Daily Archives: திசெம்பர் 5, 2006

National Repeal Day – Lets Celebrate


இன்றைய தினம் அமெரிக்கவாசிகளுக்கு மிக முக்கியமான தினம்.

டிசம்பர் 6-ஐ சொல்லவில்லை. டிசம்பர் ஐந்து.

1933-ஆம் ஆண்டு. எஃப்.டி.ஆர் என்று செல்லமாக அழைத்து, பெரிய நினைவுச்சின்னத்தையும் இரண்டாம் உலகப் போருக்காகவுமே அறியப்பட்ட ஃப்ரான்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட்டின் முனைப்பினால் இன்றுதான் மதுவிலக்கு நீங்கி, ஆல் காப்போன் மட்டுமே காய்ச்சிய சாராயம் அதிகாரபூர்வமாகப் பெருக்கெடுத்தோடியது.

அன்று முதல் பரவலான சில அறிகுறிகளும் அதற்கான தீர்வுகளும்:

1. உபாதை: குளிர்பாதங்கள்

காரணம்: பாட்டிலை சரியாகப் பிடிக்கவில்லை (காலில் பியர் கொட்டுகிறது).

நிவர்த்தி: கையில் இருக்கும் கிளாஸை நேர் செய்யவும். புட்டியின் திறந்த பாகம் மேலே பார்த்தபடியும், மூடிய பாகம், தரையை நோக்கியும் அமைந்திருத்தல் அவசியம்.

2. உபாதை: உங்கள் முகத்துக்கு நேராக ஒளிவெள்ளம் பாய்கிறது.

காரணம்: கீழே விழுந்துவிட்டீர்கள்.

நிவர்த்தி: தரைக்கும் உங்களுக்கும் உள்ள கோணம் 90 டிகிரியாக இருத்தல் அவசியம்.

EXTRA EXTRA!!!3. உபாதை: தரை மசமசவென்று இருக்கிறது.

காரணம்: காலியான கிளாஸ் வழியாக பார்க்கிறீர்கள்.

நிவர்த்தி: சரக்கை கடகடவென்று நிரப்பவும்.

4. உபாதை: தரை நடந்து, உங்களைக் கடந்து செல்கிறது.

காரணம்: நீங்கள் தரதரவென்று இழுத்து செல்லப்படுகிறீர்கள்.

நிவர்த்தி: எங்கே அழைத்துப் போகிறார்கள் என்று கேட்டு வைத்துக் கொள்ளவும்.

5. உபாதை: அருகாமையில் அமர்ந்திருப்பவர் அளவளாவினாலும், எதிரொலியாக ஒசைக் கேட்கிறது.

காரணம்: காதில் கோப்பையை வைத்திருக்கிறீர்கள்.

நிவர்த்தி: பைத்தியக்காரி போல் நடந்துகொள்வதை நிறுத்துங்கள்.

Repeal of Prohibition6. உபாதை: அறை எக்குத்தப்பாக ஆடுகிறது. அனைவரும் வெள்ளுடை தரித்திருக்கிறார்கள். பழுதுபட்ட எம்பி3-ஆக இசை மீண்டும் மீண்டும் ரிபீட் ஆகிறது.

காரணம்: நீங்கள் ஆம்புலன்ஸில் இருக்கிறீர்கள்.

நிவர்த்தி: அசைய வேண்டாம். படாத இடத்தில் பட்டுவிடப் போகிறது.

7. உபாதை: உங்கள் குடும்பத்தினர் அனைவரும் அன்னியர் போல் புதிதாக தோன்றுகிறார்கள்.

காரணம்: வீடு மாறி வந்துவிட்டீர்கள்.

நிவர்த்தி: தங்கள் உறைவிடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டுகோள் வைக்கவும்.


| |