Madhavaram – ADMK vs DMK


Dinamani.com – TamilNadu Page

உள்ளாட்சித் தேர்தல்-2006: மாதவரம்: அதிமுக-திமுக கடும் போட்டி

சென்னை, அக். 3: உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும் சென்னை மாதவரம் நகராட்சியில் வெற்றிப் பெறுவது யார் என்பதில் திமுக, அதிமுக கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. சென்னை புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான மாதவரம் நகராட்சியில் 2001 தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் அதிமுகவினர் தலைவர் பதவியை கைப்பற்றினர்.

கடந்த 5 ஆண்டுகளில் இங்கு நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரித்து வருவதாக தற்போதைய தலைவர் வி. வீரமணி (அதிமுக) தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியது:

  • கடந்த 5 ஆண்டுகளில் மாதவரத்தில் 42 கி.மீ. நீளத்துக்கு சாலைகள் ரூ. 5 கோடியில் மேம்படுத்தப்பட்டன.
  • ரூ. 3.39 கோடியில் மழை நீர் கால்வாய்கள் மேம்பாடு, 1.50 கோடியில் மேல் நிலை குடிநீர்த் தொட்டிகள் அமைத்தது என எங்களது சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது.

    இருப்பினும் இங்கு அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒருங்கிணைந்து மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டதே மிகப்பெரிய சாதனை என்றார் வீரமணி.

    ஆனால், ஆதிமுக தரப்பு தெரிவிப்பது போல இங்கு எந்த சாதனையும் நடக்கவில்லை என திமுகவினர் மறுக்கின்றனர்.

    மாதவரத்தில் இன்றளவும் தீர்க்கப்படாத பிரச்சினைகளின் பட்டியல் சாதனைப் பட்டியலை விட பெரியதாக உள்ளது என திமுக சார்பில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர் எஸ். சுதர்சனம் தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறியது:

  • பல இடங்களில் இன்னமும் சாலைகள் குண்டும் குழியுமாகவே உள்ளன. நகராட்சியின் பெரும்பாலான இடங்களுக்கு குடிநீர் விநியோகம் இன்றளவும் கானல் நீராகவே உள்ளது என்றார் அவர்.
  • சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் மிகவேகமாக வளர்ந்து வரும் மாதவரம் நகராட்சியின் தேவையின் அடிப்படையில் கணக்கிட்டால் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் மிகக் குறைவு என இப்பகுதி மக்கள் கூறினர்.
  • பின்னூட்டமொன்றை இடுக

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.