லயோலா கல்லூரி கருத்துக் கணிப்புகளில் ரொம்ப நாளாக எனக்கு சந்தேகம் இருந்தது. தாடி வைத்து, தொப்பி போட்டு ‘சிவப்பதிகாரம்‘ ரகுவரன் மாதிரி பேராசிரியர் ‘இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி ஜெயிக்கும்’ என்று அடிக்கடி சன் டிவி செய்திகளில் ஊடக உரையாடுவார்.
முந்தாநேற்று கூட ‘இன்றைய தேதியில் ஆளுங்கட்சிக்கு அபார ஆதாரவு இருக்கிறது. நாளைக்கு ஏதாவது தேர்தல் வந்தால், திமுக முழுமையாக ஆட்சியைப் பிடிக்கும்’ என்று பேசிக் கொண்டிருந்தார்.
அதே Loyola College’s School of Media Studies நடத்திய சினிமா ரசிகர் கேள்வி பதிலின் முடிவுகள்:
அதிகம் கவர்ந்த நடிகர்:
ரஜினிகாந்த் – 15.6 %
விஜய் – 14.2 %
விஜய்காந்த் – 12.6 %
அஜீத் – 11.1 %
கமல் ஹாசன் – 8.3 %
பெரிதினும் பெரிதாக பிடித்த நடிகை:
அசின் – 14.1 %
ஜோதிகா – 11.8 %
சிநேகா – 8.9 %
த்ரிஷா – 7.5 %
சிம்ரன் – 6.1 %
சர்வேயில் பங்குபெற்றோர்: 2,945
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. : )
செய்தி: தி ஹிந்து
Tamil Films | Simran | Sneha | Rajni | Kamal | Cinema | Movies | Vijay










