மத்தியபிரதேச எம்.பி. இடைத்தேர்தல்: வருண்காந்தியை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிடுமா?
புதுடெல்லி, அக். 3-
மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் முதல்-மந்திரி பதவிக்காக அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் விதிஷா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த மாத கடைசியில் விதிஷா எம்.பி. தொகுதி இடைத்தேர்தல் நடக்கிறது.
பாரதீய ஜனதா சார்பில் இந்த தொகுதியில் நிற்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஆனால் பாரதீய ஜனதா இன்னும் முடிவு செய்யவில்லை. வருண்காந்திக்கு டிக்கெட் கிடைத்தால் ஒருவேளை அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்துமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. வருண்காந்திக்கு டிக்கெட் கிடைக்காது என்று காங்கிரஸ் உள்ளூர் தலைவர்கள் கருதுகிறார்கள். வருண்காந்தி போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜே.பி. அகர்வால் வேட்பாளராக நிறுத்தப்படலாம். இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை நாளை முடிவு செய்கிறது.
வருண்காந்திக்கு ஒருவேளை டிக்கெட் கிடைத்தாலும் தேர்தல் பிரசாரத்தின்போது பெரியம்மா சோனியா பற்றி விமர்சிக்க மாட்டார். அவர் தனது சகோதரர் ராகுல், சகோதரி பிரியங்காவுடன் நெருக்கமாகவே இருக்கிறார்.
மேலும் வருண்காந்தி பாரதீய ஜனதாவை சேர்ந்தபோது அவருக்கு சோனியா வாழ்த்து தெரிவித்தார். இதனால் சோனியா பற்றி அவர் பிரசாரத்தின் போது எதுவும் பேசமாட்டார்.










