தாத்தா டி.வி. கொடுக்கிறார் பேரன் சம்பாதிக்கிறார்: தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி
மதுரை, அக். 9-
முன்னாள் அமைச்சரும், தே.மு.தி.க. அவை தலைவரு மான பண்ருட்டி ராமச்சந்திரன் மதுரை வந்திருந்தார். அவர் மாலைமலர் நிருப ருக்கு பேட்டியளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-
இந்த உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட இருக்கிற மாற்றம் பிறர் மரளத்தக்க வகையில் தே.மு.தி.க. வெற்றி பெறும். மதுரை மத்திய தொகுதியை பொறுத்த வரை தே.மு.தி.க. கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த தொகுதியில் வெற்றி பெறுவது மூலம் தி.மு.க – அ.தி.மு.க.வினரின் நிலையில் எந்த மாற்றமும் வரப்போவது இல்லை. ஆனால் தே.மு.தி.க. வுக்கு தேர்தல் கமிஷன் மூலம் அங்கீகாரம் தரும் நிலை ஏற்படும்.
விஜயகாந்த் சொல்லி வரும் கருத்துக்கள் விவசாயிகளையும், படித்த இளைஞர்களையும் ஈர்க்கப்பட்டு வருகிறது.
நான் 1967-ம் ஆண்டிலிருந்து பல தேர்தல்களை பார்த்து வருகிறேன். எல்லா தேர்தல்களிலும் பணம் விளையாடியது உண்டு. ஆனால் மக்கள் பண அடிப்படையில் வெற்றி தோல்வியை தருவது இல்லை என்பதே எனது அனுபவம் ஆகும்.
கருணாநிதி வாக்காளர் களுக்கு பணம் கொடுத்து தேர்தலில் தோல்வியை கண்டவர்தான். 1980-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை சந்தித்தபோது எம்.ஜி.ஆர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஏமாற்றி உள்ளார். இதேபோல் ஜெயலலிதாவும், பணம் கொடுத்து ஏமாந்துள்ளார். நானும் கூட பணம் கொடுத்து தோல்வியை சந்தித்தவன் தான். இருக்கிறவர்கள் கொடுக்கிறார்கள். இல்லாதவர்கள் வாங்கி கொள்கிறார்கள். பணம் கொடுப்பதற்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் சம்பந்தம் இருப்பது இல்லை.
கருணாநிதி 5 முறை முதல்-அமைச்சராக இருந்தும் கொசுவை ஒழிக்க முடிய வில்லை என்று விஜயகாந்த் பேசி வருகிறார். இதற்கும் காரணம் உண்டு. உள்ளாட்சித் துறை கொசு மருந்து வாங்குகிறது. அதில் லஞ்சம் பெற்று கொண்டு நீர்த்து போன மருந்தை வாங்கி தெளிக்கும் போது கொசுவுக்கு சுகமாக இருப்பதால் அது சாவதில்லை.
எனவே மருந்து வாங்குவதில் உள்ள ஊழலை ஒழித்தாலே நம்மை எல்லாம் நோய் வாய்ப் பட வைக்கும் கொசுவை ஒழித்து விடலாம். எதிலும் அக்கரையும், நாணயமும் இருந்தால் வெற்றி முடியும். அந்த அடிப்படையில் விஜயகாந்த் சொல்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் தி.மு.க-அ.தி. மு.க.வுக்கு ஒரு பபபப என்ற தாகம் மககளிடையே இருக் கிறது. அதை மூப்பனார் முதல் ரஜினிகாந்த் வரை யாராலும் நிறைவேற்ற முடியவில்லை. புரட்சி கலைஞர் விஜயகாந்த் துணிந்து தனது சொந்த செலவில் கட்சி தொடங்கி தேர்தலிலும் போட்டியிடுகிறார். ஆகவே மக்கள் அவரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு சர்வேபடி 32 சதவீதம் பேர் தி.மு.க-அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை பிடிக்காதவர்கள் உள்ளனர். எனவே அவர்கள் தே.மு.தி.க. பக்கம் வருவதால் பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறது.
தி.மு.க. அறிவித்து உள்ள திட்டங்கள் ஏழைகளை மேலும் ஏழைகளாக ஆக்கும். வறுமையில் இருந்து அவர்களை விடுவிக்காது. 2 ஏக்கர் இலவச நிலம் போன்ற திட்டத்தை கடந்த 1974-ம் ஆண்டு அர்ஜின்டினா நாட்டில் நிறைவேற்றப்பட்டது. இலவச நிலத்தை 10 ஆண்டு களுக்கு விற்கக்கூடாது என்று ஆணையிடப்பட்டு இருந்தது.
தற்போது அங்கு நடத்திய சர்வேயில் நிலம் பெற்றவர்கள் எந்த வகையிலும் முன் னேறாமல் ஏழைகளாகவே உள்ளனர். காரணம் அவர் களுக்கு வேறு வழியில் வருமானம் இல்லாததால் வங்கி எதுவும் கடன் கொடுப்பது இல்லை. இதனால் அவர்களால் முன்னேற முடியவில்லை. எனவே இங்கும் இலவச நிலம் பெற்றவர்கள் மேலும் ஏழைகளாகவே இருப்பார்கள்.
ஏழைகளின் வறுமையை போக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது. அதற்கான நல்ல அறிவும் தேவை. எனவே விஜயகாந்த் சொல்வதை போல 25 லட்சம் பேருக்கு டி.வி. கொடுப்பதை விட அவர் களுக்கு வேலை கொடுத்தால் பிழைத்து கொள்வார்கள். வறுமையும் குறையும்.
இந்த இலவச டி.வி. கொடுப்பதை நினைக்கும்போது, `தாத்தா அரசு செலவில் கலர் டி.வி. தருகிறார். பேரன் கேபிள் இணைப்பு மூலம் வருடத்திற்கு 300 கோடி வரை சம்பாதிக்கிறார்’ என்று தான் சொல்ல தோன்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது முன் னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் உடன் இருந்தார்.











//நானும் கூட பணம் கொடுத்து தோல்வியை சந்தித்தவன் தான்.//
இந்த அறிக்கையை வைத்து இவர் மேல் நடவடிக்கை எடுக்க முடியாதா?
I don’t think that this confession is, per se, earth shattering.
Every one knows that people spend millions to get a seat allotted with a view to making good this should they come to power.
I have heard panrutti speak on a few occasions on subjects other than TN Politics.
My view, is that, in comparison to run of the mill,boring DMK jack asses like Arcot Veerasami,Durai Murugan,Anbazhagan etc, Panrutti is a more progressive and well informed politician.
Bala