உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு: லயோலா மாணவர்கள் கருத்து கணிப்பு
சென்னை, அக். 6-
மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலை யொட்டி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கருத்துக்கணிப்பு நடத்தினார்கள். கடந்த மாதம் 28-ந் தேதி முதல் கடந்த 3-ந் தேதி வரை இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப் பட்டது.
தமிழகம் முழுவதும் `பொது’ பிரிவில் இருந்து `தனி’ பிரிவுக்கு மாற்றப்பட்ட பஞ்சாயத்துக்களில் 25 பஞ்சாயத்து மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
அது போல மதுரை மத்திய தொகுதிக்குப்பட்ட 15 வார்டுகளில், ஒரு வார்டுக்கு தலா 80 பேர் வீதம் 1260 பேரி டம் கருத்து கேட்கப்பட்டது.
சிக்குன் குனியா, விலை வாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் தி.மு.க. அரசின் நலத் திட் டங்களுக்கு அனைத்து கிரா மங்களிலும் கணிசமான வரவேற்பு உள்ளது. அ.தி. மு.க.வை பொருத்த வரை அது கிராமங்களில் இன் னும் வலுவாக உள்ளது. சில கிராமங்களில் மற்ற எல்லா கட்சிகளையும் விட அ.தி. மு.க.வுக்கு அதிக ஆதரவு உள்ளது.
சில கிராமங்களில் விஜய காந்த் கட்சிக்கு கணிசமான ஆதரவு இருக்கிறது. ஆனால் பல கிராமங்களில் அந்த கட் சிக்கு ஓரிரு இளைஞர்களே உறுப்பினர்களாக உள்ள னர்.
மதுரை மத்திய தொகுதியில் அனைத்து தரப்பினரிடமும் கருத்து கணிப்பு நடத்தப் பட்டது. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் இன்று வாக்களிப்பதாக இருந்தால் யாருக்கு ஓட்டுப் போடுவீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தி.மு.க. வேட்பாளருக்கு 51.2 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரி வித்துள்ளனர். அ.தி.மு.க.வுக்கு 22.6 சதவீத வாக்காளர்களே ஆத ரவு தெரிவித்துள்ளனர்.
விஜயகாந்தின் தே.மு.தி.க. 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. 45.8 சதவீத ஓட்டு வாங்கி இருந்தது. தி.மு.க.வுக்கு தற்போது 5.4 சதவீத அளவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க. 38.2 சதவீத ஓட்டு பெற்றிருந்தது. அதில் 15.6 சதவீத ஓட்டுக்கள் மாறுவது கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
விஜயகாந்த் கட்சி கடந்த தேர்தலில் 12.8 சதவீத ஓட்டுக் களை வாங்கி இருந்தது. தற் போது அந்த கட்சிக்கு கூடு தலாக 4.8 சதவீத ஓட்டுக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. கிராமங்களில் இருந்த பொது தொகுதிகளை தனி தொகுதியாக மாற்றப்பட்டதை மக்கள் எதிர்ப்பது கருத்து கணிப்பில் தெரிய வந்துள் ளது. சுழற்சி முறையால் மக்கள் கசப்புணர்வும், காழ்ப் புணர்வும் அடைந்துள்ளனர். அரசும், அதிகாரிகளும் வேண்டும் என்றே சாதிப் பிரச்சினையை தங்கள் மீது திணித்துள்ளதாக பலரும் நினைக்கிறார்கள்.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் கிராமங் களில், “பெரும்பான்மைமக் கள் விருப்பத்துக்கு எதி ராக தேர்தலை அரசு வலுக் கட்டாயமாக திணிக்கிறது” என்ற மன நிலை மக்களிடம் நிலவுகிறது. கீரிப்பட்டியில் பெரும்பான்மை இனத்த வரிடம் கட்சி ரீதியாக பிளவு ஏற்பட்டுள்ளது.
பாப்பாபட்டியில் இரு குடும்பங்களுக்கு இடையே கவுரவப் போட்டி நிலவுகிறது. நாட்டாமங்கலத்தில் மட்டும் தேர்தலுக்கு கடும் எதிர்ப்பு எதுவும் இல்லை என்றாலும் இந்த 3 கிராமங்களிலும் பெரும்பான்மை சமூகத்தை பகைத்து கொண்டு வாழ்க்கை நடத்த இயலாது என்ற உள் பயம் தாழ்த்தப்பட்டவர்களிடம் இருப்பது கருத்து கணிப்பின் போது தெரிந்தது.
ஆய்வுக்குழு பயணம் செய்த கிராமங்களில் சிக்குன் குனியா பரவலாக இருப்பதை கண்டனர். மக்கள் இது பற்றி கூறுகையில்,
“சிக்குன் குனியாவை கட்டுப்படுத்த தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி இருக்க வேண்டும்” என்றனர்.
2 ஏக்கர் இலவச நிலம் திட்டத்துக்காக விவசாயிகளிடம் இருந்து நிலம் எடுக் கப்பட்டு வேறு நபர்களுக்கு ஒதுக்கப்பட்டது. விலை வாசி உயர்வால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு இருப் பதை ஆங்காங்கே காண முடிந்தது.
பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு நிறைய பேர் (16.5) ரஜினியை கூறி உள்ளனர். விஜயகாந்த்துக்கு (10.1) 2-வது இடமே கிடைத்துள்ளது. இந்த தகவல்களை லயோலா கல்லூரி பேராசிரியர் டாக்டர் ச.ராஜநாயகம் இன்று நிரு பர்களிடம் வெளியிட்டார்.











பாபா,
விஜயகாந்துக்கு கூடுதல் ஓட்டு கிடைக்கலாம். என்ன இருந்தாலும் சொந்த ஊர் இல்லையா? விஜயகாந்த்துக்கு கிடைக்கும் ஒவ்வொரு புனித பிம்ப ஓட்டும் அதிமுக வில் இருந்து தான் குறையும் என்பது என் கணிப்பு.
தொலைந்தது ஒரு சனியன் என்றிருக்க வேண்டியதுதான்.