தி.மு.க-அ.தி.மு.க.வுக்கு தமிழகம் பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா? விஜயகாந்த் பரபரப்பு பேச்சு
திண்டுக்கல், அக். 5-
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். திண்டுக்கல்லில் நேற்று பிரசாரம் செய்த அவர் மணிக்கூண்டு அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை நான் தொடங்கினேன். கட்சி ஆரம் பித்ததும் நான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன் என்று கூறினேன். என்னுடைய கூட்டணி மக்களோடு மட்டும் தான் என்று சொன்னேன். அதன்படி எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை. மக்களோடு மட்டுமே கூட்டணி வைத்து தேர்தலை சந்தித் தேன்.
இப்போது நடக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் அதே போல்தான் நடந்து கொள்கிறேன். சட்டசபையில் 30 லட்சம் பேருக்கு டி.வி. கொடுப் போம் என்று சொன்னார்கள். வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு டி.வி. தரப் படும் என்றனர். டி.வி.க்கான மின்சார செலவும் இலவசம் என்றனர். டி.வி. கொடுத்தால் கேபிள் இணைப்பு கொடுப்பது யார் என்று கேட்டேன். பதில் இல்லை. வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் கேபிள் இணைப்புக்கு ரூ.100 எப்படி கொடுப்பார்கள். 30 லட்சம் குடும்பத்துக்கு டி.வி. கொடுப்ப தாக சொன்னவர்கள் 30 லட்சம் பேருக்கு வேலை கொடுப்பதாக சொன்னார்களா நான் என்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தேன். ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்தால் அக்குழந் தையின் பெயரில் ரூ.10 ஆயிரம் பாங்கியில் டெபாசிட் செய்வேன் என்றேன்.
இந்தத்தொகை அந்தக் குழந்தை திருமண வயதை அடையும்போது ரூ.1 லட்சமாக வரும். வீட்டுக்கு ஒரு பசு மாடு, ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்றேன். தே.மு.தி.க.வின் திட்டங்களை பார்த்து தான் 2 ஏக்கர் நிலம், இலவச கலர் டி.வி. போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.
கொசு காலையில் கடித்தால் காலரா, மதியம் கடித் தால் மலேரியா, இரவு கடித்தால் யானைக்கால் நோய் இதற்கு இடைப்பட்ட நேரத்தில் கடித்தால் சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சல் வருகிறது.
நாங்கள் கொசு மருந்து அடிக்கிறோம் என்கிறார்கள். அது கொசுக்களுக்கு எண்ணை தேய்த்து குளிப்பது போல இருக்கிறது. சிக்குன் குனியா நோய் வந்ததால் பணக்காரர் கள் தனியார் ஆஸ்பத்திரி களுக்கு செல்கிறார்கள். ஏழைகள் எங்கு செல்வார்கள் சுகாதாரத்துறையை பற்றி தி.மு.க. தலைவர் பேசவே மாட்டேன் என்கிறார்.
திண்டுக்கல்லிலும் நகராட்சி உள்ளது. ஒவ்வொரு முறையும் கொசு மருந்து தெளித்ததாக கணக்கு எழுதி வைப்பார்கள். ஆனால் அதை செய்திருப் பார்களாப என்றால் இல்லை. அரசு ஆஸ்பத்திரியின் சுவரை தொட்டு பார்த்தாலே லஞ்சம். ஒரே லஞ்சம் தான்.
கீழே படுத்தாலும், கட்டிலில் படுத்தாலும், மாத்திரை கேட்டாலும் காசு கேட்கிறார்கள். இதை விட பெரிய கொடுமை என்ன குழந்தை பிறந்திருக்கிறது? என்பதை தெரிந்து கொள்வதற்குக் கூட ரூ.100 லஞ்சம் கொடுக்கவேண்டும்.
எம்.ஜி.ஆர். இருந்திருந்தால் இவர்களால் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? தமிழ்நாடு தி.மு.க-அ.தி.மு.க.வுக்கும் பட்டா போட்டு கொடுக்கப்பட்டிருக்கிறதா?
காரைக்குடிக்கு நான் சினிமா படப்பிடிப்புக்கு சென்றிருந்தேன். அப்போது தாய்மார்கள் என்னை சந்தித்தனர். அவர்களிடம் கடந்த தேர்தலில் யாருக்கு ஓட்டு போட்டீர்கள்ப என்று கேட்டேன். அதற்கு அவர்கள் உங்களுக்குத்தான் ஓட்டு போட நினைத்திருந்தோம். ஆனால் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு பணம் கொடுத்தனர். வறுமை காரணமாக பணம் பெற்றுக் கொண்டு ஓட்டை மாற்றி போட்டு விட்டோம் என்றனர்.
50 ஆண்டுகளாக மக்களின் வறுமையை காரணம் காட்டி பணத்தை கொடுத்து ஓட்டு வாங்குகிறீர்களே. அந்த மக்களின் வறுமையை போக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்ப இந்த முறையும் ஓட்டுக்காக காசு கொடுப்பார்கள். தீபாவளி பண்டிகை வருவதால் செலவுக்கு காசு தேவைப்படும். எனவே பணத்தை வாங்கி கொண்டு ஓட்டை மட்டும் தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு போடுங்கள். எனக்கு பண ஆசை கிடையாது. கட்சி தொண்டர்களுக்கு மரியாதை வேண்டும் என்பதற்காக எனது சொந்தக் கட்டிடத்தை கட்சி அலுவலகமாக மாற்றி இருக் கிறேன். நான் பணத்துக்கு ஆசைப்பட்டிருந்தால் கடந்த தேர்தலிலேயே 5 சீட்டுகள் மட்டும் வாங்கி கொண்டு ரூ.70 கோடி பெற்றிருப்பேன். சினிமாவில் மட்டும் நான் கருத்து சொல்லவில்லை. மக்களுக்காக வாழ்கிறேன். மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறேன்.
உலகில் பிறக்கும்போது எதையும் கொண்டு வரவில்லை. போகும்போது எதையும் கொண்டு செல்ல போவதில்லை. எனது கட்சியில் இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களை நான் வன்முறையில் ஈடுபட அனுமதிப்பது இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு தாயும் தன் மகனை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆக பார்க்க வேண்டும் என்று கனவு காண் கிறார்கள். அவர்களை நான் ரவுடிகளாக மாற்ற விரும்ப வில்லை.
இம் மூன்றையும் செய்து காட்டிட தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு ஆதரவு தாருங் கள்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
கூட்டத்தில் தே.மு.தி.க. திண்டுக்கல் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், செயலாளர் ரவிக்குமார், பொருளாளர், பால சுப்பிரமணியம், திண்டுக்கல் நகர செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் ரவிச்சந்திரன், தொழிற்சங்க நிர்வாகி மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.











பத்திரிக்கைகள்தான் மூச்சுக்கு மூச்சு விஜயகாந்த் என்கிறார்கள் என்றால்…இங்குமா?:-)
விஜயகாந்த் நல்ல வெற்றிபெற வாழ்த்துக்கள்….
இது மக்களின் குமுறலாகத்தான் எனக்கு தெரிகிறது.
அன்றாட பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்.
வீட்டுக்கு ஒரு பசு மாடு,
How come Dravida Tamils have not objected to this.Why only cow,
why not a buffalo 🙂
கொசுக்களுக்கு எண்ணை தேய்த்து குளிப்பது
I thought they were using Hamam Nalangu Mavu 🙂