Madurai, Coimbatore mayor posts to be reserved for Women
மதுரை, கோவைக்கு பெண் மேயர்கள்
மதுரை, கோவை அகிய மாநகராட்சிகளின் மேயர்கள் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் அக்டோபர் மாதம் 24ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது.
மாநகராட்சிகள் – 6
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாநகராட்சி, நகர சபைகளில் கவுன்சிலர்களே மேயர் மற்றும் நகரசபை தலைவர்களை தேர்வு செய்ய புதிய சட்டம் கொண்டு வந்தது. இதன் மூலம் மேயர் பதவிக்கு தனியாக தேர்தல் நடக்காது.
மேலும் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளை சுழற்சி முறையில் மாற்றி அமைக்கவும் திட்டமிட்டுள்ளது அரசு.
அதன்படி தற்போது பொது பிரிவில் இருக்கும் பதவிகள் தாழ்த்தப்பட்டோர் அல்லது பெண்களுக்கு ஒதுக்கப்படும். தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் பெண்கள் மற்றும் பொது பிரிவுக்கு மாற்றப்படும்.
மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் 2 மாநகராட்சிகளில் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படவுள்ளது. கடந்த முறை நெல்லை, திருச்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன.
இப்போது சுழற்சி முறையில் மதுரை, கோவைக்கு பெண் மேயர் பதவி வழங்கப்படவுள்ளது. நெல்லை, திருச்சி ஆகிய மேயர் பதவிகள் பொது பிரிவுக்கு மாற்றப்படும். அதே போல சென்னை, சேலம் மாநகராட்சிகளும் பொது பிரிவில் இடம் பெறவுள்ளது.
மேலும் நகாரட்சிகள், யூனியன்கள், டவுன் பஞ்சாயத்து, பஞ்சாய்துக்களிலும் சுழற்சி முறை மாற்றத்துக்கு பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சி, நகராட்சி வார்டுகளிலும் சுழற்சி முறை மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.











arali