பொழிவுக்கும் கழிவுக்கும் ஓரெழுத்துதான் வித்தியாசம்!
எழுதறதெல்லாம் பதிஞ்சா கழிவு!!
எழுதறத சிந்திச்சா பொழிவு!!!
வாழ்க்கையில் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடலாம்!
வாழ்க்கையே கண்ணாமூச்சியா ஆகிடக்கூடாது!!
.NET செர்டிஃபேகேசன் வைத்திருந்தாலும் வேலை செய்தால்தான் வாய்க்கரிசி.
நீ எழுதறது உனக்குப் புரியலேன்னா அது பரவாயில்ல;
நீ எழுதினத, மத்தவங்களுக்கு விளக்கலேன்னா – அதுக்குப் பேரு குப்பை.
நீ எழுதறது பலருக்குப் புரியலேன்னா அதுக்குப் பேரு கவிதை;
நீ எழுதின கவிதை, விமர்சகனுக்கு விளங்கலேன்னா – அதுக்குப் பேரு இலக்கியம்.
கொல்லங்குடியில் ஊசி விற்க முடியுமா?
வலைப்பதிவில் மாற்றுக்கருத்து வாதிட முடியுமா?
கோகுலாஷ்டமிக்கு கிருஷ்ணர் கால் போடலாம்;
கிறிஸ்துமசுக்கு சாண்டா வரலாம்;
லீவு விட்டாத்தான் நான் வீட்டுக்குப் போகலாம்.
எதை வேணா கிறுக்கிட்டு, ‘இது கிறுக்கல்’னு டிஸ்கெளெய்மர் போட்டுக்கிட்டா, தமிழ்மணத்தில் இருக்கற jobless கூட சீந்த மாட்டாங்க;
அதுக்காக, யோசிச்சு அனைத்து கோணமும் பார்த்து எழுத வலைப்பதிவு, ஆயிரம் காலத்துப் பயிரா என்ன?
நல்ல இயக்குநருக்கு அழகு சரியான நேரத்தில் ‘வணக்கம்’ போட்டு, டைட்டில் கார்டு ஓட்டறது.
நல்ல மேனஜருக்கு அழகு, வேலை முடிக்காத நேரத்தில் மீட்டிங் கூப்பிட்டு, ஸ்டேடஸ் ரிப்போர்ட் கேட்காமல் இருப்பது!
நல்ல பதிவனுக்கு அழகு, ‘பதிவு எப்படா சாமீ முடியும்?’ என்று நினைக்க வைக்காமல், சுந்தரி படம் போடுவது.
Fun | Dialogue | Tamil Blog











