Daily Archives: ஒக்ரோபர் 6, 2006

Gandhi Jeyanthi – Subramaniya Samy – RSS Sonia – Georgia – US Tamilan

பேசும் செய்தி

நன்றி: திண்ணை

Dei mezzi e dei fini -pensando a Parigi e sfidando il ridicolo-1. காந்தி ஜயந்தி தினத்தில் மது விருந்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் செல்ஜா: காந்தி ஜயந்தி தினத்தில் மது சப்ளை செய்யப்பட்ட திருமண விருந்தில் பங்கேற்றார் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா. இதன்மூலம் சட்டத்தை மீறியதற்கு தார்மிகப் பொறுப்பேற்று அவர் தமது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லோக தளம் கட்சியின் ஹரியாணா மாநிலத் தலைவர் அசோக் அரோரா கோரிக்கை விடுத்துள்ளார்.

அசோக் அரோராவைத் தொடர்பு கொண்டேன். கொட்டித் தீர்த்தார். “காந்தி இறந்த சோகத்தில் நாடே இருள் கவ்வி, சோகத்தில் கவிந்திருக்கும் தினத்தில், தனியொரு மனிதனுக்கு தண்ணியில்லையெனில் இந்த தேசத்தினை அழித்திடுவோம் என்னும் தாபம் உடையவன் நான். கல்யாணம் என்பது துன்பியல் நிகழ்வு. அங்கு மணமக்கள் வருங்காலத்தை நினைத்து மதுவருந்துவது ஒப்புக் கொள்ளக் கூடியதே. ஆனால், அந்த விழாவிற்கு என்னை அழைக்கவில்லையே என்பது எனக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது” என்று உணர்ச்சிவசப்பட்டார்.


splish, splash, i was taking a bath2. திருநாவுக்கரசர்-சுப்பிரமணியசாமி சென்ற சென்னை-மதுரை விமானத்தில் கோளாறு: சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு ஜெட் ஏர் விமானம் மதுரைக்கு புறப்பட தயாரானது. இதில், சுப்பிரமணியசாமி, சந்திரலேகா உள்ளிட்ட 36 பயணிகள் இருந்தனர். விமானம் ஓடு தளத்தில் ஓடிய போது திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டது. ஒரு மணி நேர தாமதத்திற்கு பின்பு பாதுகாப்பாக மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.

தோண்டித் துருவி விசாரித்துப் பார்த்துவிட்டேன். சுப்பிரமணிய சுவாமி நிச்சயமாக சொல்லிவிட்டார். விமானம் பழுதானதற்கோ, பயணம் தாமதமாகியதற்கோ தான் நிச்சயம் காரணமல்ல என்று பெருந்தன்மையுடன் சுவாமி மறுத்தவுடன், மூன்று நிருபர்கள் அதிர்ச்சியில் மயக்கமடைந்தனர்.

‘இந்த மாதிரி அசம்பாவிதம் நிகழலாம் என்பதாலேயே நான் அவ்வப்போதுதான் உள்ளதை உள்ளபடியே சொல்கிறேன்’ என்று சுப்பிரமணிய சாமி நகர்ந்தார்.


sleepworking3. ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கையில் பங்கேற்க ம.பி. அரசு ஊழியர்களுக்கு அனுமதியை ஆட்சேபித்து கலாமுக்கு சோனியா கடிதம்: ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கையில் மத்தியப் பிரதேச அரசு ஊழியர்கள் பங்கேற்க அந்த மாநில அரசு அனுமதியளித்துள்ளதை எதிர்த்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். குஜராத் மாநில அரசும் இதே போன்ற உத்தரவை கடந்த 2000-ம் ஆண்டில் பிறப்பித்தது. காங்கிரஸ் முறையீட்டை அடுத்து அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் தலையீட்டின் பேரில் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

இந்த உத்தரவை குறித்து பிறப்பு சான்றிதழ் பெறக் காத்திருந்த அப்பாவிசாமியிடம் கருத்து சேகரித்தோம்: “அரசு ஊழியர்கள் நடவடிக்கையில் இறங்குவார்களா? அவர்கள் எந்தக் காலத்தில் எதைத்தான் நகர்த்தி இருக்கிறார்கள்! ஒரு புழு, பூச்சி மேலே ஊர்ந்தால் கூட, ஒன்றும் அறியாமல் உறங்கும் அப்பாவிகளுக்கு அனுமதி வழங்குவதால் சேதம் எதுவும் விளையாது. இந்த அனுமதிக்கு எதிராக கடிதம் வரைந்ததற்கு பதிலாக, அரசாங்கத்திற்கான நடவடிக்கைகளில் பங்கேற்க அரசு ஊழியர்களுக்கு உத்தரவு வழங்க சோனியா கடிதம் போட்டிருக்கலாம்”.


4. ரஷிய அதிகாரிகளை ஜார்ஜியா விடுவித்தது: ஜார்ஜியா நாட்டில் உளவு பார்த்தனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு ரஷிய ராணுவ அதிகாரிகளை ஐரோப்பிய பாதுகாப்பு நிறுவனமான OSCE இடம் ஜார்ஜிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் உடனடியாக ஜார்ஜிய அதிபர் மிகைல் சாக்சவிலியைத் தொடர்பு கொண்டு பேசினார். ஒட்டுக் கேட்டதில்…

“நீ அவர்களை உடனடியாக ரஷியாவிடம் அனுப்பியிருக்கக் கூடாது. ஐந்து பில்லியன் டாலர்களை அமெரிக்காவிடமிருந்தும் ஒரு மில்லியன் டாலாராவது ப்யூடினிட்மிருந்தும் கறந்த பிறகே அனுப்பித்திருக்க வேண்டும். போனால் போகிறது… கவலைப் படாதே சகோதரா! இன்றே ஒரு புத்தகம் எழுத ஆரம்பி! நானே தலைப்பு எடுத்துக் கொடுக்கிறேன். ‘வேவு ஓநாய்களும் உள்நாட்டு குள்ள நரிகளும்’ என்று பெயர் வைத்துக் கொள். அமெரிக்கா எப்படி உன்னை மிரட்டியது, அப்கேசியா கலகம் எவ்வாறு புஸ்வாணமானது, ரஷியாவின் அணுகுண்டை ஜார்ஜியா எப்படி கண்டுபிடித்தது என்று ஒவ்வொன்றாக எழுது!”

அதற்கு மேல் அவர் சொன்ன திரைக்கதை போரடித்ததால், அமெரிக்கா ஒட்டுக்கேட்காமல் இணைப்பைத் துண்டித்து விட்டது. முழுவதும் தர இயலாமைக்கு வருந்துகிறேன்.


western travelers5. அமெரிக்க விமான நிலையத்தில் தமிழில் செல்பேசியவர் விமானத்தை விட்டு இறக்கிவிடப்பட்டார்: சியாட்டிலில் வசிக்கும் தமிழரை தொடர்பு கொண்டு பேசினோம். அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழியான ஸ்பானிஷில் கதைக்காததுதான் ஆதாரமான பிரச்சினை என்றார்.

“திராவிடக் கட்சிகள் ‘ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்’ செய்ததால், பிற மொழிகளைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை தமிழர்கள் இழந்து வருகிறோம். நான் சந்தேகத்திற்குட்பட்டதற்கு மூல காரணமாக தமிழக ஆட்சியாளர்களைக் குற்றஞ்சாட்டுகிறேன். அவர்கள் மட்டும் ஆளாவிட்டால் தூய தமிழில் பேசி, கைதாகிய பிறகும் ஆங்கிலம் கைகொடுக்காமல், சிறையில் இருந்தே கடிதம் தீட்டி காவியம் படைத்திருப்பேன்” என்று உற்சாகமாக முடித்துக் கொண்டார்.


| |

Loyola College Survey: DMK Wins & Rajni or Vijayaganth

Headline News – Maalai Malar

உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு: லயோலா மாணவர்கள் கருத்து கணிப்பு

சென்னை, அக். 6-

மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலை யொட்டி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கருத்துக்கணிப்பு நடத்தினார்கள். கடந்த மாதம் 28-ந் தேதி முதல் கடந்த 3-ந் தேதி வரை இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப் பட்டது.

தமிழகம் முழுவதும் `பொது’ பிரிவில் இருந்து `தனி’ பிரிவுக்கு மாற்றப்பட்ட பஞ்சாயத்துக்களில் 25 பஞ்சாயத்து மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அது போல மதுரை மத்திய தொகுதிக்குப்பட்ட 15 வார்டுகளில், ஒரு வார்டுக்கு தலா 80 பேர் வீதம் 1260 பேரி டம் கருத்து கேட்கப்பட்டது.

சிக்குன் குனியா, விலை வாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் தி.மு.க. அரசின் நலத் திட் டங்களுக்கு அனைத்து கிரா மங்களிலும் கணிசமான வரவேற்பு உள்ளது. அ.தி. மு.க.வை பொருத்த வரை அது கிராமங்களில் இன் னும் வலுவாக உள்ளது. சில கிராமங்களில் மற்ற எல்லா கட்சிகளையும் விட அ.தி. மு.க.வுக்கு அதிக ஆதரவு உள்ளது.

சில கிராமங்களில் விஜய காந்த் கட்சிக்கு கணிசமான ஆதரவு இருக்கிறது. ஆனால் பல கிராமங்களில் அந்த கட் சிக்கு ஓரிரு இளைஞர்களே உறுப்பினர்களாக உள்ள னர்.

மதுரை மத்திய தொகுதியில் அனைத்து தரப்பினரிடமும் கருத்து கணிப்பு நடத்தப் பட்டது. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் இன்று வாக்களிப்பதாக இருந்தால் யாருக்கு ஓட்டுப் போடுவீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தி.மு.க. வேட்பாளருக்கு 51.2 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரி வித்துள்ளனர். அ.தி.மு.க.வுக்கு 22.6 சதவீத வாக்காளர்களே ஆத ரவு தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்தின் தே.மு.தி.க. 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. 45.8 சதவீத ஓட்டு வாங்கி இருந்தது. தி.மு.க.வுக்கு தற்போது 5.4 சதவீத அளவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

கடந்த தேர்தலில் அ.தி.மு.க. 38.2 சதவீத ஓட்டு பெற்றிருந்தது. அதில் 15.6 சதவீத ஓட்டுக்கள் மாறுவது கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

விஜயகாந்த் கட்சி கடந்த தேர்தலில் 12.8 சதவீத ஓட்டுக் களை வாங்கி இருந்தது. தற் போது அந்த கட்சிக்கு கூடு தலாக 4.8 சதவீத ஓட்டுக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. கிராமங்களில் இருந்த பொது தொகுதிகளை தனி தொகுதியாக மாற்றப்பட்டதை மக்கள் எதிர்ப்பது கருத்து கணிப்பில் தெரிய வந்துள் ளது. சுழற்சி முறையால் மக்கள் கசப்புணர்வும், காழ்ப் புணர்வும் அடைந்துள்ளனர். அரசும், அதிகாரிகளும் வேண்டும் என்றே சாதிப் பிரச்சினையை தங்கள் மீது திணித்துள்ளதாக பலரும் நினைக்கிறார்கள்.

பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் கிராமங் களில், “பெரும்பான்மைமக் கள் விருப்பத்துக்கு எதி ராக தேர்தலை அரசு வலுக் கட்டாயமாக திணிக்கிறது” என்ற மன நிலை மக்களிடம் நிலவுகிறது. கீரிப்பட்டியில் பெரும்பான்மை இனத்த வரிடம் கட்சி ரீதியாக பிளவு ஏற்பட்டுள்ளது.

பாப்பாபட்டியில் இரு குடும்பங்களுக்கு இடையே கவுரவப் போட்டி நிலவுகிறது. நாட்டாமங்கலத்தில் மட்டும் தேர்தலுக்கு கடும் எதிர்ப்பு எதுவும் இல்லை என்றாலும் இந்த 3 கிராமங்களிலும் பெரும்பான்மை சமூகத்தை பகைத்து கொண்டு வாழ்க்கை நடத்த இயலாது என்ற உள் பயம் தாழ்த்தப்பட்டவர்களிடம் இருப்பது கருத்து கணிப்பின் போது தெரிந்தது.

ஆய்வுக்குழு பயணம் செய்த கிராமங்களில் சிக்குன் குனியா பரவலாக இருப்பதை கண்டனர். மக்கள் இது பற்றி கூறுகையில்,

“சிக்குன் குனியாவை கட்டுப்படுத்த தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி இருக்க வேண்டும்” என்றனர்.

2 ஏக்கர் இலவச நிலம் திட்டத்துக்காக விவசாயிகளிடம் இருந்து நிலம் எடுக் கப்பட்டு வேறு நபர்களுக்கு ஒதுக்கப்பட்டது. விலை வாசி உயர்வால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு இருப் பதை ஆங்காங்கே காண முடிந்தது.

பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு நிறைய பேர் (16.5) ரஜினியை கூறி உள்ளனர். விஜயகாந்த்துக்கு (10.1) 2-வது இடமே கிடைத்துள்ளது. இந்த தகவல்களை லயோலா கல்லூரி பேராசிரியர் டாக்டர் ச.ராஜநாயகம் இன்று நிரு பர்களிடம் வெளியிட்டார்.

‘AIADMK is the root cause for Chikun Kunya’ – Krishnasamy

Dinamani.com – TamilNadu Page

சிக்குன் குனியா பரவுவதற்கு அதிமுக அரசுதான் காரணம்: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

சென்னை, அக். 6: சிக்குன் குனியா நோய் தமிழகத்தில் பரவுவதற்கு முந்தைய அதிமுக அரசுதான் காரணம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

சென்னையில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வியாழக்கிழமை பிரசாரம் செய்து அவர் பேசியது:

தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை தமிழக முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி வருகிறார்.

  • கிலோ அரிசி இரண்டு ரூபாய்,
  • விவசாயக் கடன் தள்ளுபடி,
  • இலவச நிலம் ஆகிய வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார்.
  • திமுக ஆட்சியில்தான் சென்னையில் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டன. அதிமுக ஆட்சியில் ஒரு மேம்பாலம் கூட கட்டப்படவில்லை.

    ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2003-ம் ஆண்டு கொசுவை ஒழிக்க கமிட்டி அமைக்கப்பட்டது. மாநகராட்சி பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் கொசுவை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த கமிட்டி ஒரு நாள் கூட கூட்டப்படவில்லை. ஜெயலலிதா அரசின் குளறுபடியால்தான் கொசு பரவி சிக்குன் கனியா நோய் வந்துவிட்டது.

    இன்றைக்கு திமுக அரசு அதைக் கட்டுப்படுத்தி வருகிறது. கருணாநிதியை யாரும் எளிதில் பார்க்க முடியும். ஆனால், ஜெயலலிதாவை யாரும் பார்க்க முடியாது. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் பார்க்க முடியாததால்தான் நம் கூட்டணிக்கு வந்துள்ளார்.

    மாநில அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் நலத் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்த முடியும். அந்த வகையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.

  • West Velachery Woes makes them contest the Election

    Dinamani.com – Chennai Page

    மேற்கு வேளச்சேரி பகுதி மக்களின் குரல் சென்னை மாநகராட்சியில் ஒலிக்குமா?

    சென்னை, அக். 6: சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் 153-வது வார்டில் மேற்கு வேளச்சேரி நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சுயேச்சை வேட்பாளராக பாலா நிறுத்தப்பட்டுள்ளார்.

    இதையடுத்து பிருந்தாவன் நகர் உள்ளிட்ட மேற்கு வேளச்சேரி மக்களின் குரல் சென்னை மாநகராட்சியில் விரைவில் ஒலிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இப்பகுதி மக்களிடம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வேளச்சேரியை கிழக்கு வேளச்சேரி உள்ளிட்ட மற்ற பகுதிகளுடன் இணைக்கும் சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், தொடர்ந்து பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருவதையடுத்து இப்பகுதி மக்கள் நேரடியாக தேர்தல் போட்டியில் இறங்கியுள்ளனர்.

    சென்னை புறநகர்ப் பகுதிகளின் விரிவாக்கம் காரணமாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் உருவானது மேற்கு வேளச்சேரி. வேளச்சேரி ஏரியின் ஆயக்கட்டுப் பகுதியாக இருந்த இப்பகுதியில் தற்போது ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் உருவாகியுள்ளன. ஏரி அருகில் உள்ளதால் இங்கு குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது என இங்கு குடியேரியவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தது.

    இப்பகுதி அடைந்து வரும் வேகமான வளர்ச்சியை கருத்தில் கொண்டு மேற்கு வேளச்சேரி 1978-ல் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

    தேர்தலில் போட்டி ஏன்? இணைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அடிப்படை வசதிகள் தொடர்பான எந்த ஒரு திட்டமானாலும் நீதிமன்றம் வரை சென்றுதான் எங்களால் பெற முடிந்தது என மேற்கு வேளச்சேரி குடியிருப்போர் நலச்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளர் ராமசாமி தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறியது:

    வேளச்சேரியின் மற்ற பகுதிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இப்பகுதி தனித் தீவாக உள்ளது. இதற்காக வேளச்சேரி ஏரியின் தெற்கு பக்க கரையை ஒட்டி வேளச்சேரி பைபாஸ் சாலையுடன் இணைக்கும் வகையில் ஒரு சாலையும், இங்குள்ள ஏ.ஜி.எஸ். சாலை வழியாக பைபாஸ் சாலையுடன் இணைக்கும் வகையில் ஒரு சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தேர்தல் பிரசாரத்துக்காக இங்குவரும் அரசியல் தலைவர்களிடம் இந்த கோரிக்கையை வைக்க இப்பகுதி மக்கள் தவறவில்லை. இந்த இணைப்புச் சாலை அமைக்கும் திட்டம் அவசியம் என்று அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

    காலதாமதம் காரணமாக திட்டத்துக்கான செலவு அதிகரித்ததுடன் இப்பகுதியின் வளர்ச்சி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல, இப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமான வேளச்சேரி ஏரியின் கரை உயரத்தை ஆக்கிரமிப்பாளர்கள் நலன் கருதி அரசியல் வாதிகள் குறைத்துள்ளனர்.

    ஏரியின் கொள்ளளவு குறைந்ததால் மழைக்காலங்களில் இங்கிருந்து வெளியேறும் வெள்ள நீரால் இப்பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்படும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு மேற்கு வேளச்சேரியின் தேவைகள் குறித்த எங்களின் குரல் மாநகராட்சியில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தோம் என்றார்.

    மேற்கு வேளச்சேரியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேளச்சேரி பைபாஸ் சாலைக்கு செல்ல நேரடியான சாலை இல்லாததால் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது என தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் தெரிவித்தார். இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசியல்வாதிகள் உரிய கவனம் செலுத்தாததே இப்பகுதி மக்கள் தேர்தலில் போட்டியிட முக்கியக் காரணம் என்றார் மகாதேவன்.

    20-க்கும் மேற்பட்ட நலச் சங்கங்கள் ஆதரவு: இப்பகுதியில் உள்ள 20-க்கும் அதிகமான குடியிருப்போர் நலச்சங்கங்கள் இம் முயற்சிக்கு ஆதரவு அளிப்பதாக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பாலா தெரிவித்தார். இது தவிர இங்குள்ள மூத்த குடிமக்கள் சங்கம், உந்துநர் அறக்கட்டளை, நுகர்வோர் நல அமைப்புகள் ஆகியவையும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன என்றார்.

    சென்னை மாநகராட்சியின் 153-வது வார்டில் மொத்தம் உள்ள 95 ஆயிரம் வாக்காளர்களில் இங்கு மட்டும் சுமார் 40 ஆயிரம் பேர் உள்ளனர். இருப்பினும் கடந்த பல ஆண்டுகளாக இவர்களின் பிரதிநிதிகள் யாரும் அரசியல் கட்சி சார்பில் கூட மாநகராட்சி பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. இப்பகுதி மக்களின் தேவைகள் நிறைவேறாமல் போனதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத் தக்கது.