ஸ்டாலின், பொன்முடி மீதான வழக்கு வாபஸ்
சென்னை, ஆக. 11: போலீஸôரைத் தாக்க முயன்றதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உள்பட 16 பேர் மீது அதிமுக ஆட்சியின்போது தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற அதிமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
அப்போது அக்கல்லூரிக்குச் சென்று மாணவிகளிடம் மு.க. ஸ்டாலின் பேசினார்.
மாணவிகளைப் போராடத் தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்காக அவரைக் கைது செய்ய வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸôர் சென்றனர். அப்போது அவர்களை தாக்க முயன்றதாக ஸ்டாலின், பொன்முடி உள்பட 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கை வாபஸ் பெறுவதாக அரசுத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை ஏற்ற நீதிபதி வேலு, வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்தார்.










