வாங்கத்தான் முடியவில்லை… புத்தகங்களை விர்ச்சுவலாகப் புரட்டலாம்…
வெகு சமீபத்தில் கண்ட புத்தகப் பதிவுகள்:
- நுனிப்புல்: 2007- புத்தக சந்தையில் என்ன புத்தகங்கள் வாங்குவது?
- விடுபட்டவை: எனக்கு பிடித்த டாப் டென் புத்தகங்கள்
- தண்டோரா – நினைத்தேன் எழுதுகிறேன் – 15: Best sellers of 2006
கொசுறு:
- The Year (2006) in Books – Sepia Mutiny
தொடர்புள்ள என்னுடைய முந்தைய பதிவுகள்:
- நத்தார் தின விழைவுப் பட்டியல்
- புது யுகத்தில் தமிழ் நாவல்கள்
- புத்தகக் குறி (மீமீ)
- சென்னை சென்றபோது பர்ஸைக் கடித்த சில புத்தகங்களின் பட்டியல்
- சென்னை செல்லாமலேக் கடித்தவை: செப். 2005
- சென்ற வருட இறுதி: புத்தகங்கள் – 2005
உஷா, பாலபாரதி பதிவுகளைப் பார்த்ததும் தோன்றிய பட்டியல் இது. சென்னை செல்லும்போது வாங்க வசதியாக இருக்கும்.
எனிஇந்தியன்.காம்(AnyIndian), நியுபுக்லாண்ட்ஸ் (New Book Lands), காமதேனு.காம் (Kamadenu.com) சென்று வாங்க ஊக்கமாக இருக்கும்.
கடந்த ஆண்டில் இரு விஷயங்களை மரியாதை கலந்த பொறாமையுடன் பார்க்கிறேன்.
அயோத்தி, ஹமாஸ், சார்லி சாப்ளின், ஷேக்ஸ்பியர், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, சல்மான் ருஷ்டி, கூகிள் மற்றும் தேடுபொறி நுட்பங்கள், லஷ்மி மிட்டல், உளவு அமைப்புக்கே அல்வா கொடுத்து வெளிப்படுத்தும் கேஜிபி, குஷ்வந்த் சிங், நேபாளம், கணினியின் பின்னணி மட்டும் அல்லாமல் – அதன் முன்னே காபந்து புரியும் பொறியாளர்களின் வாழ்க்கை சித்திரம், வால்ட் டிஸ்னி, மும்பை மாஃபியா இயங்குவிதம் என்று எண்ணிக்கையிலும் எண்ணச்செறிவிலும் எளிய எழுத்து மூலம் மிரட்டியவர் சொக்கன்.
இணையத்தில் புத்தகம் வாங்க, சஞ்சிகைகளுக்கு சந்தா கட்ட, பதிப்பாளர்களின் முழுமையான பட்டியல் தேட என்று இயங்கிவந்த எனி இந்தியன் வலையகம், பதிப்பாளராக உருவெடுத்ததும் (AnyIndian) கடந்த ஆண்டில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு. கடந்த ஆண்டில் நான்கு புத்தகங்களை வெளியிட்டார்கள். இந்த ஆண்டு ஜெயமோகன் முதல் கள்ளர் சரித்திரம் வரை (படிக்க: பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: January 2007) விரிவான தளத்தில் பல்வேறு வெளியீடுகள் இருப்பதாக சொல்கிறார்கள்.
இந்தப் பதிவுக்கு உதவிய விருபா (விருபா – முதற்பக்கம் : தமிழில் வெளிவந்த புத்தகங்களின் தகவல் திரட்டு), சிங்கை நூலகம் (NLB – Catalogue – New Arrivals), காந்தளகம் (Kaanthalakam – tamilnool.com ஆகியவற்றுக்கும் நன்றி.
முதலில் சமீபத்திய வெளியீடுகளில் கவர்ந்தவை, விழைப் பட்டியல்:
- உயிர்மை:
- விழித்திருப்பவனின் இரவு – எஸ்.ராமகிருஷ்ணன்
- உறுபசி – எஸ்.ராமகிருஷ்ணன் (நாவல்)
- மறைவாய் சொன்ன கதைகள்’ – கி.ராஜநாராயணன் & கழனியூரன் (நாட்டுப் புற பாலியல் கதைகளின் தொகுப்பு),
- ஒரு பனங்காட்டு கிராமம் – மு. சுயம்புலிங்கம் (சிறுகதை)
- ‘கு.அழகிரிசாமி கடிதங்கள்’ (கி.ராவுக்கு எழுதியது)
- பெர்லின் இரவுகள் – பொ.கருணாகரமூர்த்தி
- ராஸ லீலா (நாவல்) – சாரு நிவேதிதா
- ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள் – மணா
- இந்தியப் பிரிவினை சினிமா இந்து முஸ்லீம் பிரச்சினை – யமுனா ராஜேந்திரன்
- தற்கொலை முனை – சுதேசமித்திரன் (சிறுகதை)
- ஒரு இரவில் 21 செ.மீ. மழை பெய்தது – முகுந்த் நாகராஜன் (கவிதை)
- பாலுமகேந்திரா: கலையும் வாழ்வும் – யமுனா ராஜேந்திரன்
- தனிமையின் வழி – சுகுமாரன்
- நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள் – மு. சுயம்புலிங்கம் (கவிதை)
- பாலகாண்டம் – நா முத்துக்குமார்
- கண் பேசும் வார்த்தைகள் – நா முத்துக்குமார்
- பெருஞ்சுவைக்குப் பின்னே (சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும்) – ஜெயந்தி சங்கர்
கிழக்கு பதிப்பகம்:
- ரெண்டு – பா.ராகவன் (நாவல்)
- கே.ஜி.பி – என்.சொக்கன்
- மு.க – ஜெ. ராம்கி
- ஹிஸ்பொல்லா (பயங்கரவாதத்தின் முகவரி) – பா ராகவன்
- சர்வம் ஸ்டாலின் மயம் – மருதன்
- மும்பை : குற்றத் தலைநகரம் – என்.சொக்கன், பத்ரி சேஷாத்ரி, மருதன், முகில், ஆர்.முத்துக்குமார், ச.ந. கண்ணன்
- வல்லினம் மெல்லினம் இடையினம் – என் சொக்கன்
- பயாஸ்கோப் – அசோகமித்திரன
- வேர்ப்பற்று – இந்திரா பார்த்தசாரதி
- வைக்கம் முகமது பஷீர் – (மலையாள மூலம்) ஈ.எம்.அஷ்ரஃப் : (தமிழில்) குறிஞ்சிவேலன்
விகடன்:
- தேசாந்திரி – எஸ்.ராமகிருஷ்ணன்
- டூரிங் டாக்கீஸ் இயக்குநர் சேரன்
- எத்தனை மனிதர்கள் – சின்னக்குத்தூசி
- இவன்தான் பாலா
- காலம் – வண்ணநிலவன்
காலச்சுவடு:
- சாய்வு நாற்காலி (நாவல்) – தோப்பில் முஹம்மது மீரான்
- பொற்காலங்களும் இருண்ட காலங்களும் – பொ வேல்சாமி
- தொலைவில் (கவிதை) – வாசுதேவன்
- மிதக்கும் மகரந்தம் (கவிதை) – எழிலரசி
சாகித்திய அகாதெமி:
- தமஸ் (இருட்டு) – இந்தி நாவல் :: மூலம் – பீஷ்ம சாஹ்னி (தமிழாக்கம் – வெங்கட் சாமிநாதன்)
- பருவம் – கன்னட நாவல் :: மூலம் – எம்.எஸ். பைரப்பா (தமிழாக்கம் – பாவண்ணன்)
- இந்திய இலக்கிய சிற்பிகள் : டி எஸ் சொக்கலிங்கம் – பொன் தனசேகரன்
- இந்திய இலக்கிய சிற்பிகள் : பி எஸ் ராமையா – மு பழனி இராகுலதாசன்
- இந்திய இலக்கிய சிற்பிகள் : இறையருட் கவிமணி கா அப்துல் கபூர் – ஹ மு நத்தர்சா
- இந்திய இலக்கிய சிற்பிகள் : திரிகூடராசப்பக்கவிராயர் – ஆ முத்தையா
- இந்திய இலக்கிய சிற்பிகள் : பண்டிதமணி மு கதிரேசன் செட்டியார் – நிர்மலா மோகன்
காவ்யா:
- ஈழத்தின் புதிய தமிழ்க் கவிதைகள் – (தொகுப்பாசிரியர்) தமிழவன்
- இலக்கிய விசாரங்கள் – க நா சு கட்டுரைகள் 1
- இலக்கிய விமர்சனங்கள் – க நா சு கட்டுரைகள் 2
- பொய்த்தேவு – க நா சு (நாவல்)
தமிழினி:
- கொற்றவை – ஜெயமோகன் (நாவல்)
- யாரும் யாருடனும் இல்லை – உமா மகேஸ்வரி (நாவல்)
- ஆழி சூழ் உலகு – ஜோ டி குரூஸ் (நாவல்)
- பகடையாட்டம் – யுவன் சந்திரசேகர் (நாவல்)
- மணல்கடிகை – கோபாலகிருஷ்ணன் (நாவல்)
- தொலைகடல் – உமா மகேஸ்வரி (சிறுகதை)
- கொங்குதேர் வாழ்க்கை 1, 2 (கவிதை)
- அலைகளினூடே – (தொகுப்பாசிரியர்) அ கா பெருமாள்
- நரிக்குறவர் இனவரையியல் – கரசூர் பத்மபாரதி
வேறு:
- ஆரிய உதடுகள் உன்னது – பாமரன் (அம்ருதா)
- தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன் (விஜயா பப்ளிகேஷன்ஸ்)
- பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் – நாகரத்தினம் கிருஷ்ணா
- மாண்டொழிக மரண தண்டனை – வி ஆர் கிருஷ்ணய்யர்-கே பாலகோபால், பழ நெடுமாறன் – தியாகு (மோ ஸ்டாலின் நினைவு நூலகம்)
- நிமிர வைக்கும் நெல்லை – வழக்கறிஞர் கே எஸ் இராதாகிருஷ்ணன் (பொதிகை-பொருநை-கரிசல்)
- செடல் (நாவல்) – இமையம் (க்ரியா)
- மண்ணும் சொல்லும் மூன்றாம் உலகக் கவிதைகள் (மொழிபெயர்ப்பு) – எஸ் வி ராஜதுரை, வ கீதா
எல்லாமே வாங்கி (படித்தும்தான்) அனுபவிக்க என்றாலும், கட்டாங்கடைசியாகத் (உடனடியாகத்) தவறவிடக் கூடாத பத்து புத்தகங்கள்:
- இராக் பிளஸ் சதாம் மைனஸ் சதாம் – பா ராகவன் (கிழக்கு)
- சுப்ரமண்ய ராஜு கதைகள் (கிழக்கு)
- தேடு:கூகுளின் வெற்றிக் கதை – சொக்கன் (கிழக்கு)
- மனித உரிமைகள் – எஸ் சாந்தகுமார் :: தமிழில் – என். ராமகிருஷ்ணன் (மக்கள் கண்காணிப்பகம்)
- இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசை : கு அழகிரிசாமி – வெளி ரங்கராஜன் (சாகித்திய அகாதெமி)
- தப்புத்தாளங்கள் – சாரு நிவேதிதா (உயிர்மை)
- கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது – அ முத்துலிங்கம் (உயிர்மை)
- ஆஸ்பத்திரி (நாவல்) – சுதேசமித்திரன் (உயிர்மை)
- கண்ணீரைப் பின்தொடர்தல் – ஜெயமோகன் (உயிர்மை)
- சிறைவாழ்க்கை – தோழர் ஆர் நல்லகண்ணு அவர்களின் சிறையனுபவம் (சாளரம் – பொன்னி)
கொசுறு:
- கரித்தாள் தெரியவில்லையா தம்பீ… – பெருமாள்முருகன் (காலச்சுவடு)
படைப்பாளர் பெயரிலோ, ஆக்கத்தின் தலைப்பிலோ, வேறு பிழையிருந்தாலோ, ஒரு வரி சொல்லவும்.
Year in Review | Thamizh | Top 10 | Tamil Books | Books | Authors | Publishers | Lists










