மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கைது
சென்னை, அக். 5: அவதூறு வழக்கில் ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். ம.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த விஜயா தாயன்பன், கொடுத்த அவதூறு வழக்கு காரணமாக அவர் கைது செய்யப்பட்டார்.
எம்.ஜி.ஆர். நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் விஜயா தாயன்பனை அவதூறாகப் பேசினாராம். இதுகுறித்து, போலீஸில் விஜயா தாயன்பன் புகார் தெரிவித்தார். இந்நிலையில், வில்லிவாக்கத்தில் புதன்கிழமை மாலை ம.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், நாஞ்சில் சம்பத் பேசினார்.
கூட்டத்துக்குப் பின் இரவு 10 மணியளவில் நாஞ்சில் சம்பத்தை போலீஸôர் கைது செய்தனர். இரண்டு பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அண்மையில் நடந்த பேரவைத் தேர்தலில் சென்னை அண்ணாநகர் தொகுதியில் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியை எதிர்த்து ம.தி.மு.க. சார்பில் போட்டியிட்டார் விஜயா தாயன்பன்.
தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அதற்குப் பின்பு, தி.மு.க.வில் சேர்ந்தார்.










