குண்டடம் அருகே தலித் மக்கள் கிராமத்தை காலி செய்தது ஏன்?: ஸ்டாலின் விளக்கம்
சென்னை, ஆக. 31: தாராபுரம் தொகுதி குண்டடம் ஊராட்சி ஒன்றியம் கள்ளிப்பாளையத்தில் ஆதிதிராவிடர் காலனியில் மக்கள் வெளியேறியதற்கு, அடிப்படை வசதிகள் இல்லாதது காரணமல்ல என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுகுறித்து உறுப்பினர்கள் டி. யசோதா, விடியல் சேகர் ஆகியோர் சட்டப் பேரவையில் புதன்கிழமை கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
ஆதிதிராவிடர் காலனியில் இருந்த குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வேலைக்காக திருப்பூர் சென்றுவிட்ட நிலையில், மற்றவர்கள் வேறு ஊர்களில் உறவினர் வீடுகளுக்குச் சென்று தங்கியிருப்பதாக அமைச்சர் பதில் அளித்தார்.
அந்தக் காலனியில் குடிநீர் வசதி, சாலை வசதி ஆகியவை போதிய அளவுக்குச் செய்திருப்பதாக அவர் விளக்கினார்.
முந்தைய பதிவு: தமிழகத் தேர்தல் 2006: Frustrated Kallipaalayam Dalits Vacate their Native Village











Interesting. so.. what’s the truth?
நல்ல கேள்வி. பதில் தெரியவில்லை. ஜூ.வி போன்ற புலனாய்வு தாளிகைகளில் ஏதாவது அலசல் வந்தால் விளங்கலாம்.