Alter-Ego


http://etamil.vox.com/library/post/alterego.html: இதன் பிரதியை அங்கும் காணலாம்.

எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது என்று மாணிக்கம் சொல்லலாம். எனக்கு இன்னொரு பெயர் கிடையாது. ஆனால், ஈ-தமிழ் போலவே, சில பதிவுகளிலும் வேறு சமூக அமைப்புகளிலும் இருப்பதை சொல்லலாம். ஒரு பட்டியல் தொடங்கி முடிப்பதற்கு முன் இதற்கு காரணமாயிருந்த நியு யார்க் டைம்ஸ் கட்டுரையைப் படிக்கலாம்.

யாஹூ 360, gather போன்ற தளங்களில் நண்பனாக சேர்த்துக் கொள்வதற்கும் கல்லூரி ‘முஸ்தஃபா… முஸ்தஃபா‘விற்கும் உள்ள தூரம் அதிகரித்துக் கொண்டே போனாலும், ஆத்மார்த்தமான உறவுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போவது லாபமா/நஷ்டமா?

என்னுடைய பிற வலைத்தடங்கள்:

  1. வோர்ட்ப்ரெஸ்ஸு : ‘நண்பர்’களிடமிருந்து வரும் ஃபார்வர்ட் சிரிப்புகளையும், கவர்ந்த ஆங்கில கருத்தாக்கங்களையும் தொகுக்க உதவுகிறது.
  2. கேதரு : என்.பி.ஆர். கேட்கும் கும்பலிடையே உலவ உதவும்.
  3. வாக்ஸு : ப்ளாக்ஸ்பாட்டை பகிஷ்கரிக்கிறார்களாமே? என்னைப் படி; என் கருத்தை காதில் போட்டுக் கொள்.
  4. டெலிசியஸு : புத்தகக் குறிகளை அதி விரைவில் தொகுத்து வகைப்படுத்த கை கொடுக்கிறார்.
  5. ப்ளாக்லைன்சு : படிக்க நேரம் கிடைக்காத, ஆனால் பார்க்க வேண்டிய பதிவுகளைத் தொகுத்து திரட்டிக் கொடுக்கிறது.
  6. யாஹூ 360 : வாராந்தோறும் நடக்கும் நுட்பியல், உலக மற்றும் வர்த்தக செய்திகளின் தொகுப்பு.
  7. நொடி நீதி : தமிழ்/ஆங்கில வலைப்பதிவுகளில் கவர்ந்த குறிப்புகள் மற்றும் மறுமொழி சேகரிப்பு.
  8. பாஸ்டன் மெட்ப்ளாக்சு : எந்த ஊரு என்றாலும் அது வாழும் ஊரப் போல வருமா?
  9. கில்லி : ஊர் கூடி வடம் பிடித்து வலை நாடி பிடிக்கும் வேலை.
  10. நுட்பியல் : சோற்றுக்கட்சி; பூவா போட வைக்கும் தொழில் நுட்பங்களுக்கான துப்புகள்.
  11. அமேசான் : என்ன புத்தகம் வாங்கலாம்?
  12. ஃப்ளிக்கரு : படம் காட்டுவதில் ப்ளாக்கர் பிரச்சினை செய்தால், கை கொடுக்கும் தோழன்.
  13. ஃபோட்டோ பக்கெட்டு : அனிமேட்ட ஜிஃப் போட உதவும் வலையகம்.

விரிவான பதிவு இங்கே: orgtheory.net » Blog Archive » Social Isolation in America: Changes in Core Discussion Networks Over Two Decades


| |

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.