Daily Archives: மார்ச் 28, 2007

Be afraid… be very afraid?

Today’s News & Analysis:

  1. LTTE’s Airforce starts Flight Attacks « தரவைப் பகுதியில் விமானத் தாக்குதல்
  2. LTTE air power threat to entire South Asian region « வானில் எழுந்த புதிய கவலை

June 30, 2005 (Tamiloviam)

இந்தியாவும் வான்புலிகளும்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவால் வளர்த்து விடப்பட்ட இயக்கம் அல்-கெய்தா. அதே போல், இந்தியாவால் ஆதரிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இயக்கம் எல்.டி.டி.ஈ. உலக வர்த்தக மையத்தை ஒஸாமா பின் லாடன் தாக்கியது போல், மிகப் பெரிய பேரழிவு எதையும் விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு நிகழ்த்தவில்லை.

ஆனால், அவ்வாறான தாக்குதலை செய்யக்கூடிய வாய்ப்புகளை விடுதலலப் புலிகள் மேம்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றார்கள். விடுதலைப் புலிகள் துவக்கியிருக்கும் விமானப் படை, செப். 11 போன்ற தாக்குதல்களைத் தொடுக்கும் வலிமையை அவர்களுக்குத் தந்துள்ளதாக இந்தியா டுடே (தமிழ்) ஜூன் 8 கட்டுரை விவரிக்கிறது.

தாய்வான் பதினெட்டு பில்லியன் டாலர்களுக்கு அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது. தாய்வானை நோக்கி சீனா 610 ஏவுகணைகளை குறி வைத்திருப்பதினாலேயே, தாய்வானின் இராணுவ பட்ஜெட் ஏறுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரையும் சிறையில் வைத்து வாட்டும் மியான்மருக்கு இங்கிலாந்து தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இதே போல், விடுதலைப் புலிகளை பலப்படுத்துவதன் மூலம், இலங்கையும் இந்தியாவும், அமெரிக்காவிடமிருந்தும் இங்கிலாந்திடமிருந்தும் அதிநவீன தற்காப்பு தொழில்நுட்பத்திற்காக செலவிட ஆரம்பிக்கும்.

இலங்கையின் பாதுகாப்புச் செலவீனம் 1990-ஆம் ஆண்டு 550 மில்லியன் இலங்கை ரூபாவாக (ஒரு இந்திய ரூபாய் = 2.3 இலங்கை ரூபாய்) இருந்திருக்கிறது. 1992-ஆம் ஆண்டு 2000 மில்லியனாக உயர்ந்தது என ரோஹான் குணரத்தினாவின் குறிப்பு கூறுவதாக ‘ஈழப் போரட்டத்தில் எனது சாட்சிய’த்தில் சி. புஸ்பராஜா எழுதுகிறார். அவரே தொடர்ந்து, ‘வேறொரு குறிப்பு 1981-ஆம் ஆண்டு 661 மில்லியனாக இருந்த செலவீனம் 1992-ஆம் ஆண்டு 18,058 மில்லியனாக உயர்ந்தது’ எனக் கூறுவதாகவும் சொல்கிறார்.

தரைப்படையும் கப்பல் படையும் ஏற்கனவே கொண்டிருந்த புலிகள், இப்பொழுது விமானப்படையையும் சேர்த்துக் கொண்டதால், முப்படைகளும் கொண்ட ஒரே கெரில்லா அமைப்பாக இருக்கிறார்கள். ஸெக்கில் தயாரான ஸிலின் ஜீ-143 (ZLIN Z 143) விமானங்கள் பல உபயோகங்கள் கொண்டது. விமான ஓட்டுனர் பயிற்சிக்கும் பயன்படும். அதிரடியாக சென்னை வரை பறந்து சென்று, காரியங்களை முடித்துவரவும் உபயோகமாகும். இந்த விமானத்தில் நான்கு பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். தானியங்கியாக ஆட்டோ-பைலட் முறையில் இயங்கக் கூடியது. 2759 கிலோ மீட்டர் வரை பறக்கலாம். கரடுமுரடான இடங்களிலும் எளிதில் இறக்கமுடியும். பத்து மில்லியன் ரூபாய்க்கு யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.

இது தவிர ஆயிரம் கி.மீ., 600 கி.மீ., 200 கி.மீ. என்று வெவ்வேறு தூரங்கள் சென்றுவரக்கூடிய விமானங்களையும் சமாதான காலத்தின் போருக்கான ஆயத்தங்களாக செய்கிறார்கள் என்று இலங்கைக்கான இந்திய ஹைகமிஷனர் நிருபமா ராவ் விவரிக்கிறார். இந்த விமான பலத்தின் மூலம் ஒற்று அறிவது, வேவு பார்ப்பது போன்றவை புலிகளுக்கு எளிதாகும். போராளிகளை, இலங்கை, தென்னிந்தியா மற்றும் தென் கிழக்காசியா போன்ற அக்கம்பக்கத்து நாடுகளுக்குக் கொண்டு விடுவது இயலும். போர் காலகட்டங்களில் வெளியிடங்களில் இருந்து அவசர உதவிகள் தருவிக்கவும்; சிகிச்சைகளுக்கு கொண்டு செல்லவும்; புதிய ராணுவ உதிரி பாகங்களை வெகுவிரைவில் கொண்டு வரவும் உதவலாம்.

ராஜீவ் காந்தி கொலையில் தேடப்பட்டு வருபவரும் தென்கிழக்கு ஆசியாவில் வசிப்பவருமான சண்முக குமரன் தர்மலிங்கம் விமான பாகங்களை உதிரியாகக் கொண்டு வந்து விமானம் கட்டமைப்பதில் சம்பந்தப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மாதந்தோறும் அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்களிடமிருந்து 8.6 கோடி ரூபாய் வருவதாக இந்திய உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது. இது விமான எரிபொருள், விமானிப் பயிற்சி போன்றவற்றுக்கும் உபயோகப்படும்.

விடுதலைப்புலிகளாகட்டும் அல் கெய்தாவாகட்டும். அவர்களின் மிகப் பெரிய பயமுறுத்தும் பலம் அவர்களின் தற்கொலைப் படைகள்தான். எல்.டி.டி.ஈ.இன் தற்கொலைப் படையின் பெயர் கரும்புலிகள். தற்கொலைத் தாக்குதல் என்றாலே உலகின் எல்லா நாடுகளும் முப்படைகளும் நடுங்குகிறார்கள்.

விடுதலைப் புலிகளின் திறனையும் நடவடிக்கைகளையும் குறைத்து மதிப்பிட்டு மீண்டும் ஏமாறக் கூடாது என்பதற்கு புஸ்பராஜாவின் கருத்து:

“இந்திய இராணுவம் இன்னோர் நாடான பாகிஸ்தானுடன் மோதிக் கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த பிரதேசத்தை பங்களாதேஷாக உருவாக்கியபோது, அதாவது 1974-ம் ஆண்டு நடந்த இந்த யுத்தத்தில் இறந்த இந்திய இராணுவத்தின் தொகை 1047-தான். அதாவது ஒரு நாட்டுடன் மோதி இருக்கிறது. இன்னோர் நாட்டை உருவாக்கி இருக்கிறது. ஆனால், இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கத்துடன் மோதி இறந்த இந்திய இராணுவத்தின் தொகை 1115”.

Sivappathikaram

  • நாயகியை அறிமுக இவ்வளவு விமரிசையாய், சமீபத்தில் பார்த்ததில்லை. சிம்ரன், இஷா கோபிகருக்கு அப்புறம் லட்சணம் + கவர்ச்சி; அஃப்கோர்ஸ் நடிப்பு.
  • வெளியே பனி கொட்டித் தள்ளிய மதியானம். இந்தியா உதை வாங்கி ‘அவுஸ்திரேலியா.. என் நாடு’ என்று ஜம்பம் சொல்ல முடியாத நேரம். இந்தப் படம்தான் மாட்டியது.
  • பழைய படம் பார்க்கும் வரிசையில் அடுத்து ‘வரலாறு‘ வந்திருக்கிறது.
  • அதுவும் மைக்ரேய்னோ ஒற்றைத் தலைவலியோ கொடுக்காமல் இருக்கணும்.
  • விஜய்காந்த் செய்ய வேண்டிய ரோலை, விஷாலுக்குக் கொடுத்துட்டாங்க.
  • பாட்டெல்லாம் அடிக்கடி வருது. நல்லாவும் இருந்தது; ம்யூசிக் இந்தியா ஆன்லைனில் கேட்கலாம். வீட்டில் பார்க்க உட்கார்ந்த மற்றவர்களை மாட்டினி ஷோவில் சோபாவில் மென்மையாய் தூங்க வைத்தது.
  • கிராமத்தில் நாயகி மட்டும் கப்ரி. மற்ற ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் தாவணி. தாவணி அழகு.
  • காலேஜுக்குள் போலீஸ் வந்தால் என்ன தப்பு? ஏன் ஓவராய் டென்சன் ஆனார்கள்?
  • லோக்கல் ரவுடி ரேஞ்சுக்கு சண்முகராஜன். அவருக்கும் பசுபதி மாதிரி ப்ரேக் கிடைக்கவேண்டும். அட்லீஸ்ட், டெலெகேட் செய்யுமாறு கதாபாத்திரம் அமைய வேண்டும்.

Economy

Long run is a misleading guide to current affairs. In the long run we are all dead.
Keynes

காலப்போக்கில் என்பது தற்காலத்திற்கு சரியான வழிகாட்டி அல்ல. காலப்போக்கில் எல்லாருமே போய் சேர்ந்துருவோம்.
-கீன்ஸ்

Philosophy

A Philosopher is a man who can look at an empty glass with a smile

Thomas Dewar

காதல்: Love is an ocean of emotions entirely surrounded by expenses.

பெண்ணியம்: Judge not a man by his clothes, but by his wife’s clothes.

குசும்பன்: A man who can laugh at his own misfortune is an asset to the community.

வலைப்பதிவு: The quality of the article should be its greatest advertisement.

விமர்சனம்: What we call confidence in ourselves we call conceit in others.

திண்ணைப்பேச்சு: Ability without enthusiasm is like a rifle without a bullet.

Sensationalism & Attention grabbing cricket

மோசமான பதிவுகளிடம் கவனத்தைப் பெற வைக்க போஸ்டின் தலைப்பில் பதிவர் மண்டையை உருட்டவும்.
மோசமான டீம்களிடம் கவனத்தைப் பெற வைக்க முதல் மேட்சில் தலை நாயகர்களை உருட்டவும்.

Quotable Quote – Unnale Unnale

நீங்க சைட் அடிச்சா, அதுக்குப் பேர் ‘ஜஸ்ட் லுக்கிங்
நாங்க பார்த்தா, அதுக்குப் பேரு ஜொள்ளா?

பபுள் கம்முக்கும் பொண்ணுங்களுக்கும் இருக்கிற ஒற்றுமை…
ரெண்டுமே ஆரம்பத்துலே ஸ்வீட்டாத்தான் இருக்கும்
போகப் போக டேஸ்ட்டே இல்லாமப் போயிடும்

Black Friday – Quick Review

படத்தைக் குறித்து மூன்று வார்த்தை

1. ஜவ்வு (அ) தூக்க மாத்திரை
2. நடுநிலை (அ) இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு மிகுதல்
3. புதுசா என்ன சொல்றீங்க (அ) சமகாலத்தவருக்கு விஷயம் ஏதுமில்லை

Kids study ‘Health’ in schools

பள்ளியில் ‘ஹெல்த்’ வகுப்பில் கற்றுக் கொடுப்பவை

1. உன் உடலைத் தொட எவருக்கும் அனுமதி கிடையாது. குறிப்பாக நண்பர்கள், உறவினர்கள்.

2. உன்னை முத்தமிட எவருக்கும் பெர்மிசன் நஹி. பெற்றோர் விதிவிலக்கு.

3. ப்ரைவசி என்றால் என்ன?

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு அம்மா, அப்பா என்ன கற்றுக் கொடுக்க பாக்கி இருக்கு 😉

Mid-week Ramblings

சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்க்கமே இருந்தும் என்ன பயன்?

என்னவெல்லாம் எழுத வேண்டும் என்று todo லிஸ்ட் போட்டு வைக்க ஆசை. எழுதப் போவதில்லை; அச்சம் வேண்டாம். டுடூ பட்டியல் மட்டும்…

1. வாண்டட் தங்கராஜ் – என்ன ஞாபகம் இருக்கும்?

2. தமிழ்.நெட், தமிழ் உலகம், அகத்தியர், ராயர் காபி க்ளப், மரத்தடி, வரிசையில் தமிழ் மணம் – அடுத்த குழுமம்

3. Gangs of Tamil Blog – வலைக்களத்தில் எனது சாட்சியம்

4. நெருங்கிய உறவினருக்கு ப்ரெயின் ட்யூமர் வந்தால் எப்படி இருக்கும்?

5. ஷிவ்ஜி – பிலானி காதலர் பூங்காவும் சரஸ்வதி கோவில் கல்மிஷங்களும்

6. அமெரிக்கத் தேர்தல் நிலமை – ஒபாமா, ஹில்லரி, மெக்கெயின், ஜியூலியானி, எட்வர்ட்ஸ்

7. ஊக்க மருந்து எடுத்துக் கொண்டு ஒலிம்பிக்ஸ் வெல்வதும், காபி உட்கொண்டு வேலையாடுவதும்

8. மணி ரத்னம் – அஞ்சலி, அக்னி நட்சத்திரம், திருடா திருடா, கன்னத்தில் முத்தமிட்டால்

9. சன் டிவி, விகடன், தமிழ்மணம், தி ஹிந்து, திருமலை கோவிந்தா – ஒற்றுமைகளும் ஒரு சில போக்குகளும்

10. உங்க படம் ஷூட் செய்ய என் வீட்டு மொட்டை மாடியா கிடைத்தது? – விக்ரம் கமல் முதல் டிபார்டட் ஜாக் நிக்கல்ஸன் வரை