Karunanidhi attacks Kalimuthu


Karunanidhi attacks Kalimuthu

ஒரு சபாநாயகர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் காளிமுத்து: கருணாநிதிஆகஸ்ட் 03,

தமிழக சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால், அதன் மீது ஓட்டெடுப்பு நடக்கும் முன்பாகவே அதிமுகவினர் வெளிநடப்பு செய்துவிட்டனர்.

இதையடுத்து அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

ஆட்சியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதா, முதல்வர் மீது கொண்டு வருவதா என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்து, எதற்கு வம்பு, தாற்காலிகமாக சபாநாயகர் மீதே கொண்டு வந்துவிடலாம் என்று இன்று இந்த தீர்மானத்தை கொண்டு வந்து சோதித்துப் பார்க்க தொடங்கியிருக்கிறார்கள்.

இதுவரையிலேயே அவர்கள் மைனாரிட்டி அரசு என்று சொன்ழது நிரூபிக்கப்படவில்லை. நிரூபிக்கவும் முடியாது என்ற காரணத்தால் அவர்களாகவே இன்றைக்கு வெளியேறி தங்களுடைய தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் இந்த ஐந்தாண்டு காலத்துக்கும் எங்களுக்குப் பேரவைத் தலைவர் தான். ஆனால், பேரவைத் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் சொல்லலாம்.

ஏறத்தாழ 57ம் ஆண்டிலிருந்து நான் இந்த அவையிலேயே இருந்தவன் என்ற காரணத்தால் எங்களைக் கூட கடிந்து கொண்ட பேரவைத் தலைவர்கள் உண்டு. நாங்கள் அவர்களை திருப்பி கடிந்ததில்லை.

எப்படி ஒரு சபாநாயகர் இருக்கக் கூடாது என்பதற்கு ஒன்றைச் சொல்ல நான் விரும்புகிறேன்.

உணவு விடுதிகள் காலம் காலமாக பலராலும் ஏலம் எடுக்கப்பட்டோ, அல்லது ஒப்பந்தம் போடப்பட்டோ தொடர்ந்து நடந்து வருகின்றன. அதில் அண்ணா பெயரால் அமைந்த அசைவ உணவு விடுதி ஒன்றும் இருந்தது.

அந்த அண்ணா உணவகத்தை நடத்தி வரும் கே.வி.ஆர். மணி என்பவர் அந்த உணவகம் நடத்த வழங்கப்பட்ட காலம் 03.02.2002 உடன் முடிவுற்றதால், அந்த உணவகத்தை உடனடியாகக் காலி செய்து ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதற்கு அந்த கே.வி.ஆர்.மணி என்ற உணவக உரிமையாளர், அந்த உணவகத்தை ஒப்பந்த அடிப்படையில் வருடத்துக்கு ரூ. 2.6 லட்சம் வாடகைக்கு தொடர்ந்து நடத்த அனுமதி தருமாறு கேட்டு கடிதம் எழுதுகிறார். வருடத்துக்கு ரூ.2.6 லட்சம் வாடகை தந்துவிடுவதாகக் கூறுகிறார்.

இதற்கான கோப்பில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து 16.02.02 அன்று தனது கைப்பட பிறப்பித்த ஆணையில், கே.வி.ஆர். மணிக்கே ஓராண்டு காலத்துக்கு அந்த உணவகத்தை நடத்த அனுமதிக்கலாம் என்றும், அதற்கு மாத வாடகையாக ரூ. 2,750யை நிர்ணயிக்கலாம் என்றும் எழுதியுள்ளார்.

மணி தர முன் வந்த தொகை வருடத்துக்கு ரூ.2.6 லட்சம். ஆனால், காளிமுத்து (12 மாதத்துக்கு ரூ. 2,750 என்ற வகையில்) ரூ. 33,000 மட்டும் போதும் என்று ஆணை பிறப்பித்தார். மீதி பணம் எங்கே போனது?.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.