பெண் அதிகாரியின் அழகை வர்ணித்த அமைச்சரின் “அட்வைஸ்’ தேவையில்லை: ஜெ
சட்டப் பேரவையில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் திங்கள்கிழமை ஜெயலலிதா பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறிய ஒவ்வொரு தகவலுக்கும் அமைச்சர்கள் குறுக்கீடு செய்து பதில் அளித்தனர். இதற்கு பேரவைத் தலைவரைப் பார்த்து அமைச்சர்கள் அதிகம் குறுக்கீடு செய்வதாக ஜெயலலிதா குறிப்பிட்டார்.
அப்போது பேசிய உணவுத் துறை அமைச்சர் வேலு, இதே சட்டப் பேரவையில் கடந்த ஆட்சிக் காலத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், உறுப்பினர்கள் குறுக்கீடு செய்யாத அளவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டனர். அதை இப்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஜெயலலிதா பின்பற்றலாமே என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதா, “பெண் அதிகாரியை வர்ணித்த அமைச்சரின் அட்வைஸ் எனக்குத் தேவையில்லை’ என்றார்.
அமைச்சர் அன்பழகன்:
ரேஷன் அரிசி கருப்பு நிறத்திலும் சில சிவப்பு நிறத்திலும் உள்ளதாகக் கூறப்பட்டதற்கு அமைச்சர், சில மாநிலங்களிலிருந்து வரும் அரிசி அவரைப் போல கருப்பாக இருக்கிறது என்றும், சில மாநிலத்திலிருந்து வரும் அரிசி பெண் அதிகாரியைப்போல சிவப்பாக இருக்கிறது என்றும் உவமையாகச் சொன்னாரே அன்றி அது வர்ணனை அல்ல. வர்ணிக்கும் வயதில் அவர் இல்லை.











பாபா, இந்த பிளாக் டைட்டில் (தமிழகத் தேர்தல் 2006) கொஞ்சம் உறுத்துதே… அதையும் அந்த சைட் பார் சிம்பலையும் மாற்றலாமே…
அந்த அதிகாரியின் போட்டோவை போட்டிருந்தால் கருத்து சொல்ல வசதியாக இருந்திருக்கும். ஹி..ஹி
அமைச்சர்கள் தாங்கள் அமைச்சர்கள் என்பதையே மற்ந்து விடுகிறார்கள். ராமதச் அய்யாவை சொல்லி திரை உலகக் காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று போராடச்சொல்ல வேண்டும்