முக்கிய விமர்சனங்கள்:
1. Prakash’s Chronicle: Mani Ratnam’s Guru – Review
2. கில்லி – Gilli » Guru – Reviews
3. Prabhu n Ferrari » Blog Archive » Guru – Hindi Movie Review
4. Lightning Strikes Everyday: Guru: Review
இணைய சஞ்சிகைகள்:
1. Rediff.com Review – 3/5 stars
2. IndiaFM.com – Taran Adarsh Review – 4/5 stars
3. DNA Review – 3/5 stars
4. CNN IBN – Rajeev Masand Review – 4/5 stars
5. Deccan Herald: Movie Review – Guru : No Rating.
6. Andhra Cafe: Guru – Hindi Movie Review : 3.5 stars
7. Times Of India – Nikhat Kazmi Review
8. Indiatimes.com Review – 3 stars
மேலும் சில:
1. A Lover’s Journal: Guru – Movie Review (Paisa Waste!
2. Archana’s A rupee for my thoughts!
3. Wreck Tangle: Guru, Gandhi and Guns
கொஞ்சம் அசல்:
1. Remembering the Prince of Polyester — Monday, Jul. 15, 2002 — Page 1 — TIME
2. அம்பானி ஒரு வெற்றிக் கதை :: என்.சொக்கன்
பதிவு செய்ய விரும்புபவை:
கொடுத்த காசுக்கு வஞ்சனை வைக்காமல், இசை, ஒளிப்பதிவு என்று ‘பேஷ்’ போட வைத்தாலும், செண்டி போட்டு, “எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்கலாம்” வரிசையில் மணியின் மற்றொரு ரத்னம்.
‘ரெண்டு’ போன்ற படங்களில் தோன்றுவதால் மாதவன் சொதப்பினாரா? இல்லாவிட்டாலும் குளறியிருப்பாரா! ஏனோ தானோ முரண்டு செய்யும் முக்கிய கதாபாத்திரம்.
ஐஷ்வர்யா ராய் நடித்து நான் பார்த்த படங்களில் இன்னும் ‘ரெயின்கோட்’ மட்டுமே பட்டியலின் முடிவாகவும் தொடக்கமாகவும் இருக்கிறது. புருஷனை (மாமனார், மாமியாரும்தான்) பார்த்தாலாவது என்னிக்காவது நட்சத்திரம் ஆகும் வரை நட்சத்திர கேலரி மாடலிங் மட்டும் செய்யலாமே.
ஃப்ரென்ச் முத்தம் கொடுப்பது பேசுபவரின் வாயை மூட அல்ல. கிஸ் அடித்தால் காதல் வரணும் அல்லது கிக் வரணும். மாதவனும் வித்யா பாலனும் காமிரா கான்சியஸாக சவைக்கிறார்கள்.
உணர்ச்சிபூர்வமாக ‘comfort zone’ஐ விட்டு வெளியே வந்து ஆடுடா ராசா என்று ஒவ்வொரு பார்வையாளனையும் உசிப்பேற்றி, முறுக்கிவிட்டு, கொம்பு சீவி, CV தயாரிக்க அனுப்புகிறார்கள்.
அம்பானி… குரு கடைசியில் பேசி முடித்தவுடன் அமெரிக்காவில் கைத்தட்டல் தியேட்டரை பிளந்தது. முதலாளித்துவ நாடல்லவா 😉
ஞாயிறு இரவு இரண்டாம் ஆட்டத்தில் கூட அமெரிக்க திரையரங்கை நிறைத்த கூட்டம். வெளிநாடு, உள்நாடு இரண்டிலும் நகரங்களில் சூப்பர் ஹிட்?
Thank You for Smoking படம் முடிந்தவுடன் தொழில் தர்மத்திற்காக வேலை செய்பவனின் நியாய அதர்மங்களின் குழப்பம் மேலிட்ட, நம்பிக்கை கலந்த புன்முறுவல் வெளிப்படும். மேற்கண்ட அடைமொழி கலவையுடன் நிறைவைத் தரும் முக்கியமான திரைப்படம்.
சொல்ல விட்டுப் போச்சே… ‘நாயகன்’ கமலை விட, அபிஷேக் அடக்கி வாசித்து நடிக்காமல், வாழ்ந்திருக்கிறார். (அல்லது இயக்குநரின் கதாநாயகனாக சமர்த்தாக சொன்னதை செய்திருக்கிறார் என்றும் நினைக்கலாம்).
Tamil Films | Mani Rathnam | Hindi Movie | Guru | Abhishek Bhachan | Aiswarya Rai | Ambani | Madhavan