இளவஞ்சி :: எம்மூஞ்சியும் ஒலக மொகரைகளும்… என்று ஆரம்பித்தார். அவர் வழியே சென்று MyHeritage face recognition – Find the Celebrity in You என்று மேய்ந்ததில்…
- சிகையலங்காரம் ஒத்திருப்பதால், முகத்திலும் இசைவிருப்பதாக கருதியிருக்கலாம். நேற்றும் இடம் பெற்றவர்.
- பத்து தடவை நான்கரையைத் தொட்டிருக்கும் இவருக்கு வயது தெரியாத பிரச்சினை கிடையாது.
- ‘இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’ என்று எஸ்.பி.பி.யை பாட வைத்து விடுவாரோ!
- டிவி முதற்கொண்டு எல்லாப் பக்கமும் இருப்பவர். ஆனால், இப்பொழுது காண்பது அரிதாகி விட்டது.
- நேற்றும் இடம் பெற்றவர். விசாலமான நெற்றி ஒற்றுமை இருக்கிறது. ஸ்பேசியும் அமெரிக்கா வாசம்தான்.
- சுஜாதாவின் குட்டி; அல்லி அர்ஜுனா, நெத்தியடி, சாமி, எல்லாம் சென்னை தியேட்டரில் ரசித்தவர், இப்பொழுது மேற்கத்திய விமர்சனமாக வீசிக் கொண்டிருக்கிறார்.
- பசிக்குதே… ரொம்ப நாளா நளபாகம் செய்யாமல் தவிக்க விட்டிருக்கிறாரே
- காந்தியை ஓரங்கட்டியவர்
- கழுகு புகைப்படத்தை ஜூவி போடுவதில்லை. மலை போன்ற வலையில் இருந்து சுவாரசியங்களைக் கொடுக்கும் இவரோ சமீபத்தில்தான் புகைப்படம் மாற்றினார்.
- பொன்ஸ் பதிவிலும் இடம் பிடிக்காதவர்.
- ஆயிரங்கால் மண்டபத்தில் கிளி ஜோசியம் பார்த்து ரூபிக் க்யூப் விடையை புகைப்படத்தில் காண்பித்தாலும் என்னால் முடிக்க முடியவில்லை.
- நேற்றும் இடம் பெற்றவர். 33%-க்கு பதில் 16.67%.











