இன்றைய தினமணியில் பிளஸ் டூ தமிழ் பொதுத் தேர்வுக்கான மாதிரி (Dinamani.com – TamilNadu Page) வினாக்களை கேட்டிருக்கிறார்கள்.
பதில் தெரிகிறதா?
- யாருமில்லை தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
(கூகிள் பிட் அடிக்கவும்)- பாடல் இடம் பெற்ற நூல் எது?
- இப்பாடலின் ஆசிரியர் யார்?
- ‘கள்வன்’ யார்?
- இப்பாடல் யார் யாருக்குச் சொன்னது?
- நீயடா வெதிர் நிற்பதோ மதம் பொழ கரிமேல்
நாயடா வினை நடத்துமோ?
(கூகிள் பிட் அடிக்க முடியாது)- இப்பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?
- இப்பாடலின் ஆசிரியர் யார்?
- யார் யாரிடம் கூறியது?
- ‘கரி’ என்பதன் பொருள் யாது?
- ‘காலத்தினால்’ எனத் தொடங்கும் குறளையும், ‘செயல்’ என முடியும் குறளையும் அடிபிறழாமல் எழுதுக.
- உறுப்பிலக்கணம் தருக.
- வேண்டேன்
- களையாத
- கேட்டி
- ஏகுவாய்
- பொறுத்தல்
- சொல்லுமின்
- இலக்கணக் குறிப்பு எழுதுக.
- கயன்முன்
- திரைகவுள்
- கூர்ம்படை
- படூஉம்
- சிறைப்பறவை
- வல் விரைந்து
- புணர்ச்சி விதி தருக.
- வினைத்திட்பம்
- பெருந்தேர்
- வீறெய்தி
- நிறைஉடைமை
- இற்பிறப்பு
- சின்னாள்
- பொதுவியல் திணை – சான்று தந்து விளக்குக.
- தற்குறிப்பேற்ற அணியை விளக்குக.
நிறுவனத்துக்கு கணினி வேலை நேர்காணலுக்குத் தேர்வாகுவதற்கு, முதல் படியாக பரீட்சை வைப்பார்கள். நான்கைந்து வருடங்களுக்கு ஒரு முறை சி#, ஜாவா, டேட்டாபேஸ் தேர்வுகளை எழுதி 70+ மதிப்பெண் எடுத்தால்தான் ஸ்திரமான வேலையில் நிரலி தட்ட முடியும்.
நல்ல வேளை.
வலைப்பதிவு நுழைவதற்கு இலக்கண வினாக்கள் படிக்கல்லாக இல்லை. ‘நான் படிக்கிற காலத்தில்’ என்று பெற்றோர் ஆரம்பிப்பது போல் அந்தக்கால மதிப்பெண்ணை வைத்தே காலத்தை ஓட்ட முடிகிறது.
விடை தெரியாதவர்களுக்காக மாற்றுத் வினாத்தாள்:
- தேவதை புன்னகை செய்தால்
சிறு தேய்பிறை முழு நிலவாகும்- பாடல் இடம் பெற்ற படம் எது?
- இப்பாடலின் ஆசிரியர் யார்?
- ‘தேய்பிறை’ எது?
- இப்பாடல் யார் யாருக்குச் சொன்னது?
- கடல் கொண்ட நதியோ முகம்தன்னை இழக்கும்
நான் உன்னில் கலந்தால் புதுமுகம் கிடைக்கும்- இப்பாடல் வரி இடம் பெற்ற படம் எது?
- இப்பாடலின் ஆசிரியர் யார்?
- யார் யாரிடம் கூறியது?
- ‘புதுமுகம்’ என்பதன் பொருள் யாது?
- ‘விடுகதையா’ எனத் தொடங்கும் துண்டுப்பாடலையும், ‘கனாக்கண்டேன்’ என முடியும் பாடலையும் அடிபிறழாமல் எழுதுக.
- உறுப்பிலக்கணம் தருக.
- ரஜினி விரல்
- விஜய் காலணி
- கமல் மார்பு
- அஜீத் தல
- கவுண்டமணி கால்
- புணர்ச்சி விதி தருக.
- வில்லன் – நாயகனின் தங்கை
- வில்லன் – கதாநாயகி
- கதாநாயகன் – கதாநாயகி
- கதாநாயகன் – கவர்ச்சி நாயகி
- இராம நாராயணன் – பிராணி
- ஹீரோயின் சப்ஜெக்ட் – சான்று தந்து விளக்குக.
- அரசியல் தமிழை விளக்குக.










