இது ஒரு ‘ஐய… இன்னும் உள்ளேன் ஹைய்யா!‘ ரக பதிவு.
ஏழெட்டு நாளாக ஃப்ளோரிடா டிஸ்னி விஜயம். தித்திப்பாக வரவேற்கும் நான்கைந்து இளவரசிகள். இந்தியாவிற்கே அழைத்து செல்லும் ‘அனிமல் கிங்டம்‘. ‘எம்மாடீ… ஆத்தாடி… அம்மம்மோய்… மாயாஜாலமா’ என்று பட்டிக்காட்டானாய் மாற்றிய ‘எப்காட்‘. ஷாரூக்கான் நடித்தும், அசுரத்தனமான பொக்கீடுகளுக்கு இடையிலும், ‘டான்‘களில் சொதப்பலாய் அரங்கேறும் மகிழுந்து துரத்தல்களை நோக்கி காறு உமிழ்ந்து கலக்கி அசத்தும் கார் சேஸ்களுடன் ‘டிஸ்னியின் எம்.ஜி.எம். ஸ்டூடியோஸ்‘.
மெய்யாலுமே மேஜிக் காட்டும் கிங்டம்.
- ‘இங்கே வேலை பார்ப்பவர்கள் எல்லோரையும் மினிமம் வேஜில் டிஸ்னி செக்காட்ட வைக்கிறது’ என்று குற்றவுணர்வை தட்டியெழுப்பும் மாற்று ஊடகவியலாளர் மிஸ்ஸிங்.
- ‘சிண்ட்ரெல்லா கதையை சொல்லி பெண் இப்படித்தான் அரசனுக்கு வாழ்க்கைப்பட வேண்டும்’ என்று நடிகைகளுடன் போஸ் கொடுக்கும்போது பின்னூட்டும் பெண்ணிஸவாதி பெருங்கூட்டத்தில் தொலைந்திருந்தார்.
- ‘மிக்கி மௌஸ், டொனால்ட் டக் ஆடை தரித்து, வேர்வையில் உழன்று, முகமூடிக்குள் கூனிக் குறுகும் மனிதனை மிதித்து, அவரின் அலங்காரத்தில் புறத்தோற்றத்தில் நொடி நேர சந்தோஷத்தில் கரையும் அமில உலகம்’ என்று நினைவூட்டுபவர்களையும் புறந்தள்ளியாயிற்று.
விரைவில் விரிவான புராணபயணக் குறிப்புகள்…
அதற்கு முன் சில வாழ்த்துகள்!
- Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!: 2006ன் சிறந்த பதிவர் முடிவுகள். வெற்றி பெற்றவர்… :: பாலாஜி மனோகரன் வெட்டிப்பயல்
- தமிழ்மண விவாதக்களம் » Blog Archive » விவாதம் ஆரம்பிக்கிறது :: நடிகர்கள் அரசியலில் பிரவேசிப்பது ஆரோக்கியமானதா? – தமிழ்மண விவாதக்களம்
- தண்டோரா – இது கண்டதை சொல்லும் – » கில்லி – 365 :: ஆண்டு நிறைவை முன்னிட்டு விருந்தினர் பதிவுகள்
- தேன்கூடு – வலைப்பூ » டிசம்பர் ‘06 போட்டி முடிவுகள் :: டிசம்பர் வலைப்பதிவுப் போட்டி
- Tamiloviam completes 5 years :: தமிழோவியத்திற்கு வயது 5
- எனக்குத் தனிமடலிட்டு, ‘எரிதம்’ என்று யாஹூ/ஜிமெயிலில் அடிபட்டு, மறுமொழிய இயலாதவர்களுக்கு ‘புத்தாண்டு வாழ்த்துக்கள்’
- சென்ற பதிவில் வாழ்த்திய அனைவருக்கும்…
வாழ்த்துகள்











என் கணினியில் வைரஸ் காய்ச்சல் கண்டதால் உடன் வாழ்த்துப் பகிரமுடியவில்லை, 2007 ஆங்கிலப் புதுவருட வாழ்த்துக்கள
தங்களுக்குன் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்களுக்கு நன்றி!!!
அனைவருக்கும் என்னோட வாழ்த்துக்கள்…வாழ்த்துக்களுக்காகவே பதிவை போட்ட உங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள் !!!!!
வாழ்த்துக்கள் பெற்றவர்களுக்கும் வாழ்த்து வழங்கியவருக்கும் வாழ்த்துக்கள்.
🙂
கானா பிரபா,
வி.பி.,
செந்தழல் ரவி,
சிறில் அலெக்ஸ்
__/\__
பாலா,
உங்கள் முத்திரை தெரியும் வாழ்த்துப் பதிவு. புத்தாண்டு வாழ்த்தைக் கூட இவ்வளவு சுவையாகச் சொன்ன உங்களுக்கு புத்தாண்டில் மகிழ்ச்சியும் வளமும் பொங்க வாழ்த்துக்கள்.
அன்புடன்,
மா சிவகுமார்
சிவகுமார்… நன்றி : )