Daily Archives: ஜனவரி 5, 2007

Railway Salad – TV Smokes – Asia Times – Telugu Dubbing – Pokkiri non-cooperation

எல்லாமே பழைய செய்தி. வசதிக்காக சேமிக்கிறேன்.

  • ரயில் நிலையங்களில் ‘காய்கறி சாலட்’: லாலுவின் புதிய அறிமுகம்: ‘ரயில்நிலையங்களில் மண் குடுவையில் தேநீர், மோர் ஆகியவை அறிமுகப்படுத்திய மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், இப்போது ‘லிட்டி சோகா’ என்ற சுவையான தின்பண்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.’

    சோக்காத்தான் இருக்கு. அப்படியே தண்டவாளத்தை விட்டு நீங்காத இருப்புப் பாதைக்கு பாதுகாப்பு மேம்படுத்தலும் செய்யலாம்.

  • டி.வி.’யில் புகை பிடிக்கும் காட்சி இடம் பெற்றால் 2 ஆண்டு ஜெயில்: ‘விதியை மீறினால் 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டு உள்ளது. 2-வது முறையாக இந்த விதி மீறல் நடந்தால் 5 ஆண்டு ஜெயில் தண்டனையுடன் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.’

    யாருக்கு சிறை? ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிறுவனருக்கா? தயாரிப்பாளருக்கா? இயக்குநருக்கா? கேபிள் இணைப்பு கொடுத்தவருக்கா? புகை பிடித்தவருக்கா? பார்வையாளருக்கா?

  • ஆசிய சாதனையாளர்கள் பட்டியலில் காந்தி, நேரு, சச்சின், தெரசா, நாராயணமூர்த்தி: ‘வெளிநாடு வாழ் இந்தியரும் இரும்பு ஆலை அதிபருமான லட்சுமி மிட்டல், சர்சைக்குரிய நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் ஆகியோரும் பெருமைக்குரிய இந்தியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

    பாகிஸ்தானின் முகம்மது அலி ஜின்னா, ஆப்கானிஸ்தானின் அகமது ஷா மசூத், சீனாவின் டேங் சியோபிங், திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமா, மியான்மர் ஜனநாயக இயக்கத் தலைவர் ஆங் சான் சூகி ஆகியோரும் ஆசிய சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.’

    கொசு‘ இல்லாமல் போச்சே 😦

  • தமிழ் டப்பிங் படங்களுக்குத் தடை: தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவு: ‘கடந்த ஆண்டு தெலுங்கில் 200 திரைப்படங்கள் வெளியாயின. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு திரைப்படங்கள் டப்பிங் செய்யப்பட்டவை.’

    சிவாஜி‘ தமிழில் மட்டுமே வெளிவருமா? ‘குரு‘??

  • விஜய் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு இல்லை: திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு: ‘ஆதி’ திரைப்படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வரையில் நடிகர் விஜய் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரின் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.’

    சென்ற டப்பிங் செய்திக்கும், இந்த ரீமேக் செய்திக்கும் சம்பந்தமில்லை.

    ‘போக்கிரி’ வருவாரா? பேக்கிரி வைப்பாரா?


| | | | | | |

Kavi Chakravarthy Ottakoothar – Audio Blog (Final Part)

முந்தைய பகுதி – ஒட்டக்கூத்தர் :: ஆர் பொன்னம்மாள்

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரின் இறுதிப் பகுதி:

செங்குந்தர் வரலாறு பாடிய கதை:

ஈட்டி எழுபது, தாட்சாயணியுடன் மூலஸ்தானத்தில் பாடிய கதை:

Subscribe Free for future posts  Add this player to my Page


| | |

Calcutta Military – DMK Power Abuse – Dhanush Lecture – Entrance Exams

கேள்விகள் பட்டுவாடா

இன்று கண்ணில் பட்ட செய்திகளைப் பகிரும் விதமாக சில துக்கடா சிந்தனை:

1. ‘சிம்பு என் மச்சான்’ – தனுஷ்:

ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பொறி’ படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய தனுஷ், “இங்கே மேடையில் உள்ள அனைவருமே இளைஞர்கள். சந்தோஷமாக இருக்கிறது. என் நண்பன் சிம்புவும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அவர் இந்த மேடையில் இல்லாதது குறையாக உள்ளது.

படத்தின் தலைப்பு ‘பொறி’ என்பதால், பொடி வைத்துப் பேசி பொறியில் சிக்க வைக்கிறாரா! சன் டிவியில் ஒளிபரப்பப் போகும், பாலச்சந்தரின் ‘பொய்’ படத்தின் பத்தாவது நாள் வெற்றி விழாவுக்கு சென்றிருந்தால் என்ன பேசியிருப்பார்?

வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி ‘இசை அமைத்தாயா? பிஜியெம் இட்டாயா? என் மாமனார் வயதொத்த நாயகர்களுக்கு முகப்பூச்சுதான் போட்டு விட்டாயா? என்று முழங்காதவரைக்கும் சந்தோசம்.

2. ‘தேர்வு இல்லை; ஆனால் நுழைவு உறுதியா?’ – அ.கி. வேங்கடசுப்ரமணியன்:

தொழிற்கல்வி படிப்பிற்கான நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்யும்போது, உயர் கல்வித்துறை அமைச்சர் ‘கிராமப்புறத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கும், நகர்ப்புறத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையே ஒரு சம ஆடுதளம் உருவாக்குவதற்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்வது அவசியமாகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நுழைவுத் தேர்வை ரத்து செய்தாலும், கிராமப்புற அரசுப் பள்ளியில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 93 ஆயிரம் மாணவர்கள், நகர்ப்புறத்தில் உள்ள அரசு சாரா பள்ளிகளில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 1.52 லட்சம் மாணவர்களுடன் தர வரிசையில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நுழைய முடியும். நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டதாலேயே இது நிறைவேறி விடுமா என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது.

ஏதோ கிரிக்கெட் ஆடுதளத்தை நினைத்துப் பார்க்க சொல்கிறார் என்று எண்ணாமல் சேரியமாய் அலசியிருக்கிறார்.

3. விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபரை ஆதரவாளர்களுடன் விடுவித்த திமுக எம்எல்ஏ:

சென்னை அயனாவரத்தில் உள்ள காவல் நிலையத்துக்குள் அத்துமீறி புகுந்த திமுக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவும், அவரது ஆதரவாளர்களும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபரை விடுவித்து சென்றனர்.

எண்ணூர் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை, திமுக அமைச்சர் கே.பி.பி.சாமியின் சகோதரர்கள் விடுவித்துச் சென்றனர்.

சினிமா பார்த்துதான் தாங்கள் கெட்டுப் போனதாக சொல்கிறார்கள்.

கத்தியின்றி, ரத்தமின்றி கைதிகளை நல்வழிப்படுத்தும் நோக்கைத் திரித்து வெளியிடும் வெகுஜன ஊடகங்களின் துஷ்பிரயோகத்தை நினைத்து ஆற்றாமையாக இருக்கிறது.

4. பொலீஸ் நிலையத்தைத் தாக்கிய இராணுவத்தினர் – கொல்கத்தாவில் சம்பவம்:

புத்தாண்டுக் கேளிக்கை கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக கொல்கத்தாவில் உள்ள ஒரு நட்டத்திர ஒட்டலுக்கு சென்ற இந்திய இராணுவத்தின் மேஜர் மற்றும் கேப்டன் தர அதிகாரிகள் இருவர் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இரண்டு அதிகாரிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு – காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதையறிந்த, அந்த இரு அதிகாரிகள் பணிபுரியும் 3 ஆவது மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த லெப் கேணல் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளும், சில சிப்பாய்களும், தானியங்கி ஆயுதங்களை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று, தடுத்து வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளை விடுவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசியல் செல்வாக்கு இல்லாவிட்டால் ஆயுதம் ஏந்த வேண்டும்.


| | | | | |