TK-TO Contest: #19 – #27 : Snap Reviews


  • 07/08/06 # 27 பல்லிடுக்கில் மாட்டிய பாக்குத்தூள்! லக்கிலுக்

    (சொந்தக்கதை) மதிப்பெண் – 1 / 4

    எவ்வளவு தடவை ….. (கிட்டத்தட்ட 64) வருகிறதோ, அவ்வளவு ‘நாமே உணர்ந்து, தெரிந்து, புரிந்து, விரிந்து, பரந்து, சுரந்து, கறந்து கொள்ள’ வேண்டியவை.

  • 07/08/06 # 26 உறவில்லாத உறவுஜெஸிலா

    (புதுக்கவிதை) மதிப்பெண் – 1.5 / 4

    நீயே என்
    இன்பத்தின் ஆரம்பம்
    தவிப்பின் துணை
    தனிமையின் தீர்வு
    துன்பத்தின் தேடல்

    சண்டேன்னா ரெண்டு; கவிதைன்னா 1.5 🙂

  • 07/08/06 # 25 செம்புலப் பெயல் நீர்குமரன் எண்ணம்

    (புதுக்கவிதை) மதிப்பெண் – 1 / 4

    ஆரம்பத்தில் தாய் மேல் உள்ள Oedipus complex விவரணை. கொஞ்சம் பாண்டீன் ப்ரொ-வீ திருவிளையாடல். அப்புறம் கொஞ்சம் மழை நீர் வாசம் (Howstuffworks “What causes the smell after rain?”). ‘இருவர்’ படத்தில் சங்கப்பாடலை நவீன வெள்ளித்திரையாக்குவது போன்ற புனைவு. அறிவியலும் காதலும் பாசமும் இலக்கியமும் உளவியலும் பல்கிப் பெருகிப் பின்னிப் பிணையும் உறவு.

  • 07/08/06 # 24 சாயல்ஜெயந்தி சங்கர்

    (சிறுகதை) மதிப்பெண் – 3 / 4

    ஏன் உன்ன மாதிரி ஒம்பையன் இருக்கறதா யாராவது சொன்னா சந்தோஷப் படற, நீ அவங்கப்பா மாதிரி இருக்கறதா சொன்னா ஏன் வெறுக்கணும்.

    ஏதோ முதன்முதலாக பிரமுகர் ஒருவரைச் சந்திக்கப் போவதைப் போல ஒரு படபடப்பு.

    நீ ஆல்பர்ட்ட உன் மகன்ற உணர்வையும் தாண்டி ஒரு தனி மனிதனா, ஒரு சிநேகிதனாப் பாரு. அவன் மூணு நாலு வயசுலயே உன்னப் பிரிஞ்சு, எவ்வளவோ குழப்பங்கள அனுபவிக்க ஆரம்பிச்சவன். உன்னப் புரிஞ்சுக்க அவனுக்கு டைம் கொடு. அந்த டைம்ல நீ அவனையும் புரிஞ்சுக்கோ.

    இயல்பாக உள்ளிழுக்கிறது. சண்டை போட்ட குடும்பத்தில் இருந்து வீட்டோடு தங்க வரும் உறவு. முந்தைய மண உறவுகளை அணுகுதல். பழமைவாத கலகம் செய்யும் முதியோர் என்று சிதறலாக பல முகங்கள் அறிமுகம். நல்ல கதை.

  • 07/08/06 # 23 என்ன உறவில் நான்… – மதுமிதா

    (புதுக்கவிதை) மதிப்பெண் – 1.5 / 4

    கொஞ்சம் சுற்றிவளைத்த சுற்றங்கள் சிதறுவதை வழக்கமான கவிதையாக்குகிறார்.

  • 06/08/06 # 22 உறவுகள்vaik

    (சிறுகதை) மதிப்பெண் – 1 / 4

    மின் அரட்டையைக் களமாக வைத்து உருப்படியாக எந்தக் கதையும் வரவில்லை என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு. தட்டை என்பார்களே… அதற்கு எ-டு.

  • 06/08/06 # 21 அஞ்சல் நெஞ்சுல (கானா)அபுல் கலாம் ஆசாத்

    (ஒலிக்கவிதை) மதிப்பெண் – 3 / 4

    உங்களுக்கு கானாக் கவிதை எழுதத் தெரியுங்களா (+1)? அதை மூச்சு முட்டாம பாடத் தெரியுங்களா? எல்லோர் முன்னாடியும் பாடுவீங்களா (+1)? பாட்டைக் கேட்டு குத்தாட்டம் போட முடியுங்களா (+1)? வலையொலி பரப்பத் தெரியுங்களா (+1)? அஜீத், மணிவண்ணன், மகேஸ்வரி ஆட வைத்து ஒளிப்பதிவாக்காததால் -1 😉

    எம்பி3 கானாவ கேட்டேன் அஞ்சல – ஆசாத்து
    எம்மாம் கலக்கலா பாடறாரு பதிவுல!

  • 06/08/06 # 20 உறவு..!இரா.ஜெகன் மோகன்

    (புதுக்கவிதை) மதிப்பெண் – 1.5 / 4

    கவிதை படிப்பதற்கு எளிது.

  • 06/08/06 # 19 பூனைக்குட்டிகள் – தேன்கூடு – உறவுகள்சிமுலேஷன்

    (சிறுகதை) மதிப்பெண் – 2.5 / 4

    வள்ர்ப்பு பிராணிகள் குறித்த இரண்டாவது கதை. விறுவிறுப்பாக நகர்கிறது, என்னுடைய வாக்கு உண்டு.

    நாய் படிக்கும்போதே தோன்றினாலும், பூனையிலாவது கேட்டு விட்டுகிறேன்:

    அ) இந்தியாவில் பூனை வளர்த்தால், வீட்டுக்குள்ளேயே ‘வெளிக்கு/ஒன்றுக்கு’ இருக்குமே. ஐந்து உறவுகளைக் கொண்டு இந்தப் பிரச்சினையை யாரும் தொடவே இல்லையே.

    ஆ) இராத்திரி எல்லாம் தூங்க விடாமல் கத்தி, சாப்பாட்டை தட்டி விட்டு, ஆசாரம் பார்க்கும் பாட்டியிடம் விழுப்பு ஏற்படுத்தி, தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து என்று கஷ்ட நஷ்டங்களையும் கவனிக்காமல் தவறவிட்டது ஏன்?

    போட்டியில் கலந்து கொள்ளும் பதிவுகள் குறித்த முந்தைய பதிவு


    | |

  • 4 responses to “TK-TO Contest: #19 – #27 : Snap Reviews

    1. Unknown's avatar செந்தில் குமரன்

      என்னங்க ஒரு மார்க் தானா? ஹீம் ஓகே அடுத்த தடவை அதிகமா வாங்க முடியுமான்னு பாக்குறேன் ஆனா நீங்க அனுபவிக்காம ஆராய்ச்சி செய்யறீங்களோன்னு சந்தேகம். Oedipus complex என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர்

    2. —-அனுபவிக்காம ஆராய்ச்சி செய்யறீங்களோன்னு—-

      அருமையான பிரயோகம் 😉

      அனுபவித்து ஆராய்ந்தால் அது ஆராய்ச்சியா?
      ஆராயாமல் அனுபவித்தல் அது அனுபவமா?
      ஆராய்ந்து அனுபவித்தால் அது என்ன அனுபவம்?
      அனுபவிக்காமல் ஆராய்ந்தால் அதில் என்ன கிட்டும்!

      —-Oedipus complex என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர்—-

      கவிதைகளை வாசகனே புரிந்து கொள்ள வேண்டும் என்பதை கொஞ்சம் நீட்டித்து சதாய்த்தேன்.

      தங்களின் வருகைக்கும் பதிலுக்கும் நன்றி குமரன்.

    3. பாபா

      அண்ணி, நாத்தனார் உறவு சுற்றி வளைத்த சுற்றங்களா?????????

      சரி பொறுமையா எல்லா படைப்புகளையும் படிச்சதுக்கே உங்களை
      எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

      அதுசரி உங்க கணினி மட்டும் வைரஸ், லொட்டு லொசுக்கு தாக்காம எப்பவுமே சரியாக இருக்குமா:-)

    4. —-அண்ணி, நாத்தனார் உறவு சுற்றி வளைத்த சுற்றங்களா?—-

      தன்னிலையில் பார்த்தால் பெற்றோர், உடன்பிறந்தாரை விட்டே பல்லாயிரம் மைல் தள்ளி வாழுகிறேனே 😉
      ஏதோ, பொண்டாட்டி, பொண்ணு பக்கத்தில் இருந்தா சரிதான்!

      —-உங்க கணினி மட்டும் வைரஸ், லொட்டு லொசுக்கு தாக்காம—-

      இப்படி கண்ணு போடறீங்களே 🙂

      வீட்டில் இரண்டு, அலுவலில் இரண்டு வைத்திருந்தால், ஒன்று பழுதானாலும், இன்னொன்று கை கொடுக்கும். பழசை தூக்கிப் போடாமலே புதுசு வாங்கிடுங்க!

    பின்னூட்டமொன்றை இடுக

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.