நக்கீரன் ::
மே 1-6 வரை விஜயகாந்த் தனது விருத்தாசலம் தொகுதியில் டேரா போட்டு வாக்கு கேட்க இருக்கிறார். அது தெரிந்ததும் டாக்டர் ராமதாஸ் அதே நாட்களில் விருத்தாசலத்தில் தனது பிரச்சாரம் ஆருக்கும்படி தனது டூரை மாற்றிக் கொண்டார்.
அதே போல் விஜயகாந்த்துக்கு எதிராக பிரச்சாரம் பண்ண கவிஞர் அறிவுமதி, சீமான் தலைமையிலான திரைப்படக் குழுவும் அதே நாட்களில் களமிறங்க உள்ளது. விஜயகாந்த்துக்கு எதிராக தெரு நாடகங்களையும் நடத்தத் திட்டமிட்டிருக்கிறது இந்த டீம்.
திருவள்ளூர் அ.தி.மு.க. மா.செ.வான அர்.ஊஸ்.மணி சமீபத்திய வரவுகளான சிம்ரன், விந்தியாவிடம் எங்க மாவட்டத் தொகுதிகளுக்கு ஒருநாள் ஒதுக்கி பிரச்சாரம் பண்ண வாங்க என அழைப்பு விடுத்தார்.
நடிகைகள் தரப்போ கோவை சரளா உட்பட மூன்று பேர் பிரச்சாரம் பண்ண ஒருமணி நேரத்துக்கு ஒரு லட்ச ரூபாய் அகும். நீங்க ஒருநாள் முழுக்க பண்ணணும்னு அசைப்படறதால 10 லட்சம் கொடுத்தாப் போதும். எங்களுக்கு ஏ.சி. கார்களையும் ரெடி பண்ணணும் என்றது.
இது கேட்டு கிறு கிறுத்துப் போன மா.செ.மணி அம்மணிகளா நீங்க எங்க தொகுதிகளுக்கே வரவேணாம். நாங்க இத்தினி வருஷம் ஒட்டு கேட்டுகின மாதிரி கேட்டுக்குறோம். ஆளை உட்ருங்க என்றபடி எழுந்து விட்டாராம்.











//அதே போல் விஜயகாந்த்துக்கு எதிராக பிரச்சாரம் பண்ண கவிஞர் அறிவுமதி, சீமான் தலைமையிலான திரைப்படக் குழுவும் அதே நாட்களில் களமிறங்க உள்ளது. //
தங்கர் பிரச்சாரத்திற்கு வரவில்லையா?
ஒரு மணி நேரத்துக்கு ஒருலட்சம் என்பது “அது”க்கான ரேட்டோ என்னமோ?