Daily Archives: ஒக்ரோபர் 17, 2006

Harlot’s Prerogative

தேஸிபண்டிட் – 2

‘வாக்கு கொடுத்துட்டேன் வேலு’ என்பதால், தேசிபண்டிட் காவியத்தில் இரண்டாம் பதிவு.

முதல் பதிவு: ஈ – தமிழ் :: Desipundit plans to close shop

நேற்றைய வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் ‘சுதந்திரத்தைப் அச்சுறுத்தும் நீதிபதிகள்’ (படிக்க OpinionJournal – John Fund on the Trail :: Taking the Initiative – How judges threaten direct democracy) கிடைத்தது.

WSJ நீலிக்கண்ணீர் வடித்தாலும் சொல்ல வந்த அடிநாதமான விஷயம் அர்த்தபுஷ்டியானது.

அமெரிக்காவில் குடியுரிமை என்பது வேட்பாளரை தேர்ந்தெடுப்பது தவிர மற்ற சிலவற்றுக்கும் பயன்படும்.

  • ‘தற்பாலார் திருமணம் புரிந்து கொள்ள அனுமதிக்கலாமா? கூடாதா?’,
  • ‘கருத்தடை செய்யலாமா? தடுத்து விடலாமா?’
    போன்ற சமூக அமைப்புக்கான கேள்விகளுக்கு பதில் கொடுத்து, சொந்த மாநிலத்தின் சட்டதிட்டத்தை மாற்றப் பரிந்துரைக்கலாம்.
  • ‘பியர், வைன் போன்றவை சூப்பர்மார்க்கெடுகளில் விற்கலாமா?’,
  • ‘ஞாயிற்றுக்கிழமையும் கள்ளுக்கடை திறந்து வைக்கலாமா’
    போன்ற வினாக்களும் கேட்பார்கள். (இந்த வருட மற்றும் சென்ற வருட எடுத்துக்காட்டுகளுக்கு :: Massachusetts ballot questions — 2006 Election | Boston.com | 2004 General Election Results)

    எம்.பி.க்கள் மட்டும் திட்டங்கள் தீட்டாமல், பொதுமக்களும்

  • ‘புகைபிடித்தலுக்கு கூடுதல் வரி’,
  • ‘இட ஒதுக்கீட்டில் இனி கிராமப்புற மாணாக்கர்களுக்கும் சிறப்பு அந்தஸ்து’,
  • ‘குறைந்தபட்ச ஊதியத்தை 18% உயர்த்துவோம்’
    என்று தீர்மானம் போட்டு மக்கள்மன்றத்தில் வென்றால், சட்டம் இயற்றும் வாய்ப்பு இருக்கிறது. இந்த உரிமையை ‘கனம் கோர்ட்டார் அவர்கள்’ தட்டிப் பறிக்கிறார்கள் என்கிறது அந்தக் கட்டுரை.

    கிட்டத்தட்ட தேஸிபண்டிட் (eponym போன்ற பிரயோகம்; eponym குறித்து அறிய: கேள்வியும் நானே… பதிலும் நானே) பங்களிப்பாளர்களை நீதிபதியாகக் கருதலாம். பயனருக்கு எது உகந்தது, எவ்வாறு சமூகம் அமைய வேண்டும், எப்படியெல்லாம் யோசிக்க வேண்டும், எதை கருத்தில் கொள்ளலாம், எது பொருட்படத்தக்கது, எது பொதுபுத்தியிடம் விடக்கூடாது என்று சில கருதுகோள்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை.

    ஊடகத்தில் சக்தி வாய்ந்த பொறுப்பில் இருப்பவர்களுக்கு harlot’s prerogative வந்து விடுவதாக குற்றஞ்சாட்டுவதும் இயல்பே. (Media proprietor – Wikipedia: British Prime Minister Stanley Baldwin once accused the London press of “exercising the prerogative of the harlot through the ages: power without responsibility.”)

    ‘பதவி வரும்போது பணிவு வரவேண்டும்; துணிவு வரவேண்டும் தோழா’ என்பது போல் அதிகாரத்துடன் பாரமும் பழியும் உத்தரவாதம்.


    | |

  • Desipundit plans to close shop

    தேசிபண்டிட் வலைப்பதிவிற்கு மூடுவிழா. தமிழில் இருக்கும் பதிவுகளிலிருந்து தேர்ந்தெடுத்த சுட்டிகளை துளசியும் (துளசிதளம்) டுபுக்கும் (Dubukku- The Think Tank) கோர்த்துக் கொண்டிருந்தார்கள்.

    ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் இருக்கும் எண்ணற்ற இந்திய வலைப்பதிவுகளில் மேய பொறுமை இல்லாதவர்களுக்காகத் தொடங்கப்பட்டது தேஸிபண்டிட். தமிழில் தமிழ்ப் பதிவுகள், தமிழ்மணம், தேன்கூடு, இருப்பது போல் ஆங்கிலத்தில் இம்புட்டு வசதிகள் கிடையாது.

    இடதுசாரி பதிவர்களுக்கென்று விஐபி ஒருவர் இருப்பார். வலதுசாரி, கிரிக்கெட், சினிமா, அச்சுபிச்சு, சென்னை, நிழற்படம் என்று ஆளுக்கொரு கிரவுண்ட் கட்டி பின்னூட்டத்தில் ஜமாபந்தி கச்சேரி அமர்க்களப்படும்.

    ரொம்ப காலம் முன்பு நான் சின்னப்பையனாக இருந்தபோது ப்ளாக்மேளா நடத்தி வந்தார்கள். கூத்தாக சுவாரசியமாக இருந்தது. தமிழ் வலையின் அசுவாரசியங்களை பருக்கை விடாமல் கவனித்ததினால், ‘ப்ளாக்மேளா’ (blogmela – Google Search) ஏன்/எதற்கு/எப்படி முக்கியத்துவம் இழந்து நிறுத்தப்பட்டது என்று அறியேன்.

    கிட்டத்தட்ட வலைப்பூ (site:valaippoo.yarl.net வலைப்பூ yarl – Google Search & Valaippoo) & இந்த வார தமிழ்மண நட்சத்திரம் மாதிரி ப்ளாக்மேளா நடந்து வந்தது. வாரம் ஒரு வலைப்பதிவர். தனக்குப் பிடித்த, தீர்க்கமாக எழுதப்பட்ட பதிவுகளை உரல் கொடுத்து இரண்டு வரி விமர்சனம் வழங்கி, வாசகர்களுக்கு கலங்கரை விளக்கமாக செயல்படுவார்.

    பல பதிவர்களும் சொந்தமாக எழுதுவதையே பெரிதும் விரும்பியதாலும், பற்பலரின் பல்லாயிரக்கணக்கான பதிவுகளை படித்து டெலீட் செய்ய முடியாததாலும், இந்த ப்ளாக்மேளாவில் சுணக்கம் விழுந்திருக்கும்.

    தமிழுக்கு கூகிள் தேடல் போல் (Google Blog Search: site:http://) ஆங்கிலத்திலும் டெக்னோரட்டி தேடலும் கூகிளும் மட்டுமே பெரும்பாலும் கை கொடுத்தது. காமத் போன்ற சிலரின் அட்டவணை, இற்றைபடுத்தாத இடுகைகளையும் காட்டி சோர்வுறச் செய்யும். சுன்சுனா, மைடுடே, இண்டிப்ளாக், சுலேகா, தேஸிப்ளாக்ஸ், ப்ளாக்தேசம் என்று திரட்டிகள் குட்டி போட்டு பெருகினாலும், தேசிபண்டிட் தொடங்கிய காலத்தில் இருந்த குறைபாடுகள், இவற்றில் இன்னும் களையப்படவில்லை.

    இதன் அடுத்த பரிணாமமாக பூங்கா, கில்லி – Gilli, போன்று முன்மாதிரி சேவையை தேஸிபண்டிட்காரர்கள் சுபயோகதினத்தில் துவக்கினார்கள். ஆங்கிலத்தில் பிடித்த, பார்க்கவேண்டிய, சர்ச்சைக்குள்ளான, தேமேயென்று அப்பாவியான, சோப்ளாங்கியல்லாத எழுத்துக்களாக தேர்ந்தெடுத்து கோர்க்க ஆரம்பித்தார்கள்.

    மோகம் முப்பது நாள் கணக்காக, சூட்டோடு சூடாக, இண்டிப்ளாகீஸ் (The Indibloggies » The Word is out) தேர்தலிலும் வெற்றிவாகை சூடியது. அதே தேர்தலில் (Best IndiBlog directory/service/clique) தமிழ்மணத்தை ஆயிரத்து சொச்சம் தமிழ் வாக்காளர்களே வாக்குசாவடிக்கு சென்றோ செல்லாமலோ காலைவாரி விட்டது தனிக்கதை.

    ஆசை அறுபது நாள் முடிந்ததும் அழுத்தங்கள் ஆரம்பித்தது. தேர்தலில் தில்லுமுல்லு என்னும் பொருமலுடன் மெல்ல துவங்கிய சர்ச்சைகள், ‘என்னை இணைப்பதில்லை’, ‘இந்தக் கருத்தை ஒதுக்குகிறார்கள்’ என்னும் விம்மலுடன் வெடித்தது. இன்று தேஸிபண்டிட்டிற்கு அஸ்தமனம்.

    தொடர்பான முக்கியமான சில பதிவுகளும், கருத்தைக் கவர்ந்த கருத்துகளும்:

  • A Dash of Ash » Goodbye DesiPundit: “I miss the joys of lively online discussion, whether it’s about weighty issues or silly ones. I realized that when I read blogs these days, I read them with the focus of evaluating them for DesiPundit – which is a rather horrifying realization. In short blogging is no longer a joy, and has become a chore.”
  • Recursive Hypocrisy.: Why people blog 101 – கொஞ்சம் கொணஷ்டையான கோணங்கிப் பார்வை (அதாகப்பட்டது, மாற்று கருத்தோட்டம்)
  • Shutting Down DesiPundit at Nerve Endings Firing Away – தொடங்கி வழிநடத்தியவரின் காரணங்கள், வழக்கமாக கேட்கப்போகும் வினாக்களுக்கான பதில்கள்.
  • Desipundit, No More at Psychotic Ramblings Of A Mad Man… – உறுப்பினரின் உடனடி எண்ணங்கள், மாற்று வலைப்பதிவு தொடங்குவதற்கான கால்கோள்
  • DesiPundit » Archives » Farewell – அசல் பதிவில் வெளியான அறிவிப்பு
  • No more DesiPundit at Within / Without: When DP started it was one of the first places to do everyday links. Which was a shift away from the Weekly/ (moody) Monthly Blog Melas. But over time, I was getting a little annoyed with the constant nitpicking of some select readers who accuse that DP contributors were biased.

    ரெண்டணாக்கள் போடாவிட்டால் சில்லறை தேறாது என்பதால்…

  • தனி மனித விமர்சனங்களை எதிர்கொள்வது எளிது; குழுவாக அவற்றைத் தாங்கிக் கொள்ளும்போது முரண்களும் தடைக்கற்களும் எழும்.
  • தேஸிபண்டிட் போல் முகம் தெரிந்த குழுக்களின் வலைப்பதிவுகளில் என்ன எழுதுகிறார்களோ, அதுவே குழுவின் நோக்கமாக நாமகரணமிடப்பட்டு, சாயம் தீட்டி, வண்ணம் அடிக்கப்படும்.
  • இந்த மாதிரி ஏதாவது மூடினாலோ, திறந்தாலோ, ஏப்பை சாப்பையாய் நாலைந்து பேர் ஏழெட்டு பதிவுகளை இட்டு ஆறேழு நாள்களை ஓட்டிக் கொள்வார்கள்.

    | |