இன்று மைக்ரோசாஃப்ட் நுட்பங்களைக் கற்றுக் கொடுக்கும் சந்திப்புக்கு செல்லும் வாய்ப்பு. கொஞ்சம் தெரிந்த விஷயங்களை நீட்டி முழக்கியதிலும், தெரியாத விஷயங்களை அவசரகதியில் ஓட்டியதிலும் போர் அடித்ததில் கிடைத்த ஞானோதய வெளிப்பாடுகள்:
- காபி/பேஸ்ட் செய்வதில் சூரர்.
- மேனேஜர் வசைபாடினால், இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடுபவர்.
- தான் எழுதியது அனைத்தும் குறையொன்றுமில்லாத குணக்குன்று என்று தீவிரமான நம்பிக்கை கொண்டவர்.
- தன்னுடைய code-ஐ, பத்து மாதம் கழித்து படித்துப் பார்த்தால், தனக்கே context புரியாதபடி, design செய்பவர்.
- தன் இஷ்டப்படி user-interface வடிவமைப்பவர். பயன்படுத்தப் போகிறவரின் வேண்டுகோளுக்கு செவிமடுப்பது போல் தோன்றினாலும், தான்தோன்றித்தனமாக அமைத்து, அதுதான் அவர்களின் விருப்பம் என்று வாதாடுபவர்.
- முந்தா நேற்று சி; நேற்று ஜாவா; இன்று சி#; நாளை ?? என்று பச்சோந்தியாய் ஜெயிக்கிற கட்சிப்பக்கம் சாய்பவர்.
- இவரின் பேச்சும் எழுத்தும் சாதாரணர்களுக்கு ஒரு எழவும் விளங்காது. மொழிபெயர்க்க tech writer அவசியம்.
- Object oriented, W3C validation, pattern, BCNF, என்றெல்லாம் வக்கணையாக வாய்கிழித்தாலும், செயலில் ஒன்றும் காட்டாமல் குழப்பமாக சமரசங்களை செய்து கொள்பவர்.
- தங்களுடைய நிரலிகளைப் பயன்படுத்துபவர், குற்றங்குறை கண்டுபிடித்து முறையிட்டால், அவர்களை விநோத ஜந்து போல் உதாசீனப்படுத்துபவர்.
- தனக்குப் பிடித்தமான மென்கலனைக் கொண்டு எழுதத் தெரியாதவரை வேற்று கிரகத்து ஆசாமி போல் அசூயை கொண்டு ஒதுக்குபவர்.
- Code-இல் பிழை சொன்னால், தனி மனிதத் தாக்குதலாக ஃபீலிங் ஆகி சுருங்கிப் போகிறவர்.
- பக்கம் பக்கமாக code எழுதினாலும், அதை பலருக்கும் கொண்டு செல்லும் விதமாக, பக்கபலமான டாகுமெண்ட் எழுத சோம்பித் திரிபவர்.
- இவர்கள் பேசும் பரிபாஷை வெளியாட்களுக்கு விளங்காது.
மீட்டிங் முடிந்து போய் விட்டது.
Tamil Blogs | Epiphany | Programmer | Species | Cult










