Daily Archives: திசெம்பர் 14, 2006

H1-B Skil Issue & Indian Strikes

அமெரிக்க அச்சம் & அரசு ஊழியர் வேலை நிறுத்தம்

பொருளாதார வளர்ச்சி காணாத நாடுகளிடம் அவுட்சோர்ஸிங், எச்1-பி ஆவதைக் கண்டு அமெரிக்கர்கள் பயப்படுகிறார்கள்:
1. Immigration is beneficial — if it’s legal

2. Programmers Guild fears lame duck Congress will pass the Skil Bill

3. The SKIL Bill and Your Local Elementary School

மேற்கத்திய உலகைக் கண்டு இந்திய அரசு ஊழியர்கள் தங்கள் வேலைக்கு உலையோ என்று அச்சம் கொள்கிறார்கள்:
Dinamani.com – TamilNadu Page :: தொழிலாளர் விரோதப்போக்கு மற்றும் பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து பொது வேலை நிறுத்தம்: மத்திய – மாநில அரசு ஊழியர்கள், வங்கி, இன்சூரன்ஸ் துறை உள்பட பல்வேறு அரசு துறையினர், தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதால் அன்றாடப் பணிகள் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வூதியத்தை தனியார் மயமாக்க மேற்கொள்ளும் முயற்சிகளை கைவிட வேண்டும் என்பது உள்பட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

தொலைபேசி ஊழியர்கள்: இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனமும் அறிவித்துள்ளது.


அமெரிக்கா வாசிகளுக்கு ஏன் பயம்?

  1. புதிய சட்டம் அமலுக்கு வந்தால், எச்1-பியில் இருப்பவரின் துணைவரும் வேலைக்கு செல்லலாம்.
  2. அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்த மாணவர்கள் எச்1-பி கோட்டாவில் அடிபட்டு, விசாவிற்காக காத்திருக்க வேண்டாம்.
  3. நிரந்தரக் குடியுரிமை பெறும் முறை எளிதாகும்.
  4. H1-B எண்ணிக்கை அதிகரிக்கும். (310,000 ஆக உயர்கிறது).
  5. இப்பொழுதுதான் நிமிர்ந்திருக்கும் வேலைவாய்ப்புகளும், ஊக்கத் தொகைகளும், சம்பளங்களும், மேலும் உயராமல் ஸ்திரப்பட்டு விடும்.
  6. சாதாரணமாகப் படிக்கும் தங்களின் குழந்தைகள், ப்ரொஃப்ஷனல் துறைகளில் இருந்து துறவறம் பூணும் வாய்ப்பாக இந்த சட்டம் அமையும்.
  7. ஏனோதானோ என்றில்லாமல், கர்ம சிரத்தையாக பணியில் முனைப்பு காட்டினாலும், வேலை நிரந்தரம் இல்லாமல் போகும் அபாயத்திற்கு வழிவகுக்கும்.

இந்தியாவில் அரசு ஊழியர்கள் ஏன் வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என்று என்னால் கணிக்க இயலவில்லை. தொடர்பாக மனதில் எழுந்த கேள்விகள்:

  1. பன்னாட்டு வங்கி, காப்பீடு, தொலைபேசி எல்லாமே வேலை நிறுத்தம் செய்யாமல் கிடைக்கிறது. அவ்வாறு தங்கு தடையற்ற சேவை கொடுக்கும் இடத்திற்கு பயனீட்டாளர்கள் மாறிவிடுவார்களா?
  2. அவ்வாறு மாற்றிக் கொண்டால், எழும் நஷ்டம் அல்லது லாபக் குறைவிற்கு ஏற்ப ஆட்குறைப்பு அரங்கேறுமா?
  3. திறமற்ற பணியாளர்களைக் குறைக்காவிட்டால், நாளடைவில் திவாலாகும் வாய்ப்பு இருக்கிறதா?
  4. முதலீட்டாளர்களுக்கே துண்டுச்சீட்டு கொடுக்கும் நிலை ஏற்பட்டால், அங்கு வேலை பார்த்த அரசு ஊழியரின் சேமநல நிதி என்னவாகும்?
  5. இவ்வாறு பற்றாக்குறையில் இயங்கும் நிறுவனத்தை அரசு நடத்த வேண்டுமா? வரிப்பணத்தின் மூலம் ஊழியரின் ஓய்வுப்பணத்தைக் கொடுக்க வேண்டுமா?


| | | | |