வேலைக்காரியை கற்பழித்ததாக தமிழக ஆளுநர் பர்னாலாவின் மகன் ககன்ஜித் சிங் கைது
சண்டீகர், ஆக. 13: வீட்டு வேலைக்காரியைக் கற்பழித்ததாக தமிழக ஆளுநர் சுர்ஜீத் சிங் பர்னாலாவின் மகனும் பஞ்சாப் மாநிலம் தூரி சட்டப்பேரவைத் தொகுதி (சிரோன்மணி அகாலி தளம் கட்சி) எம்.எல்.ஏ.வுமான ககன்ஜித் சிங் பர்னாலா கைது செய்யப்பட்டார்.
சனிக்கிழமை முற்பகலில் ககன்ஜித் சிங்குக்கு, 40 வயதாகும் வேலைக்காரப் பெண் மசாஜ் செய்து கொண்டிருந்தார். அப்போது ககன்ஜித் சிங் தம்மைக் கற்பழித்ததாக வேலைக்காரப் பெண் போலீஸில் புகார் செய்துள்ளார்.
இதையடுத்து, ககன்ஜித் சிங்கைப் போலீஸôர் கைது செய்துள்ளனர். வேலைக்காரப் பெண்ணுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டுள்ளது. கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ககன்ஜித் சிங்கும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.










