எம்ஜிஆரை நீக்க கருணாநிதிக்கு விருப்பமில்லை
எம்ஜிஆர் மீது நடிவடிக்கை எடுக்க கருணாநிதிக்கு துளியும் விருப்பம் இல்லை.
ஆனால் நெடுஞ்செழியன், மதுரை மேயர் முத்து போன்றவர்களே தீவிரமாகச் செயல்பட்டு எம்ஜிஆரை திமுகவிலிருந்து நீக்கினார்கள்
– இந்த தகவலைச் சொன்னவர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் க. ராஜாராம், வி.வே. சுவாமிநாதன், கா. ராஜாமுகமது.
மகாபாரதம், ராமாயணம் போன்ற காவியங்களை திராவிடக் கட்சிகள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தங்களது வாதத்துக்கு வலுச் சேர்க்க அக் காவியங்களில் வரும் சம்பவங்களை துணை அழைக்க தவறுவதில்லை.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: “ராமனை ஏற்றுக்கொள்கிறாரா கருணாநிதி?“
தேர்தல் டிஷ்யூம்…டிஷ்யூம்: ஒரே நாளில் படப்பிடிப்பு!
இயக்குநர் – நரேஷ் குப்தா
தயாரிப்பு – தேர்தல் ஆணையம்.காம்
முக்கிய கதாபாத்திரங்கள் – கருணாநிதி, ஜெயலலிதா
புதுமுகம் – நடிகர் விஜயகாந்த்
துணை நடிகர்கள் – நெப்போலியன், சரத்குமார், எஸ்.வி. சேகர், பாக்யராஜ், முரளி…
துணை நடிகைகள் : சிம்ரன், விந்தியா, கோவை சரளா…
கதை, வசனம் – வைகோ, தயாநிதி மாறன்.
இசை – திருமாவளவன், ராமதாஸ், ப. சிதம்பரம் குழுவினர்.
ஒரே நாள் படப்பிடிப்பு – மே 8 (வாக்குப் பதிவு தினம்).
பட ரிலீஸ் தேதி – மே 11 (வாக்கு எண்ணிக்கை தினம்)
திரையரங்குகள் – ஜெயா டி.வி., சன் டி.வி. (காலைக் காட்சி மட்டும்)
படம் ரிலீஸ் ஆன பிறகு… – மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு அல்லது மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்: ஜெயலலிதா.
புதிய விடியலுக்கு தமிழகம் தயாராகிவிட்டது அல்லது திமுக வாக்கு வங்கி குறையவே இல்லை; 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது: கருணாநிதி.
விருது வழங்கும் நாள் : மே 12 அல்லது மே 13 – சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் அல்லது வள்ளுவர் கோட்டம்.











“அரிசியல்”
அனா ஆவன்னா படித்தாலும் சரி
படிக்க வில்லையாயினும் சரி
மானமிழக்க மனமுண்டா?
இதோ உனக்கு ஒரு சீட்டு!
அரசியலில் ஒரு எழவும் தெரியாதா?
அரசியல் என்றாலே புரியாதா?
சசிகலா வம்சத்தின் உடன் பிறப்பா?
இதோ உனக்கு ஒரு சீட்டு!
வாரிசு முறையில் பிணக்குண்டா?
“பெரிசின்” பேச்சில் விருப்புண்டா?
தீக்குளிக்கத் தயாரா நீ?
இதோ உனக்கு ஒரு சீட்டு!
அரசியல் என்பது யாருக்கு வேண்டும்?
அரசியல் இனிமேல் யாருக்கு வேண்டும்?
“அரிசியல்” தெரியுமா உனக்கு?
இதோ உனக்கு ஒரு சீட்டு!
மானமிழந்து தமிழர் இங்கே
மானமின்றிப் பின் செல்கின்றார்
மானமுள்ள எவனும் இனிமேல்
மானம் காத்து மறுத்திடுவாரோ
ஈனமில்லா இவ்விரு கழகங்களையும்?
உப்பு போட்டுத் தின்கின்ற அனைவரும்
முப்பதாண்டு சுயநல ஆட்சியை
இப்போதிங்கு ஒதுக்கா விட்டால்
எப்போதும் இனி விடிவில்லை நமக்கு!
‘அரிசியல்’ பேசி அவமானப் படுத்துகிறார்.
‘அரிசியல்’ மூலமே ஆட்சி பிடிக்க எண்ணுகிறார்.
‘அரிசியல்’ஆல் ஆட்சிக்கு வந்தவர்
‘அரிசியல்’ஆல் அழிவதுதானே முறை!
அரசு அன்று கொல்லும்!
அது பழைய மொழி!
“அரிசி” இன்று கொல்லும்!
இது புது மொழி!!
பாடலாசிரியர் ரெடி!
எம்ஜிஆரை நீக்குவது என்பது ஒரு இரவு முழுவதும் கண்விழித்து செயற்குழு எடுத்த முடிவு எனப் படித்தேன். எம்ஜிஆரை எதிர்க்க உருவக்கப்பட்ட முத்து, கருணாநிதியை எதிர்த்து எம்ஜிஆரை ஒரு கட்டத்தில் ஆதரித்தவர்.
எப்படியோ எம்ஜிஆரை நீக்க முத்துவும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார். ஆனால் நெடுஞ்செழியன் ஒரு பயந்தாங்கொள்ளி. அது நிஜம். நேருக்குநேர் யாரையும் எதிர்க்கேள்வி கேட்க திராணியற்றவர். அதனை கருணாநிதியின் நண்பராக இருந்தபோதும், எம்ஜிஆரின் நண்பராக இருந்தபோதும் ஜெயாவில் அசிஸ்டெண்டாக இருந்தபோதும் நாம் பார்த்து இருக்கிறோம்., எனவே எம்கிஆரை நேரடியாக எதிர்க்க முடியாமல் ஒருவேளள கருணாநிதியை தூண்டி இருக்கலாம். ஆனாலும் எது உண்மை என்று தெரியவில்லை.
பாலா,
:-)))))))))))
தியேட்டர் ரிலீஸ் கிடையாதா?
SK,
சூப்பர் பாட்டு.
நான் வேணுமுன்னா பின்னணி பாடவா?
மதுரை முத்துவே முழுக்காரணம் என்று அப்போது பலர் சொல்லிக்கேட்டிருக்கிறேன். ரெளடி முத்து என்று முதலில் அ.தி.மு.க.வினரால் அன்பாக அழைக்கப்பட்டு பின் ‘முத்து எங்கள் சொத்து’ என்று அதே கட்சியினரால் அழைக்கப்பட்டார். பிழைக்கத் தெரிந்தவர்…
என்னவாயினும் மு.க. வின் அரசியல் வாழ்க்கையில் செய்த பெருந்தவறு எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து வெளியேற்றியது. had he made M.G.R. himself ease out of the party, history would have been different.