Madhani should be released – Human rights activists


Dinamani.com – TamilNadu Page

மதானியை விடுதலை செய்ய மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தல்

சென்னை, ஆக. 11: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி 1998-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானியை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசம், அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (புதுவை) தலைவர் கே. சுகுமாரன், கவிஞர்கள் அப்துல் ரகுமான், குட்டி ரேவதி உள்ளிட்ட 42 பேர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானி சர்க்கரை நோய், மூட்டுவலி, முதுகுத் தண்டு பாதிப்பு போன்ற நோய்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது 108 கிலோவாக இருந்த அவரது எடை தற்போது 54 கிலோ ஆகக் குறைந்துவிட்டது.

அவரது தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி கேரளத்தில் மக்கள் செல்வாக்குடன் தேர்தலில் பங்கேற்கும் கட்சியாகும். வன்முறையைத் தூண்டும் கட்சி அல்ல.

சிறையில் கூட அவருக்குச் சிகிச்சை அளிக்க இயலவில்லை என்று கோட்டக்கல் ஆயுர்வேத சிகிச்சை மையமும் கூறிவிட்டது. இந்நிலையில் அவருக்கு சிறைக்கு வெளியே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது.

மதானியை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தமிழக அரசுக்கு கடந்த ஆட்சியின்போது எழுதியுள்ளார். கேரள முதல்வர் அச்சுதானந்தனனும் மதானியை விடுவிக்கும்படி முதல்வரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். கேரளத்தில் உள்ள கட்சிகள் அவருக்கு ஜாமீன் அளிக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

எனவே, மதானியைத் தமிழக அரசு ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

11 responses to “Madhani should be released – Human rights activists

  1. next they should recommend for bharat ratna to osama

  2. தவறுக்கு குற்றத்துக்கு தண்டனையில்லை என்றால் அவ்வளவு பேரும் குற்றம் செய்வார்களே. வருமையின் காரணமாக 100 ரூபாய் திருடியவனுக்கு ஜெயில். சொத்துத்தகராறில் ஆத்திரத்தில் கொலை செய்தவனுக்கு தண்டைனை!! திட்டமிட்டு பல அப்பாவி மக்களை கொன்றவர்களுக்கு தண்டனை யில்லை என்றால் என்ன ஆவது?
    பின்லேடனையம் தப்பிக்க வையுங்கள் தண்டனையில் இருந்து அவர்களுக்கும் பாரத ரத்தினா வழங்கட்டும்.

  3. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனைத் தரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது.

    நமது நாட்டில் நடக்கும் வினோதமெல்லாம், நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கு ஒருநாள் அடையாள தண்டனை மட்டும் கொடுத்து விட்டு அடுத்தப்படியாக அவர்களையே ஆளவந்தார்களாகவும் ஆக்கிக்கொள்கிறோம். அல்லது வழக்கு விசாரணையை இழுத்தடித்து ‘தாமதிக்கப்பட்ட நீதி’யை வழங்குவோம்.

  4. இந்தியாவில் இதுவரை பிடிபட்ட தீவிரவாதிகள் யாரும் தண்டனை பெற்றதில்லை. மதானிக்கும் அதுதான் ஏற்படப்போகிறது.

    ஆனால், ஸாட்ஷிகளில்லை என்று மஹான் மதானி விடுதலையாகும் முன்பாக, இதற்கு முன்புவரை கிடைத்துவந்த பிஸ்கட்டுகளுக்கு வாலாட்டினால்தான் அடுத்த பிஸ்கட் கிடைக்கும் என்பது தெரிந்தவர்கள் வாலாட்டுகிறார்கள்.

  5. Unknown's avatar சுல்தான்

    பாதிக்கப்பட்டவனின் மனநிலையில் இருந்து பார்க்கின்ற, தண்டனை தருகின்ற சட்டம் வேண்டும்.
    காஞ்சி காமகேடி பீடையதிபதி சந்திரர் எனப்படும் சுப்ரமணியைப் பாருங்கள். மீண்டும் காஞ்சிக்கே வந்து விட்டது.
    குறைந்த பட்சம் கிரிமினல் குற்றங்களுக்காகவாவது இஸ்லாமிய ஷரீயத் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

  6. Unknown's avatar சுல்தான்

    குற்றம் செய்திருந்தால் நியாயப்படி விசாரித்து தண்டனைக்கொடு. அதை விடுத்து விசாரணைக் கைதியாக எத்தனை வருடங்கள் விவஸ்தையில்லாமல்!.
    வீரப்பன் விவகாரத்தில் எத்தனையோ பெண்களையும் முதியவர்களையும் விசாரணைக்காவலில் வருடக்கணக்கில் வைத்திருந்து விட்டு பின்னர் இவர்கள் குற்றவாளியில்லையென்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்கள் ஜெயிலினுள்ளே வைத்திருந்தவர்களுக்கு என்ன தண்டணை!! வெளிவந்தவர்கள் மறுவாழ்வுக்கு யார் உத்தரவாதம்? அவர்கள் பட்ட துன்பங்களுக்கு நஷ்ட ஈடு என்ன?

  7. பாரத ரத்னா என்பது Highest civilian award. இவர்களுக்கு வழங்கப்படவேண்டியது Highest or Biggest Criminal(ian) award.

    இவர்கள் பேச்சைக் கேட்டு திம்மிக்கள் முன்னேற்றக் கழகமும் அனைத்து இந்திய திம்மிக்கள் முன்னேற்றக் கழகக் கண்மணிகளும் இந்த தீவிரவாதி என்று மனிதர்களுக்கான சட்டத்தினால் தண்டிக்கப் படமுடியாத இந்த மிருகத்தை விடுதலை செய்து விடுவார்கள்.

    இந்த Human rights acitivist கள் தங்கள் இயக்கத்திற்கு Animal rights acitivist என்று பெயர் மாற்றிக் கொண்டு மதானியை விடுதலை செய்யப் போராடவேண்டும் என்று யாராவது அவர்களிடம் சொல்லுங்கள்.

  8. ஸ்ரீகிருஷ்ணா ரிப்போர்ட்டில் குற்றம் சுமத்தப்பட்ட பால்தாக்கரேக்கு உல்லாசம்.

    இதுவரை வழக்கு விசாரணையே நடத்தப் படாமல் மதானி 10 ஆண்டுகளாக சிறையில்….

    True!!. Atrocious !

  9. //குறைந்த பட்சம் கிரிமினல் குற்றங்களுக்காகவாவது இஸ்லாமிய ஷரீயத் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்//

    இஸ்லாமிய ஷரீயத் சட்டம் என்ன சொல்கிறது?
    திருடினால் கையை வெட்ட வேண்டும்,கொலை செய்தால் தலையை வெட்டவேண்டும் ,பெண்களை கல்லால் அடித்துக்கொல்ல வேண்டும்,மதம் மாறினால் மரணத்தண்டணை.இப்படி போன்ற காட்டுமிராண்டி சட்டம்தானே உங்கள் இஸ்லாமிய ஷரீயத் சட்டம்!!!

  10. எனக்கென்னவோ பார’தீய’ ஜனதா கட்ஷியும் அதன் எடுபிடிகளும் திருந்திவிட்டாலே நமது இந்தியா சந்திக்கிற பிரச்னைகள் சுமூக தீர்வு கண்டுவிடும் என்று தோன்றுகிறது.

    மதானிகளைப் பேசுகிற நாம் அத்வானிகளை மறந்து விடுகிறோம். ஞாபகமாக!

Dharumi -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.