக்கப்பட்டிருக்கிறது?

ஆர்பாட்டத்தின் பெயர் ஏன் ஹிந்துவான அர்விந்த் என்று நாமகரணமிடப்பட்டது?

தேர்ந்தெடுக்க…

  1. ஊடக வன்முறை
  2. மதவெறி
  3. பில்லியர்ட்ஸ் என்னும் பணத்திமிரின் வெளிப்பாடு
  4. புடவை, சூரிதார் என்னும் பண்டைய கலாச்சாரத்தை வெறுக்கும் மனப்பான்மை

ஒரு ஜோக்:

Corporate America

The game of choice for unemployed people or maintenance level workers is basketball.

The game of choice for frontline workers is football.

The game of choice for middle management is tennis.

The game of choice for CEOs and executives is golf.

Conclusion: The higher up on the corporate ladder you are, the smaller your balls are.

One response to “Amalraj vs Aravind – Closeup Ad

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.