Monthly Archives: ஓகஸ்ட் 2006

Corporate Anbumani

CORPORATE:
அரிஸ்டாடில் அன்று சொன்னது: ‘வியாபாரத்தில் வெற்றி பெற, எவருக்கும் தெரியாத ஏதோ ஒன்றை, நீ அறிந்து வைத்திருக்க வேண்டும்.’

தற்காலத்திற்கு பொருத்தமாக சொன்னால்: ‘வியாபாரத்தில் வெற்றி பெற, அடுத்தவனுக்கு என்ன தெரியும் என்பதை அறிந்து, அதற்கு மேல் கொஞ்சம் சொந்தமாய் தூவுவது!’

கார்பரேட்‘ படம் பார்க்க கிடைத்தது. நான் பேச நினைப்பதெல்லாம் நீ எழுத வேண்டும் என்பதாக ஆசாத் (படிக்க: எண்ணம்: கார்ப்பரேட் – திரைப்படம் எனது பார்வையில்) ஏற்கனவே, திரைக்கதை சுருக்கம், ரசித்த பகுதிகளை விலாவாரியாக பதிந்திருக்கிறார்.


சில நாள்களுக்கு முன் கலை வாழ்க்கையை பிரதிபலிக்கிறதா அல்லது மிகை நாடும் கலையா போன்ற உபரிக் கேள்விகளுடன் (கேட்க: கில்லி – Gilli :: Life Imitates Art – Vasanthi Podcast : Kamla Bhatt) கூடிய வாசந்தியின் சிந்தனை நினைவுக்கு வருகிறது.

படத்தில் பூச்சிக்கொல்லி கலந்த நீரை மென்பான நிறுவனம் பயன்படுத்துகிறது. போட்டியாளருக்கு விஷயம் தெரியவர, அதை ஆட்சியில் இருப்பவரிடம் சொல்லிவிடுகிறார். கடுமையான தணிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.

சண்டை சச்சரவுக்குப் பிறகு, இரு முதலைகளும் (பொருள் விளக்கம்: duopoly: Answers.com) சமாதானம் ஆகிறார்கள். நடுவண் அரசில் மாற்றுக் கட்சி கோலோச்சினாலும், மாநிலத்தில் எதிர்க்கட்சி பதவி வகித்திருந்தாலும், கட்சி பேதம் பாராமல் அரசியல்வாதிகள் கைகோர்க்கிறார்கள். கவனிக்க வேண்டியதை கொடுத்ததுடன், மசாலாப் படம் போல் தவறே செய்யாத அப்பாவியை குற்றவாளி ஆக்காமல் கூட்டுக் களவாணி மட்டும் தனியாக சிக்குகிறார்.

நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி என்றால் இந்திய அளவில் உடனடியாக நினைவுக்கு வருவது ஹிந்துஸ்தான் லீவர் (HLL) & ப்ராக்டர் & காம்பிள் (P&G). பல்லாண்டுகளாகத் தொடரும் அவர்களின் குழிபறித்தல் கதைகளை ‘கதையல்ல நிஜம்’ என்று நண்பர்கள் விவரிக்க வாய்பிளந்து வலைப்பதிவுலகை மிஞ்சும் அலுவலக அரசியல் மர்மங்களைக் கண்டு வியந்திருக்கிறேன்.

அந்த சம்பவங்களையும், மூன்றாண்டுக்கு முன் மீண்டும் முதன்முறையாக வெடித்த கோக்-பெப்ஸி நச்சுத்தன்மை விவகாரத்தையும் தன்னுடைய பாணியில் அமர்க்களமாக நம்பகத்தன்மையுடன் கொடுத்திருக்கிறார். படத்திற்கு விளம்பரம் சேர்ப்பது போல் அமைச்சர் அன்புமணியும் சான்றிதழ் (படிக்க: தமிழகத் தேர்தல் 2006: “No pesticides in Coke & Pepsi” – Anbumani) வழங்கி, இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் 180 டிகிரி வளைந்து (படிக்க: தமிழகத் தேர்தல் 2006: Anbumani does a Volte-face on Coke Pesticide Issue) மறுப்பறிக்கை விட்டு, இன்றைய செய்திகளில் என்ன சொல்லி தலைப்புப் பக்கங்களில் இடம்பிடிக்க போகிறார் என்னும் ஆர்வத்தை வளர்த்து வருகிறார்.

மிகை நாடும் கலை என்பதற்கேற்ப மடிக்கணினியில் இருந்து தொழில் ரகசியங்களைத் திருடுவது அதீத புனைவாக இருப்பதாக பல விமர்சனங்கள் வசை பாடுகிறது. இது காற்றில் காரியங்களைக் கறக்கும் காலம் (படிக்க: While you surf the Web, who’s surfing you? – Technology – International Herald Tribune). பழங்கால உத்தியை பயன்படுத்தி, சூட்சுமத்தைத் தெரிந்து கொள்வதற்கு பதிலாக, கொந்தர்களின் உதவியோடு நவீன நுட்பத்தைக் கொண்டு சந்தைப்படுத்தல் விஷயங்களை அறிவதாக காட்டியிருந்தால் சமூகப் படம் என்பதில் இருந்து விலகி அறிபுனைவாக இருக்கும் அபாயத்தை தவிர்த்திருக்கிறார்.

படத்தில் அவ்வப்போது பெரிய விஷயங்களை பேசிக்கொள்ளும் கடை நிலை ஊழியர்கள்:

‘நமக்கும் கோட் சூட்டு போட்டு இருக்கிறவங்களுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? நாம நாலு மணி வரைக்கும் நாயா, பேயா உழைச்சுத் தள்ளுவோம். நம்ம பாஸுங்க நாலு மணிக்கு அப்புறம்தான் வேலையை ஆரம்பிப்பாங்க!’

நல்ல வேளை ஐஷ்வர்யா நடித்து கெடுக்கவில்லை.

BBC – Movies – review – Corporate


| |

Anbumani does a Volte-face on Coke Pesticide Issue

Dinamani.com – Headlines Page

பெப்சி, கோக-கோலாவுக்கு நான் நற்சான்று தரவில்லை: அமைச்சர் அன்புமணி

புது தில்லி, ஆக. 24: “பெப்சி, கோக-கோலா மென்பான நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு நான் நற்சான்று வழங்கவில்லை; மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் நானும் கூட்டு சேர்ந்து, சான்று வழங்கியதாக செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் மீது மான நஷ்ட வழக்கு போடப் போகிறேன்’ என்று தில்லியில் புதன்கிழமை இரவு எச்சரித்தார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 214 மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தோம். மேலும் 500 மாதிரிகளை எடுக்கச் சொல்லியிருக்கிறோம்.

பூச்சிமருந்துக் கழிவு இருப்பதாகக் கூறிய அறிவியல்-சுற்றுச்சூழலுக்கான மையத்தின் இயக்குநர் சுனிதா நாராயணனையும், மத்திய சுகாதாரத்துறை நிபுணர்களுடன் ஆலோசனைக்கு அழைத்திருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புள்ள பிற செய்திகள்:
1. TODAY’S EDITORIAL: Karma cola- The Times of India

2. No clean chit to cola giants: Ramadoss- The Times of India

3. Financial Express – CSE report on colas wrong: Health Ministry

News Stories & Op-Eds

செய்தித் தொகுப்பு

  • இந்திய-ஆஸ்திரேலிய சமையற்கலை புத்தக எழுத்தாளர் பிரோமிளா குப்தாவுக்கு (53) ஆஸ்திரேலிய நாட்டின் ‘பெருமைக்குரியவர்’ என்ற விருது

  • இந்திய விடுதலைப் போரில் முன்னணித் தலைவர்கள் ஆற்றிய தொண்டு வெளியில் தெரிகின்றது; முகவரியே தெரியாத இன்னும் இருட்டில் கிடக்கும் சிலர் ஆற்றிய தொண்டுகளை தி. இராசகோபாலன் நினைவு கூர்கிறார் – தினமணி

  • என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களில் திலகரை பயங்கரவாதி என குறிப்பிடுவதா? மாநிலங்களவையில் எம்.பி.க்கள் கண்டனம் – தினமணி

  • ஊனமுற்றோர், மனநலம் குன்றியோர் பற்றிய குறும்படங்கள், ஆவணப் படங்கள் உருவாக்கும் எஸ். அலெக்ஸ் பரிமளம் – சென்னை லயோலா கல்லூரி காட்சி ஊடகவியல் துறை விரிவுரையாளர் – தினமணியில் சந்திப்பு & பேட்டி

  • மும்பையில் ஹிட்லர் கிராஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு உணவகத்தின் பெயரை மாற்ற வேண்டும் – பிபிசி
  • மீளுமா இந்திய வேளாண்மை? :: எஸ். ஜானகிராமன் – தினமணி

    உணவுப்பொருள், உரம், மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனம் தொடர்பான அரசின் மானியம் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து தற்பொழுது ரூ. 80,000 கோடியினை அடைந்துள்ளது. 1:4 ஆகக் காணப்படும் பொதுமுதலீட்டிற்கும், மானியத்திற்கும் இடையேயான விகித அளவினை 4:1 என அரசு மாற்றியமைக்கும்பட்சத்தில், இந்திய வேளாண்மையில் காணப்படும் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு ஏற்படலாம்.

    வர்த்தக ரீதியாக மதிப்புடைய பழங்கள், காய்கறிகள், பால் பொருள்கள் மற்றும் மீன்களின் பங்களிப்பு ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தியில் 45 சதவிகிதமாகக் காணப்படினும், இவற்றின் சந்தையாக்கல், அதிக அளவு சந்தை சார் ஆபத்துகளைப் பன்னாட்டு அளவில் எதிர்கொள்கின்றன. ஆனால் அரசின் வேளாண் தொடர்பான கொள்கைகள் அனைத்தும் அடிப்படை உணவு தானியங்களைச் சுற்றியே செயல்படுவது வேதனைக்குரியது.

  • பழமொழி சொல்வது எளிது – மின்னஞ்சலில் வந்த ஆங்கிலப் பதிவு

    இது சாம்பிள்: Actions speak louder than words./The pen is mightier than the sword.

  • ஜீவா – வாழ்க்கை சித்திரம் :: இரா. நாறும்பூநாதன் – தினமணி

  • வாக்களிக்கும் வயதை 18 ஆக குறைத்தால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என அப்போதைய அமைச்சரவை சகாக்கள் எதிர்த்தனர் :: ராஜீவ் நினைவாஞ்சலி – தினமணி
  • பிகாருக்கு ஒதுக்கப்படும் உணவு தானியங்கள், மண்ணெண்ணெயில் 80% வெளிநாட்டுக்கு கடத்தல்தினமணி

  • 4 இன் 1 “ரிவர்சிபிள்” பட்டுச் சேலை : விலை 64,650 ரூபாய் – தினமணி
  • வசந்தா கந்தசாமி : சுருக்கமான நேர்காணல் – தினமணி
  • சுற்றுப்புறத் தூய்மை – மேலான வாழ்க்கை :: யோ. கில்பட் அந்தோனி : உணவுக் கழிவுகள், மருத்துவ நிலையக் கழிவுகள், சந்தைக் கழிவுகள், காகிதக் கழிவுகள், விறகுக் கழிவுகள், மண் மற்றும் கட்டட இடிபாடுகள் என்று பிரித்து அலசுகிறார்


    | |

  • ‘P Chidambaram is acting against Reservations’ – Ramadoss

    Dinamani.com – TamilNadu Page

    இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ப.சிதம்பரம் செயல்படுகிறார்: ராமதாஸ் புகார்

    விழுப்புரம், ஆக. 23: பிற்படுத்தப்பட்டோரின் ஆதரவோடு வெற்றி பெற்ற மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தரவில்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

    உயர்கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    ஆனால் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவோடு தேர்வு செய்யப்பட்ட ப.சிதம்பரம் மட்டும் ஆதரவு தெரிவிக்காதது வருந்தத்தக்கது.

    என்.எல்.சி.யின் பங்குகளை தனியாரிடம் விற்பதை தடுத்து நிறுத்த தமிழக முதல்வர் மு.கருணாநிதி கையாண்ட விதத்தை, இட ஒதுக்கீட்டு பிரச்சினையிலும் மேற்கொண்டால் அவருக்கு ஆதரவாக பா.ம.க. நிற்கும்.

    பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த இயலாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதை படிப்படியாக 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவதை கைவிட்டு, ஒரே தவணையில் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக நடப்பு கல்வியாண்டில் இதை நிறைவேற்ற வேண்டும்.

    இதற்காக அவசர சட்டத்தை பிறப்பித்து மத்திய அரசு தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

    சமூகநீதி மற்றும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்படும் ஊடகங்களின் போக்கை கண்டித்து சென்னையில் இம்மாதம் 25ம் தேதி பா.ம.க. நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்.

    தேவைப்பட்டால் தில்லிக்கு சென்று அங்கு போராட்டம் நடத்துவோம் என்றார் ராமதாஸ்.

    "No pesticides in Coke & Pepsi" – Anbumani

    Dinamani.com – Headlines Page

    கோக், பெப்சியில் பூச்சி மருந்து இல்லை: அன்புமணி கூறுகிறார்

    புது தில்லி, ஆக. 23: அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் கோக கோலா, பெப்சி உள்ளிட்ட மென் பானங்களில், அளவுக்கு அதிகமாக பூச்சிமருந்து நச்சுக் கழிவுகள் இருப்பதாக வெளியான தகவல், நிபுணர்களின் ஆய்வில் நிரூபணம் ஆகவில்லை என்றார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி.

    மக்களவையில் செவ்வாய்க்கிழமை இந்த விளக்கத்தை அவர் அளித்தார்.

    பூச்சிமருந்துகளின் விளைவுகளை ஆய்வதற்கான அறிவியல், சுற்றுச்சூழல் ஆய்வு மையத்தின் சுனிதா நாராயணன் என்பவர் இப் பிரச்சினையை முதலில் கிளப்பினார்.

    டாக்டர் டி. கனுங்கோ தலைமையிலான ஆய்வுக்குழு இதுவரை 14 மாநிலங்களிலிருந்து 213 சாம்பிள்களை எடுத்து சோதித்தது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மிகக் குறைவாகத்தான் பூச்சிமருந்துக் கழிவு இருப்பது இச்சோதனைகளில் புலனாகிறது என்று நிபுணர் குழு கூறுகிறது.

    August 2006 Blog Contest – Uravugal

    பொன்னான வாக்கை அளிக்க: ஆகஸ்ட் வலைப்பதிவுப் போட்டி

    சென்ற மாதப் போட்டி முடிவுகளில் இருந்து, இந்த மாதப் பங்களிப்பாளர்களில் சிலருக்கு கிடைத்துள்ள வாக்குகளை பார்க்கலாம்.

    ThenKoodu.Com :: ஜூலை வலைப்பதிவுப் போட்டி

    1. இளா :: 30
    2. பினாத்தல் சுரேஷ் :: 22
    3. கானா – அபுல் கலாம் ஆசாத் :: 22
    4. பினாத்தல் சுரேஷ் :: 21
    5. ஹாஜியார் – அபுல் கலாம் ஆசாத் :: 20
    6. லக்கிலுக் :: 17
    7. குந்தவை வந்தியத்தேவன் :: 17
    8. கோவி கண்ணன் :: 16
    9. SK :: 15
    10. ஜெஸிலா :: 14
    11. கப்பி பய :: 13
    12. ஜி கௌதம் :: 12
    13. ‘மரபூர்’ ஜெய. சந்திரசேகரன் :: 11
    14. சனியன் :: 7
    15. எம் எஸ் வி முத்து :: 7
    16. செந்தில் கே :: 7
    17. மதுரா :: 7
    18. நிர்மல் :: 6
    19. வைக் :: 6

    ThenKoodu.Com :: ஜூன் வலைப்பதிவுப் போட்டி

    1. கொங்கு ராசா :: 25
    2. குந்தவை வந்தியத்தேவன் :: 13
    3. ஆசாத் :: 13
    4. உமா கதிர் :: 13
    5. எஸ்கே :: 12
    6. கோவி கண்ணன் :: 10
    7. ஹரன்பிரசன்னா :: 9
    8. லக்கிலுக் :: 8

    சுரேஷ் (பினாத்தல்), சிறில் அலெக்ஸ், குந்தவை வந்தியத்தேவன், கொங்கு ராசா, இளா ஆகியோர் முதல் நான்கு இடங்களை ஏற்கனவே பிடித்தவர்கள். இவர்கள் இம்முறையும் பங்கு பெற்றிருக்கிறார்கள். இந்த ஐவருக்கு வெற்றி பெற வாய்ப்பு அதிகம்.

    என்னுடைய பார்வையில் 2.5க்கு மேல் எடுத்த ஆக்கங்கள்:

    1. நிழல்கள்: சொக்கலிங்கத்தின் மரணம் – ஹரன்பிரசன்னா – (சிறுகதை) :: 3.5 / 4
    2. ஒரு நண்பனின் நிஜம் இது! – ஜி.கௌதம் – (சொந்தக்கதை) :: 3.5 / 4
    3. குரல்வலை : வலைகுரல் : தொலைவு – MSV Muthu – (சிறுகதை) :: 3.5 / 4
    4. லாவண்யா VS வைகுந்தன் – மாதுமை – (சிறுகதை) :: 3.25 / 4
    5. ராசபார்வை… : என்ன உறவு ? – ‘கொங்கு’ ராசா – (சொந்தக்கதை) :: 3.25 / 4
    6. உறவுகள் – ராசுக்குட்டி – (புதுக்கவிதை) :: 3.25 / 4
    7. பினாத்தல்கள்: கீழ்நோக்கியே பாயும் நீர்வீழ்ச்சி – சுரேஷ் – (சிறுகதை) :: 3.25 / 4
    8. சாயல் ஜெயந்தி சங்கர் – (சிறுகதை) :: 3 / 4
    9. அஞ்சல் நெஞ்சுல (கானா) – அபுல் கலாம் ஆசாத் – (ஒலிக்கவிதை) :: 3 / 4
    10. உறவும் பிரிவும் – ராசுக்குட்டி – (சிறுகதை) :: 3 / 4
    11. எனக்கேற்ற தமிழச்சிகள்: அன்புள்ள அம்மாவுக்கு – மதுரா – (சிறுகதை) :: 3 / 4
    12. எண்ணம்: திரைச்சீலை – அபுல் கலாம் ஆசாத் – (சிறுகதை) :: 2.75 / 4
    13. செப்புப்பட்டயம் :: தெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரி – மோகன்தாஸ் (குந்தவை வந்தியத்தேவன்) – (சிறுகதை) :: 2.75 / 4
    14. தேடித்..தேடி..: மருந்து – Senthil Kumar – (சிறுகதை) :: 2.75 / 4
    15. ஜெண்டில்மேன் – சோம்பேறி பையன் – (சிறுகதை) :: 2.75 / 4
    16. தேன்: கெடா – சிறுகதை – சிறில் அலெக்ஸ் – (நாடகம்) :: 2.75 / 4
    17. பூனைக்குட்டிகள் – தேன்கூடு – உறவுகள் சிமுலேஷன் – (சிறுகதை) :: 2.5 / 4
    18. பொன்னியின் செல்லம்மா …! – கோவி.கண்ணன் – (சிறுகதை) :: 2.5 / 4
    19. தம்பி: களத்து வீடு – : உமா கதிர் – (சிறுகதை) :: 2.5 / 4
    20. தேன்: உறவுகள் – சிறில் அலெக்ஸ் – (சிறுகதை) :: 2.5 / 4

    இது தவிர நான் வாக்களிக்க விரும்புபவை:

    1. பொன்னியின் செல்வன் ‘நியோ’வின் அம்மா குறித்த பதிவு – ‘மரபூர்’ ஜெய. சந்திரசேகரன்
    2. ‘உதவும் கரங்கள்’ வித்யாசாகர் – ‘மரபூர்’ ஜெய. சந்திரசேகரன் – (பதிவு)
    3. எதிர்மறை நியாயங்கள் – நிர்மல் – (சிறுகதை) :: 1.5 / 4
      • போட்டி தொடக்கத்திலேயே வெகு வேகமாய் ஆர்வமாய் ஆக்கங்களை அனுப்பியவர்
      • இவர் எழுதியவற்றுள் பிடித்த கதை
    4. தமிழ்த் திரைப்படங்களின் தலைப்பிலே உறவுகள் – சிமுலேஷன் – (பட்டியல்) :: 2 / 4
      • சினிமா சம்பந்தமாக ஒரு ஓட்டு கூட போடா விட்டால், தொலைக்காட்சி வெடித்து சிதறிவிடும் என்னும் சாபம் கொடுத்துக் கொள்வேன்
    5. சிதறல்கள்: உறவுகள் சுகம் – அனிதா பவன்குமார் – (புதுக்கவிதை) :: 2 / 4
      • ஏதாவது ஒரு கவிதைக்காவது வாக்களிக்கலாம் என்று விரும்புவதால், வந்தவற்றுள் பிடித்த ஒன்று
    6. கொல்ட்டி – வெட்டிப்பயல் – (சிறுகதை) :: 2 / 4
      • படிக்கும் போது கிளர்ச்சியாக மலரும் நினைவுகளை மீட்டியதற்காக
    7. ஏன் எனக்கு மட்டும் – ஜெயக்குமாரன் மயூரேசன் – (சிறுகதை) :: 2 / 4
      • கிட்டத்தட்ட மேற்சொன்ன அதே காரணத்திற்காக
      • அரிதாக கிடைக்கும் ஈழத்தமிழ் நடை
    8. பொருனைக்கரையிலே: அம்மாவும் மாமியாரும் கமலம்மாவும் – மானு (yezhisai) – (சொந்தக்கதை) :: 1.5 / 4
      • எதார்த்தமாக அண்டை வீட்டாருடன் அளவளாவுவது போன்ற பாசாங்கற்ற விவரிப்புகளில் பல பதிவுகள் இட்டு போட்டியை குஷிப்படுத்தியவர்
    9. எண்ணம்: உறவுகளே! (கட்டளைக் கலித்துறை) – (மரபுக்கவிதை) :: 2 / 4
    10. உறவில்லாத உறவு – ஜெஸிலா – (புதுக்கவிதை) :: 1.5 / 4
    11. உறவுகளும் ஒற்றுமைகளும் :: சிவமுருகன் – (புதுக்கவிதை) :: 2 / 4

    கடைசியாக சில தேர்வுகள்:

    1. சிறந்த சிறுகதை
      • சொக்கலிங்கத்தின் மரணம் :: ஹரன்பிரசன்னா &
      • சாயல் :: ஜெயந்தி சங்கர்

    2. சிறந்த சொந்தக்கதை – என்ன உறவு :: ‘கொங்கு’ ராசா
    3. சிறந்த வலைப்பதிவு நனவோடை – ஒரு நண்பனின் நிஜம் இது :: ஜி.கௌதம்
    4. ஈழத்தமிழில் சிறந்த புனைவு – லாவண்யா VS வைகுந்தன் :: மாதுமை
    5. சிறந்த புதுக்கவிதை – உறவுகள் :: ராசுக்குட்டி
    6. சிறந்த வித்தியாசமான ஆக்கம் – அஞ்சல் நெஞ்சுல (கானா) :: அபுல் கலாம் ஆசாத்
    7. சிறந்த நகைச்சுவை கதை – ஜெண்டில்மேன் :: சோம்பேறி பையன்
    8. சிறந்த நாடகம் – கெடா :: சிறில் அலெக்ஸ்

    பொன்னான வாக்கை அளிக்க: ஆகஸ்ட் வலைப்பதிவுப் போட்டி | போட்டியில் கலந்து கொள்ளும் பதிவுகள் குறித்த பதிவுகள்


    | |

    TK-TO Contest: #71 – #84 : Snap Reviews

  • கொல்ட்டிவெட்டிப்பயல்

    (சிறுகதை) மதிப்பெண் – 2 / 4

    தமாசு: ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டோம்…

    படைப்பாளர், தமிழ் சினிமா நிறைய பார்த்து கெட்டுப் போயிருப்பது தெரிகிறது. பேச்சு நடையில் இருப்பதால், எது இலக்கண/எழுத்துப் பிழை என்று குற்றஞ்சாட்ட முடியவில்லை. கதிர் படத்தை ரசித்த வயது தாண்டி விட்டதால், காதல் கவிதை போன்ற chick flick கதையோடு விலகியே நகர்கிறேன். சமீபத்தில் இதே போன்ற பின்னணியைக் கொண்ட (சவுண்ட் பார்ட்டி: நிஜமல்ல, கதை-3!) செண்டிமெண்ட் ரசமில்லாத துள்ளல் விவரிப்போடு – மேலும் ஒன்ற முடிந்தது.

    சம்பவங்களில் அழுத்தம் இல்லை: -1;
    ஆதிகாலம் முதல் இளைஞர்களின் ஒரு தலை, தலையணைப் புதையல்: -1;

  • திருத்தவே முடியாதுசனியன்

    (சிறுகதை) மதிப்பெண் – 1.5 / 4

    எழுத்துப்பிழைகள் (போக்குவரரத்து) உண்டு. சிறுகதை கேட்டால், ஒரு உறவின் வாழ்க்கையை சுருக்கி சொல்கிறார். தீவிரமான விவரிப்பில் நகர்வதற்கு நடுவில் சடாரென்று ‘கஜினியின் கல்பனாவைப் போல’ என்னும் கையாளல் வீரியத்தை நீர்க்க செய்து, கஜினி மறந்த எனக்கு சினிமா ஜிலிர்ப்பை கொடுத்து, பாசத்தை திசை திருப்புகிறது.

    முடிவில் நச் கையாளல் +1.5

  • உறவுகள் நூறுசிமுலேஷன்

    (பட்டியல்) மதிப்பெண் – 1 / 4

    சிறப்பான ஐடியா. ஆனால், கணினியின் வடிவமைப்பு சாத்தியக்கூறுகளை ஆராயமல், நேரடியாக 1,2,3… போடுவது கூகிள் கடைக்கண் அருளினால், என்றாவது எவருக்காவது பயன்படலாம். Family chart என்பது போல் படம் போட்டு, குடும்பத்தை மரக்கிளைகளாகக் கொண்டு வந்திருந்தால் பாராட்டி இருக்கலாம். ஃப்ளாஷ், ஜாவாஸ்க்ரிப்ட் போன்ற நுட்பங்களை உபயோகித்து, வித்தை காட்டியிருந்தால், குரங்கிலிருந்து பிறந்தவன் என்பதற்கு ஆதாரமாக ஆடியிருக்கலாம். தற்போதைக்கு ‘தெரிந்த விஷயம்தானே?! அப்புறம்… வேறென்ன?’ என்ற கேள்வியோடு அன்றாட அட்டெண்டன்ஸ் பதிவாக மறைந்து விடுகிறது.

  • அந்த உறவுக்கு பெயரென்ன? ‘மரபூர்’ ஜெய. சந்திரசேகரன்

    (சொந்தக்கதை) மதிப்பெண் – ? / 4

    கனவுகளுடன் நம்பிக்கைகளுடன் வலம் வந்த பொன்னியின் செல்வன் நியோ‘ -வின் அம்மா குறித்த பதிவு. சந்திப்பை ஒலி வடிவிலோ, இன்னும் விரிவாகவோ, புகைப்படங்களுடன் நனவோடையாகவோ மாற்றாதது (படைப்பாக பார்த்தால்) ஏமாற்றம்.

    மதிப்பெண் கொடுக்க இயலாது. வளர்த்து ஆளாக்கியவனை இழந்து தவிப்பவருக்கு, ஆறுதலாக வாக்களிக்க மட்டுமே முடியும்.

  • எதிர்மறை நியாயங்கள்நிர்மல்

    (சிறுகதை) மதிப்பெண் – 1.5 / 4

    ஓன்னைய பதினெட்டு வருஷம் வளத்ததுக்கு இதான் பலனாங்றாரு. நான் என்ன பேங்க் டெப்பாஸிட்டா மெச்சூர் ஆனதும் அவருக்கு வருமானம் கொடுக்கறதுக்கு.

    தலைப்பிலேயே ‘எதிர்மறை’ என்று வெளிப்படையான நீதியோடு அமைத்து, ‘நேர்மறை எது!?’ என்று ஆசிரியர் நினைக்க சொல்வது பலவீனம். ‘நேத்திக்கு இவங்கப்பா எங்கப்பாட்ட புலம்பினதும்’ என்று ‘நேர்மறை’ சங்கதியும் எங்கோ ஸ்வாஹா ஆகிவிட்டது. இத்தனூண்டு மேட்டருக்கு இவ்வளவு கதாபாத்திரங்கள் தேவையில்லை. கச்சிதமாக வந்திருந்தால் மனதில் பதிந்திருக்கும்.

  • உறவுகள் – நட்புஇளா

    (கவிதை) மதிப்பெண் – 2.25 / 4

    நன்றாகத்தான் இருக்கிறது. ‘முஸ்தஃபா… முஸ்தஃபா’ என்று கல்லூரி நட்பை யதார்த்தமாக சொல்கிறார். வித்தியாசமாக எங்குமே முத்திரை வரியோ, நிகழ்வோ இல்லாமல் வெறுமனே முன்னேறி செல்வது பலவீனம்.

  • ஏன் எனக்கு மட்டும்ஜெயக்குமாரன் மயூரேசன்

    (சிறுகதை) மதிப்பெண் – 2 / 4

    துள்ளலான நடை. மீண்டும் ஒரு காதல் கதை. அதே ரம்மியங்களை, அதே கிளுகிளுப்புடன், அதே ஆண்-பெண்-கல்லூரி-நட்பு என்று படித்து சோர்வுற்றதால்… ஐய்யோ… எனக்கு முடி நரைச்சுடுத்தே மம்மீ!

  • தாயுமானார் அவரே தந்தையுமானார் ‘மரபூர்’ ஜெய. சந்திரசேகரன்

    (பதிவு) மதிப்பெண் – ? / 4

    உதவும் கரங்கள் வித்யாசாகர் குறித்த பதிவு. என்னுடைய ‘மிக விரும்பும் சேவை அமைப்பு’களுள் ஒன்று. அயர்ச்சி ஏற்படாத தொடரும் பரிவு, சர்ச்சைகளைக் களைந்து காலத்திற்கேற்ப புதிய திட்டங்கள், தேவையான அளவு மைக்ரோ மேலாண்மை, நிதி பெற நவீன நுட்பங்களைக் கையாளுதல் என்று உதாரண மனிதராக வாழ்பவரை இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம்.

    எழுதப்பட்ட நோக்கத்திற்காக வாக்கு போட வேண்டும்.

  • தேன்கூடு போட்டிக்காக / ஒரு நண்பனின் நிஜம் இது! ஜி.கௌதம்

    (சொந்தக்கதை) மதிப்பெண் – 3.5 / 4

    தேர்ந்த பத்திரிகையாளருக்குரிய சொற்சிக்கனம். தெரியாத திரைமறைவு விஷயங்களுக்கும் சொந்தக் கதைக்கும் சுவாரசியமான முடிச்சு கொடுத்து உள்ளிழுக்கும் லாவகம். வெள்ளித்திரையாக 144 பக்கங்களில் புரட்டியதற்கு ‘Behind the scenes’ & ‘Making of விகடன்’ கொடுக்கிறார். உணர்ச்சிவசப்பட்ட சினிமா வாடையடித்த இறுதிப்பகுதி, என்றாலும், சுயமுன்னேற்றம், அலுவல் நெளிவு சுளிவு, வாழ்க்கைப் பயணம், கல்வியும் வேலையும் என்று சிதறலான எண்ணங்களை கவனத்தை சிதறடிக்காமல் சுவையாகக் கொடுக்கிறார்.

    எடுத்துக் கொண்ட எக்ஸ்க்ளூசிவ் களம் +1;
    அதை சொன்ன விதம் +1;
    உறவுக்கு கொடுத்த கனம் +1;
    பல தளங்களுக்கான விஷயத்தை ஒரே பதிவில் அர்ப்பணித்ததற்காக -0.25;
    சில இடங்களில் தேவைக்கதிமான ‘நேம் ட்ராப்பிங்’ -0.25;

  • தமிழ்த் திரைப்படங்களின் தலைப்பிலே உறவுகள்சிமுலேஷன்

    (பட்டியல்) மதிப்பெண் – 2 / 4

    சும்மா… ஜாலியா படிக்கலாம். விட்டதை ஹரன்பிரசன்னா நிரப்பியது போல் மேலும் தொடுக்கலாம்.

  • லாவண்யா VS வைகுந்தன்மாதுமை

    (சிறுகதை) மதிப்பெண் – 3.25 / 4

    அறியாத நடைக்குள் புகும்போது ‘புரியாதோ’ என்னும் பயம் மேலிடுவதை, களையும் வகையில் மொழி அமைந்துள்ளது மிகப் பெரிய பலம். உரையாடலில் ருசித்த/ஒன்றிய/அறிந்த பகுதிகளைத் தர விரும்பினால் முழுக்கதையும் தர நேரிடும் அளவு நேர்த்தி. கதை அமைப்பு மேலும் வலு சேர்க்கிறது. அழகாக நகரும் கதையில், முடிவு மட்டும் கொஞ்சமாக பிசிறு தட்டி கோர்வையில் தடுமாறுவது மட்டும் குறை.

    எடுத்துக் கொண்டதை விவரித்த நேர்த்தி +1;
    மொழிவளம் +1;
    கதை அமைப்பு +1;
    கள விவரிப்பு & சம்பாஷணை & எதார்த்தம் +1;
    கதையை விட்டு விலகி தொக்கி நின்ற முடிவு -0.75

    இன்னும் ஒரு பருந்துப் பார்வையுடன் தேன்கூடு – தமிழோவியம் போட்டி படைப்புகளை விமர்சித்தலுக்கு மங்களம் பாடப்படும். (அடுத்த மாதப் படைப்பாளிகள் என்சாய்… நிச்சயமாய் நுணுக்கி நுணுக்கி குற்றங்குறை சினிமாஸ்கோப் போட்டு படுத்த மாட்டேன் என்று அரசியல் வேட்பாளராய் வாக்குறுதி அளிக்கிறேன்.) எவரெவருக்கு என்னுடைய பொன்னான வாக்குகள், எவர் முதல் மூன்றைப் பிடிக்க விரும்புகிறேன், யார் வெற்றி பெறக்க்கூடும் போன்ற ஜாதகத்துடன் அழகு பார்க்க எண்ணம். இன்ஷா பதிவர்.

    போட்டியில் கலந்து கொள்ளும் பதிவுகள் குறித்த பதிவுகள்


    | |

  • Aazvargal Research Institute presents Tholkappiyar award to M Karunanidhi

    Dinamani.com – TamilNadu Page

    ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் கருணாநிதிக்கு தொல்காப்பியர் விருது

    சென்னை, ஆக. 21: தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, “”தொல்காப்பியர்” விருதை குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சென்னையில் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறும் விழாவில் வழங்குகிறார்.

    இது தொடர்பாக ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவர் இராம. வீரப்பன், நிறுவனர் – செயலர் எஸ். ஜெகத்ரட்சகன் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

    தமிழ் இலக்கியத் துறையில் சிறப்பான தொண்டாற்றியவர்களுக்கு இந்த ஆண்டு முதல் “”தொல்காப்பியர்” விருது வழங்க ஆழ்வார்கள் ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது. இதன்படி முதல் ஆண்டு விருதை, தொல்காப்பிய பூங்கா வடித்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை கலைவாணர் அரங்கில் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கருணாநிதிக்கு இவ்விருதினை வழங்குகிறார்.

    ரூ.1 லட்சம் ரொக்கமும், தொல்காப்பியர் உருவம் பொறித்த தங்கப் பதக்கமும், வெள்ளியால் ஆன பட்டயமும் இவ்விருதில் அடக்கம்.

    ஓவியத்தில் தகுதிப் பட்டயம்: வழக்கமாக தகுதிச் சான்றினை (சைட்டேஷன்) எழுத்துகளில் வடித்துப் பட்டயம் வழங்கும் முறையை மாற்றி ஓவிய வடிவில் பட்டயம் வழங்க ஆழ்வார்கள் ஆய்வு மையம் முடிவு செய்தது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழ் இலக்கியம் படைத்த தொல்காப்பியர் உருவமும், தற்காலத்தில் வாழ்நாள் முழுவதும் படைப்பிலக்கியம் படைத்துவரும் முத்தமிழ் கலைஞர் கருணாநிதியின் “எழுதுகிற தோற்றமும்’ தகுதிப் பட்டயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள வாழ்வியல் நிகழ்ச்சிகளை விளக்கும் உருவங்கள் இதில் வெள்ளியில் பொறிக்கப்பட்டுள்ளன என்றனர்.

    Nirmal Deshpande gets Sathbhavana Award

    Dinamani.com – Headlines Page : ராஜீவ்காந்தி விருது விழாவில் சோனியா பேச்சு: பயங்கரவாதத்துக்கு குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தையே பொறுப்பாக்கக்கூடாது

    புது தில்லி, ஆக. 21: “”பயங்கரவாதச் செயல்களுக்கு சமுதாயத்தின் எந்த ஒரு பிரிவினரையும் பொறுப்பாளியாக்கக் கூடாது” என்றார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

    ராஜீவ் காந்தி பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள சத்பாவன விருதை, பிரபல காந்தியவாதி நிர்மலா தேஷ்பாண்டே அம்மையாருக்கு வழங்கிய நிகழ்ச்சியில் பேசுகையில் இக்கருத்தை அவர் வலியுறுத்தினார். விருதில் பாராட்டு பத்திரமும் ரூ.2.5 லட்சம் ரொக்கமும் அடக்கம்.

    (மும்பை தொடர் குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் நடந்துள்ள பின்னணியில், சோனியா காந்தியின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.)

    பிரதமர் மன்மோகன் சிங்: மதவாதிகளால் ஏற்படும் சவால்களை மக்கள் நேரடியாகச் சந்தித்து நாட்டின் ஒற்றுமையைக் கட்டிக்காக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமைக்கு வகுப்புவாதம்தான் பிரதான எதிரி என்று ராஜீவ் காந்தி அடிக்கடி எச்சரிப்பார்.

    மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதில் காந்தியவாதியான நிர்மலா அற்புதமாகச் செயல்பட்டிருக்கிறார். மதத்தாலும் பூகோளரீதியாகவும் பிரிந்திருந்தாலும் நாம் அனைவரும் ஒரே கலாசாரம், பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் என்று இந்தியாவில் மட்டும் அல்ல, பக்கத்து நாடுகளிலும் சென்று பிரசாரம் செய்தவர் நிர்மலா.

    சோனியா காந்தி: நிர்மலாவுக்கு இந்த விருது தரப்படுவது மிகவும் பொருத்தமே. ராஜீவ் காந்தி எந்த லட்சியங்களுக்காகவும் கொள்கைகளுக்காவும் வாழ்ந்து, மறைந்தாரோ அவற்றின் அடையாளமாகத் திகழ்பவர் நிர்மலா.

    பயங்கரவாதத்துக்கு சமுதாயத்தின் இந்தப் பிரிவினர்தான் காரணம் என்று யார் மீதும் பழிபோடக் கூடாது.

    நிர்மலா தேஷ்பாண்டே: அணு ஆயுதமற்ற, வன்முறைகளற்ற உலகம் வேண்டும் என்று விரும்பினார் ராஜீவ் காந்தி. மதத்தின் பெயரால் நடந்த கலவரங்களில்தான் அதிகம் பேர் இறந்துள்ளனர் என்பதை அவர் வலியுறுத்தி வந்துள்ளார். நம்முடைய பக்கத்து நாடுகளிலும் அமைதி நிலவ வேண்டும் என்பதை பிரசாரம் செய்து வருகிறேன்.

    நீதிபதி ஏ.எம். அகமதி (விருதுக்குழுவின் ஆலோசகர்): வெவ்வேறு மதம், இனம் கொண்ட குழுக்களிடையே அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துகிறவர்களுக்கும், பயங்கரவாதம், வன்செயல்களுக்கு எதிராகப் போராடுகிறவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.

    வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பொன் விழா கொண்டாட்டத்தின்போது இந்த விருது ஏற்படுத்தப்பட்டது.

    அன்னை தெரசா, பிஸ்மில்லா கான், சுநீல் தத், திலீப் குமார், லதா மங்கேஷ்கர், கபில வாத்ஸ்யாயன் உள்பட இதற்கு முன் 13 பேர் இந்த விருது பெற்றுள்ளனர்.

    விழாவுக்கு வந்தவர்களை மூத்த காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா வரவேற்றார். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் தலைவர்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    Three Books and a Movie

    சில புத்தகங்கள், ஒரு படம்

    நூலகத்தில் மேய்ந்தபோது கிடைத்த சில முத்துக்கள்:

    1. The End of Iraq: How American Incompetence Created a War Without End: – Peter W. Galbraith

      ஈராக்கில் நடக்கும் சிவில் போராட்டம் குறித்து நேரடியாக வசித்தவரிடம் இருந்து அறிந்து கொள்ளலாம்.

    2. Virginity or Death!: And Other Social and Political Issues of Our Time: – Katha Pollitt

      என்னுடைய கருத்துக்கள் சரியானவை என்னும் அபார நம்பிக்கை எனக்குண்டு. அதை சரியான முறையில் எழுதுவதெப்படி என்று விழித்ததுண்டு. கொண்ட நம்பிக்கைகளை சுவாரசியமாக எப்படி விளக்க வேண்டும் என்பதற்கு இதைப் படிக்கலாம்.

    3. The Looming Tower: Al-Qaeda and the Road to 9/11: – Lawrence Wright

      எப்படி? எப்படி? அல்-க்வெய்தா வந்ததும் வளர்ந்ததும் எப்படி? அதன் கூட 9/11 குறித்த தகவல் அறிந்தும் நம்ப மறுத்த கதை. 9/11 சூழ்ச்சி – வீழ்ச்சி – மீட்சி போன்ற புத்தகக்களைப் படித்து முடித்தவுடன் மேற்சென்று புரிதலை மேம்படுத்த உதவும் சரளமான நடையில் எழுதப்பட்ட ஆராய்ச்சி நூல்.

    4. The Last Mogul: The Life and Times of Lew Wasserman: DVD

      முன் பதிவு செய்திருக்கிறேன். இனிமேல்தான் கைவசமாக வேண்டும். ஹாலிவுட்டை அறுபது வருடமாக ஆட்டிப் படைத்தவரின் கதை. கருப்பு பணத்தை வைத்து தாதா ராஜ்ஜியத்தை பின்னணியிலிருந்து யூனிவர்சல் ஸ்டூடியோஸை வாங்கி, ரீகனின் அரசியல் வளர்ச்சிக்கு வித்திட்ட விவரங்களை சொல்லும் கதை.


    | |