அரசும் தலைவர்களும் மக்களைத் திருவோடு ஏந்தவைக்கின்றனர் : தோழி.காம் – 1/Jan/2006
தினமும் காரில் நீண்ட வரிசைகளில் மக்களை நிற்கச் செய்து பல் விளக்கி விட்டு, காபி, சிற்றுண்டி ஆகியவற்றை இலவசமாக வழங்கலாம். மதியம் வரை அவர்களை உலக அரசியல், தமிழ் சினிமா இவற்றில் திளைக்கச் செய்து மதிய உணவு வழங்கலாம். பிறகு இரவு வரை தொலைக்காட்சியில் வரும் குடும்ப மதிப்பீடுகள் கொண்ட தொடர்களைக் காட்டித் தாலாட்டித் தூங்கவைக்கலாம். வருடத்திற்கு இரண்டு முறை இலவச உடைகள் தந்து, ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வாக்களிக்கச் செய்து ஜனநாயகத்தைக் காப்பாற்றலாம்.
மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, உணவு, மருத்துவ வசதிகள், சாலைகள், இவையே கேள்விக்குறியாக, எட்டாத கனவாக இருக்கும்போது, ஒவ்வொரு அரசாங்கமும் அரசாங்க கஜானாவைத் தங்களுக்கு பிடித்த எதாவது ஒரு இலவசத்தில் செலவழித்துக்கொண்டிருப்பது தமிழகத்தை முன்னேற்றப் பாதையிலிருந்து வெகு தொலைவிற்குத் தடம் மாறி இட்டுச் செல்கிறது. அது மட்டுமின்றி மக்களின் சுயமரியாதையையும் ஆணிவேரோடு அழிக்கவும் செய்கிறது.
வழி: ullal – aathirai


























