Terror training camps in Theni forest?


Terror training camps in Theni forest?

தேனி காடுகளில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி?

கோவையில் ஆரூண் பாஷா, மாலிக் பாஷா, ரவி என்கிற திப்பு சுல்தான், போலோ சங்கர் என்கிற அத்தக் கூர் ரகுமான், சம்சுதீன் ஆகிய 5 தீவிரவாதிகள் வெடி குண்டுகளுடன் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவையில் 8 இடங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டு இருந்தது தெரியவந்ததுள்ளது. இதையடுத்து கைதான 5 போரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குண்டுகளுடன் கைதானவர்களிடம் இருந்து சில இந்து மத தலைவர்களின் வீட்டு முகவரி, போட்டோ, அவர்கள் வந்து செல்லும் பாதைகளின் வரைபடங்கள், கோவையில் குண்டு வைக்க தேர்வு செய்த இடங்கள் அனைத்தும் இடம் பெற்று இருந்த சிடிகள், டெலிபோன் எண் அடங்கிய டைரி, வெடி மருந்துகள், பைப் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தீவிரவாதிகள் பல்வோறு குழுக்களாக பிரிந்து கோவை, சேலம், ஈரோடு நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களிலும் ஊடுருவி இருப்பதாகத் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் கேரளாவில் ஆயுத பயற்சி பெற்றவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் கொடுத்த தகவலையடுத்து கோவையில் மேலும் 4 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கேரள மாநிலம் மலப்புரம், பாலக்காடு, சேலம் போன்ற பகுதிகளுக்கு தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இப்பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

கைதான தீவிரவாதிகளுக்கு மனித நீதி பாசறை சார்பில் பயிற்சியளிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதன் தலைவர் மறுத்து விட்டார். நாங்கள் மத கல்வி பயிற்சி மட்டுமே அளிக்கிறோம் என்றார்.

ஆனாலும் தேனி காடுகளில் தீவிரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் போலீசார் அங்கு விரைந்துள்ளனர். தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து ரயில்களுக்கும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகள் அனைத்தும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. மேலும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் 2 இமாம் அலி கூட்டாளிகள் கைது:
பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் கூட்டாளியான சுல்தான் முகம்மது மதுரையில் 2 நாட்களுக்கு முன் வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்டார். இமாம் அலியை போலீஸாரிடம் காட்டிக் கொடுத்த இப்ராகிம் என்பவரைக் கொலை செய்வதற்காக அவர் வந்தபோது பிடிபட்டார்.

இந்த நிலையில் இன்று மேலும் 2 தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் இப்ராகிம். அவரும், சுல்தானை கொல்வதற்காக திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதன் மூலம் மதுரையில் பெரிய அசம்பாவிதத்தை போலீஸார் தடுத்துள்ளனர்.

இப்ராகிம் வீட்டை சோதனையிட்ட போலீஸார் அங்கிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.

3 responses to “Terror training camps in Theni forest?

  1. Unknown's avatar சிறில் அலெக்ஸ்

    தமிழகத்தில் இப்படி தீவிரவாதம் மலரும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. தமிழக இஸ்லாமியர்கள் விழித்துக்கொள்ளவேண்டிய நேரம். அவர்கலே இந்தக் களைகளைப் பிடுங்கினால் இனிய முடிவாய் இருக்கும்.

  2. அவர்கள் எவ்வாறு விழிக்கவேண்டும்…தீவிரவாதிகளாகவா…! அதையும் இஸ்லாமிய விழிப்புணர்வு என்று தான் ஞாயப்படுத்துவார்கள்…!!

    இஸ்லாம் மாறவேண்டும்…Protestant இஸ்லாம் மலர்ந்தால் தான் இஸ்லாம் வாழும்..இல்லையேல் முடிவு நெருங்கிவிட்டது என்று அர்த்தம்…

  3. இதுக்குத்தான் மிசா சட்டம் வேணுங்கறது

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.