விஜய்காந்த் குறித்து அறிவுமதி


Arivumathi on Vijaiganth Politics

நன்றி: தமிழ் முரசு

25 responses to “விஜய்காந்த் குறித்து அறிவுமதி

  1. ஹி…ஹி… கார்த்திக், பாக்யராஜ் பேசுற அரசியல் பேச்சே இதுக்கு பெட்டர்!

    ஆண்டவா, பாட்டெழுதற பயலுங்கங்கிட்டேர்ந்து என்னை காப்பாற்று; பகைவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன்!

  2. —மண்ணின் மைந்தர் இயக்குநர் தங்கர்பச்சான் வருத்தம் தெரிவித்தும் கூட நியாயமற்ற முறையில் வடநாட்டு நடிகையிடம் மன்னிப்பு கேட்க வைத்தவர்—

    சந்தடி சாக்கில் நெப்ஸையும் போட்டுத் தாக்குறார்பா!

    —தமிழ்நாட்டில் நடிகர், நடிகைகளின் எலி வளைக்குள் நெல் தேடும் வாழ்க்கையாக நம் வாழ்க்கை இருக்க வேண்டாம்—

  3. பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். பாட்டெழுதி என்ற போர்வையில் வெறுமே உளறி பேர் வாங்கும் முயற்சியிலும் சிலவர்கள் இருக்கிறார்கள். என்னடா சொக்கா, இந்த திராவிட நாட்டுக்கு வந்த சோதனை..

    சிந்தனையாளர் பேரவை சிந்தனையாளர் விருதை அறிவுமதிக்கு தந்தார்களா? சிந்திச்சிதான் செஞ்சாங்களா?

  4. Unknown's avatar ஜெயக்குமார்

    இது ஒரு நல்ல தரமான பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டிருந்தால் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் தமிழ்முரசு போன்ற ஒரு மட்டமான, கீழ்த்தரமான பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டதான் இதனை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

  5. —தமிழ்முரசு போன்ற ஒரு மட்டமான, கீழ்த்தரமான பத்திரிக்கையில்—-

    குறிப்பிட்ட பத்திரிகையில் இருந்து செய்தி வந்ததால் ஜீரணிக்க முடியாதா… உங்கள் பார்வையில் தரமான பத்திரிகைகளின் பட்டியலும் கொடுங்களேன்.

  6. முகமூடி நீங்கள் எதைவேண்டுமானாலும் கூறுங்கள் பரவாயில்லை!ஆனால் அறிவுமதியின் கவிதைமீது துப்புவதற்குமுன் யோசியுங்கள்.இன்றிருக்கும் எந்தச் சினிமாக்கவிஞனும் அறிவுமதிக்குமுன் நிற்கவே முடியாது.அறிவுமதியின் கவிதா விலாசத்தைச் சிறைச்சாலை படத்தில் பார்க்கவும்.அப்படியொரு கவியாற்றல் இன்றைய வைரமுத்துகளுக்குக் கிடையவே கிடையாது.அறிவுமதியின் அரசியலை இங்கு நான் விவாதிக்கவில்லை.மாறாக அவரது தமிழறிவைக் கொச்சைப்படுத்தும் புலமை இன்றைய பெரும் தமிழறிஞர்களுக்கே கிடையாது.இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

  7. Unknown's avatar ஜெயக்குமார்

    /குறிப்பிட்ட பத்திரிகையில் இருந்து செய்தி வந்ததால் ஜீரணிக்க முடியாதா./

    இதே பத்திரிக்கைதான், தந்தையின் புணிதத்தை எடுத்தியம்பிய “தவமாய் தவமிருந்து” படத்திற்கான ஒரு மட்டமான விமர்சனத்தை தேடி எடுத்து இருமுறை வெளியிட்டது. இப்பத்திரிக்கையினைப்பற்றிய ஆய்வுக்கு என்னுடைய திண்ணை வெளியீட்டை தயவு செய்து படியுங்கள் .


    இப்போது சும்மா “நச்”-னு ஒரு ஆபாச “விஷம்” சில இலவசங்களுடன் நம் தமிழகத்தை தினம், தினம் தாக்கி நமது தேசத்தை அதன் இயல்பிலிருந்து பிரிக்க முயன்று கொண்டிருக்கிறது. அதில் சொல்லப்படும் செய்திகள் என்னவென்றால் ஆண் விபச்சாரம், பெண்களுக்கு காபி குடித்தால் “மூட்” வருமா? ஆதிவாசிகளின் நிர்வாண பூஜை, ஆதிவாசிகளின் ஆபாச

    குருந்தகடு பரபரப்பு விற்பனை, குஷ்பு ஆபாச பட வௌதயீடு, பண்ணை வீடுகளில் ஆபாச நடனம், 5 நட்சத்திர விடுதிகளில் ஆபாச நடனம், செக்ஸ் சாமியார்கள் பற்றிய செய்திகள் மற்றும் தங்களுக்கு பிடிக்காதவர்கள் பற்றிய தவறான கருத்துகள் போன்ற அருவெறுக்கத்தக்க ஆபாச செய்திகள் தான். இதில் அசிங்கம் என்னவென்றால் இவற்றையெல்லாம் படங்களுடன் தலைப்புச் செய்திகளாக முதல் பக்கதிலேயே வௌதயிடுவதுதான். இவைகளை வௌதயிடுவதால் நம் தமிழகத்திற்கு என்ன பயன்?. செய்தித்தாள்களின் தரம் என்பது அன்றாட நாட்டு நடப்புக்களை உலகுக்கு சொல்வதோடு மட்டுமல்லாமல் நல்ல பயனுள்ள, சிந்திக்கவைக்கக்கூடிய கட்டுரைகளையும், கருத்தாய்வு களையும் வௌதயுட்டு மக்களிடம் உலகளாவிய சிந்தனைகளை வளர்ப்பதாக இருக்கவேண்டும். அதுவே பத்திரிக்கை தர்மமும் நீதியும் ஆகும். சமூகப்பொறுப்புள்ள எந்த செய்தித்தாளும் இதைதான் செய்யும். ஆனால் நான் மேற்கூறிய “விஷம்” இலவசங்களுடன் பரவி மக்களின் செய்தித்தாள் அறிவை மட்டமாக்கி அவர்களிடம் எந்த உலகளாவிய சிந்தனைகளும் தோன்றாமல் பார்த்துக்கொள்கிறது. இதனால் அச்செய்திதாளுக்கும் அது சார்ந்த கட்சிக்கும் தான் லாபமே தவிர நம் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லைஇ மாறாக நம் மக்கள் வெறும் பணம் சம்பாதிக்கும் எந்திரங்களாகஇ சுயநலவாதிகளாக மட்டுமே இருப்பார்களே தவிர சிந்திக்கின்ற உண்ர்ச்சியுள்ள, போராடும் குணமுள்ள,பொதுநலனில் அக்கரை உள்ள, மனித நேயமிக்க,சமூகப்பொறுப்புள்ள மற்றும் உலகளாவிய சிந்தனைகளை உள்ளடக்கிய சிறந்த கலாச்சாரத்தில் இருந்து வந்த நல்ல குடிமக்களாக இருக்க மாட்டார்கள்.உதாரணமாக இன்று குடியரசுதினம். இன்றைக்கு வௌதவந்த செய்தித்தாள்கள் அணைத்தும் குடியரசுதின நிகழ்ச்சிகளையும் நம் ஜனாதிபதி மற்றும் ஆளுனர் அவர்கள் நாட்டுமக்களுக்கு சொன்ன செய்தியையும் தான் தலைப்பு செய்திகளாக வௌதயிடுவாரகள். ஆனால் “தமிழ் முரசு” என்ற தரமற்ற முரசில் “பள்ளி மாணவிகளை மயக்கி செல்போனில் ஆபாச வீடியோஇ பிடிபட்டது ஆபாசக்கும்பல்” என்ற செய்திதான் தலைப்பு செய்தியாக வந்துள்ளது. இவர்களுக்கு இதற்கு முன்னர் இத்துறையில் அணுபவம் உள்ளதா? அல்லது “நீலப்படம்” எடுக்கும் கும்பலில் இருந்து பிரிந்து வந்து இந்த பத்திரிக்கையை ஆரம்பித்தார்களா? என்றே புரியவில்லை.

  8. // ஆனால் அறிவுமதியின் கவிதைமீது துப்புவதற்குமுன் யோசியுங்கள் //
    அறிவுமதியின் கவிதைத்திறனின் மேல் எனக்கு ஒரு விமர்சனமும் இல்லை ஸ்ரீரங்கன். ஆனால் கவிஞர் என்பதற்காக கவுரப்படுத்தப்படும் ஒரு விழாவில் இவர் பேசும் அரசியலை குறித்த எனது விமர்சனமே அது.. மண்ணின் மைந்தனை வட நாட்டு நடிகையிடம் மன்னிப்பு கேட்க வைத்தது என்பதை ஒரு குற்றச்சாட்டாக வைக்கும் அவருக்கு சிந்தனையாளர் பட்டம்.. கவிஞர் அறிவுமதியின் எச்சரிக்கை என்ற பெயரில் இருக்கும் இந்த அறிக்கை முழுவதுமே ஒரு உளறலாகவே எனக்கு படுகிறது.

  9. Unknown's avatar முத்துகுமரன்

    //ஒரு உளறலாகவே எனக்கு படுகிறது//

    முதல்ல தெளிவா படி

  10. —-ஒரு மட்டமான விமர்சனத்தை தேடி எடுத்து இருமுறை வெளியிட்டது—

    தங்களின் பதிலுக்கு நன்றி. ‘விமர்சனம்’ என்பதை பத்திரிகையின் கருத்தாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது மாற்று சிந்தனையை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்காக வேறொருவரின் op-edகளை வெளியிடலாம். (குறிப்பிட்ட விமர்சனத்தைப் படிக்கவில்லை.)
    —–

    இந்த செய்தியில் அறிவுமதியின் பேச்சு பதிவு செய்யப்பட்டிருக்கும். (இதை விமர்சனத்துடன் ஒப்பிட முடியாது.) அவர் சொல்லாத ஒன்றை சொன்னதாகத் திரித்திருக்க மாட்டார்கள்.

    * விஜய்காந்த்துக்கும் அறிவுமதிக்கும் ‘முரண்பாடு’ இருப்பதாக நிறுவுவதுதான் இந்த செய்தியின் குறிக்கோள். சிந்தனையாளர்களுக்கும் நடிகர்களுக்கும் முரன்பாடு என்று உணரப்படுமாறு ‘துணைத் தலைப்பு’ – எச்சரிக்கை கையாளப்பட்டுள்ளது.

    ‘காறித் துப்புவார்கள்’ போன்ற சொல்லாட்சி ‘எச்சரிக்கை’ என்று உருமாறுவதை ஒத்துக் கொள்ளலாம். விருது வழங்கிய ஒருவர் விஜய்காந்த்தை வெறுக்கிறார் என்பதை குறிப்பால் உணர்த்துகிறார்கள்.

    * ‘தமிழனின் தன்மானம்’ என்று உசுப்பேற்றி எமோஷனலாக வைப்பது இரண்டாவது குறிக்கோள். (மண்ணின் மைந்தர் தப்பு செஞ்சா வடநாடு என்ன? அயல்நாடு என்ன? மன்னிப்பு கேட்பதுதானே முறை?)

    * ‘ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என்று மக்களிடம் ரஜினி பயத்தை ஏற்படுத்தியது போல் ரைமிங்காக ‘கடலூர் மாவட்டத்தை காறித் துப்புவார்கள்’ என்று அச்சுறுத்தலுக்கு லைம்லைட் கொடுக்கிறார்கள்.

    அறிவுமதியின் பேச்சு ஒலிக்கோப்பாக கிடைத்தால் தமிழ் முரசு எவற்றையெல்லாம் சாய்ஸில் விட்டிருக்கிறது என்பது தெளிவாகும்.

  11. // முதல்ல தெளிவா படி //

    தம்பீ முத்துக்குமரன்,

    கண்ணில் விளக்கெண்ணெய் வழிய வழிய தெளிவாக படித்தேன்… அப்படியும் உளறலாகத்தான் தோன்றுகிறது… ஒரு வேளை எனக்கு திரைப்பட இயக்குனராகும் ஆசை வருமானால் அப்பொழுது கண்டிப்பாக அண்ணனின் இந்த அறிக்கை கவிதையாக தோன்றும்… அப்பொழுது அண்ணனின் இந்த அறிக்கவிதை பற்றி தனிப்பதிவு எழுதி உணர்ச்சி வசப்பட்டுக்கொள்கிறேன்… அதுவரை அண்ணனின் அறிக்கை எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை பொதுவில் எழுதிக்கொள்ள தம்பிகள் அனுமதி தருமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்…

  12. Unknown's avatar மாயவரத்தான்...

    அறிவுமதி திரைப்பட பாடலாசிரியரா? ‘நான் இனிமே சினிமாவுக்கு பாட்டெல்லாம் எளுத மாட்டேன்..என்னோட ரேஞ்சே வேற’ என்று பீலா விட்டு ஓடிப் போனவராச்சே..இன்னும் திரைப்பட பாடலாசிரியர் அப்படீன்னு சொல்றாங்களே..அதான் கேட்டேன்! (சினிமாவை விட்டு அவரா ஓடினாரா? இல்லாட்டி எல்லாரும் தொறத்திட்டாங்களா?) மீசையில மண்ணு ஒட்டலைன்னு அவரு முந்திக்கிட்டாரா?

  13. //பாட்டெழுதி என்ற போர்வையில் வெறுமே உளறி பேர் வாங்கும் முயற்சியிலும் சிலவர்கள் இருக்கிறார்கள்//

    //அறிவுமதியின் கவிதைத்திறனின் மேல் எனக்கு ஒரு விமர்சனமும் இல்லை ஸ்ரீரங்கன்//

    well done

  14. Unknown's avatar அப்பாவித்தமிழன்

    முகமூடி அவர்களே,

    “வாடி வாடி நாட்டுக்கட்டை” போன்ற தமிழச்சிகளை பெருமைபடுத்தும் கவிதைகளையும்,”கண்ணாலே மிய்யா, உள்ளே ஓர் உய்யா,உய்யா” போன்ற கருத்துசெறிவு மிகுந்த பாடல்களையும் எழுதி தமிழை வாழ வைத்துக்கொண்டிருக்கும் அண்ணன் அறிவும”தீ” யை விமர்சிக்கும் உங்களை, 300-ஆவது வட்ட தம்பிகளின் சார்பாக கடுமையாக எச்சரிக்கிறேன்.

  15. Unknown's avatar லக்கிலுக்

    ஜெயக்குமார் தமிழ் முரசைப் பற்றி நீங்கள் சொன்ன விமர்சனங்கள் அனைத்துமே தினமலருக்கும் பக்காவாக பொருந்துகிறதே… எப்படி?

  16. Unknown's avatar ஜெயக்குமார்

    / தமிழ் முரசைப் பற்றி நீங்கள் சொன்ன விமர்சனங்கள் அனைத்துமே தினமலருக்கும் பக்காவாக பொருந்துகிறதே./

    தமிழ் முரசையும் தினமலரையும் ஒப்பிடுவது முட்டாள்தனமானது. தமிழ் முரசு வெறும் பரபரபிற்காக வெளியிடும் நான் சுட்டிக்காட்டியுள்ள ஆபாசத்தகவல்கள், தினமலர் நாளிதளில் வெறும் துக்கடா செய்தியாகத்தான் வெளியிடுவார்களே தவிர ஆபாசப்படத்துடன் தலைப்புச்செய்தியாக வெளியிட மாட்டார்கள். தமிழ்முரசு போன்ற பத்திரிக்கைகளை படித்து வளர்ந்த உங்களுக்கு எந்த பத்திரிக்கையைப்பார்த்தாளும் அது போன்ற செய்திகளைத்தான் தேடச்சொல்லும். ஆதாவது காமாலைக்காரனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சலாக தெரிவது மாதிரி.

    தமிழ் முரசில் இப்பொது தேர்தல் காரணமாக இதுபோன்ற ஆபாச செய்திகளும், படங்களும் வருவதில்லை, இன்னும் இரண்டே மாதங்கள் பொருத்திருக்கவும் அப்புறம் நீங்கள் luky-யோ luky தான்.

    தினமலர் பத்திரிக்கைப்பற்றி நீங்கள் சொல்லியுள்ளதால் நானும் சில்வற்றை குறிப்பிட விரும்புகிரேன். தினமலர் அணைத்து தரப்பு செய்திகளையும்(அரசியல், சமூகம், இலக்கியம்,கல்வி,விஞ்ஞானம்,ஆன்மீகம்,விளையாட்டு) ஓரளவுக்கு பாரபட்சமின்றியும் நியாயமாகவும் வெளியிடுகிறது. சிறுவர்களுக்காக வெளியிடும் சிறுவர்மலரில் சிறுவர்களுக்கு நல்ல தகவல்களை தருகிறது. பெரியவர்களுக்கா வெளியிடும் வாரமலரில் உங்களைப்போன்றவர்களுக்காக துணுக்குமூட்டையும் எங்களைபோன்றவர்களுக்காக திண்ணை, கவிதைப்பக்கங்களையும் வெளியிடுகிறது. தமிழ்முரசு மாதிரி தினமும் இரு பக்கங்களுக்கு துணுக்குமூட்டைகொடுத்து உங்கள் அறிவை வளர்க்கும் சாமர்த்தியம் அவர்களுக்கு இல்லை.

  17. Unknown's avatar ஜெயக்குமார்

    / தமிழ் முரசைப் பற்றி நீங்கள் சொன்ன விமர்சனங்கள் அனைத்துமே தினமலருக்கும் பக்காவாக பொருந்துகிறதே./

    தமிழ் முரசையும் தினமலரையும் ஒப்பிடுவது முட்டாள்தனமானது. தமிழ் முரசு வெறும் பரபரபிற்காக வெளியிடும் நான் சுட்டிக்காட்டியுள்ள ஆபாசத்தகவல்கள், தினமலர் நாளிதளில் வெறும் துக்கடா செய்தியாகத்தான் வெளியிடுவார்களே தவிர ஆபாசப்படத்துடன் தலைப்புச்செய்தியாக வெளியிட மாட்டார்கள். தமிழ்முரசு போன்ற பத்திரிக்கைகளை படித்து வளர்ந்த உங்களுக்கு எந்த பத்திரிக்கையைப்பார்த்தாளும் அது போன்ற செய்திகளைத்தான் தேடச்சொல்லும். ஆதாவது காமாலைக்காரனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சலாக தெரிவது மாதிரி.

    தமிழ் முரசில் இப்பொது தேர்தல் காரணமாக இதுபோன்ற ஆபாச செய்திகளும், படங்களும் வருவதில்லை, இன்னும் இரண்டே மாதங்கள் பொருத்திருக்கவும் அப்புறம் நீங்கள் luky-யோ luky தான்.

    தினமலர் பத்திரிக்கைப்பற்றி நீங்கள் சொல்லியுள்ளதால் நானும் சில்வற்றை குறிப்பிட விரும்புகிரேன். தினமலர் அணைத்து தரப்பு செய்திகளையும்(அரசியல், சமூகம், இலக்கியம்,கல்வி,விஞ்ஞானம்,ஆன்மீகம்,விளையாட்டு) ஓரளவுக்கு பாரபட்சமின்றியும் நியாயமாகவும் வெளியிடுகிறது. சிறுவர்களுக்காக வெளியிடும் சிறுவர்மலரில் சிறுவர்களுக்கு நல்ல தகவல்களை தருகிறது. பெரியவர்களுக்கா வெளியிடும் வாரமலரில் உங்களைப்போன்றவர்களுக்காக துணுக்குமூட்டையும் எங்களைபோன்றவர்களுக்காக திண்ணை, கவிதைப்பக்கங்களையும் வெளியிடுகிறது. தமிழ்முரசு மாதிரி தினமும் இரு பக்கங்களுக்கு துணுக்குமூட்டைகொடுத்து உங்கள் அறிவை வளர்க்கும் சாமர்த்தியம் அவர்களுக்கு இல்லை.

  18. Unknown's avatar விடாதுகருப்பு

    //தமிழ் முரசையும் தினமலரையும் ஒப்பிடுவது முட்டாள்தனமானது//

    நல்லா இருக்கு சார் உங்க நியாயம். அது திமுகவுக்கு உழைக்குது. இது அதிமுகவுக்கு உழைக்குது. வேறு எந்த வித்தியாசமும் எனக்குத் தெரியவில்லை.

    ஒருவேளை உங்களுக்குத் தெரிந்து இருந்தால் நீங்க மனுஷன் இல்ல சார்… அதுக்கு மேல!

  19. Unknown's avatar ஜெயக்குமார்

    /அது திமுகவுக்கு உழைக்குது. இது அதிமுகவுக்கு உழைக்குது./

    தமிழ்(தரமற்ற)முரசு-க்கும் திமுக-வுக்கும் சம்பந்தம் உண்டு. அது கருணாநிதியின் குடும்பப்பத்திரிக்கை. அதிமுக-வுக்கும் தினமலருக்கும் என்னையா சம்பந்தம்.

  20. Unknown's avatar இரா.சுகுமாரன்

    //தமிழ்முரசு போன்ற ஒரு மட்டமான, கீழ்த்தரமான பத்திரிக்கையில்//

    நமது எம்.ஜியாரில் வந்தால் ஒத்துக்கொள்வீர்களா? எந்த பத்திரிக்கை என்பதல்ல செய்தி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதே செய்தி
    வெளியிட்டவர்களுக்கு நன்றி! தொடர்ந்து இவ்வகையான செய்திகளை வெளியிடவும். தழிழர்களுக்கு ஆதவராக அறிவுமதியின் எச்சரிக்கை சரியான நேரத்தில் சரியான தகவல்.

    அறிவுமதியை பற்றி அறிவு குறைவானவர்கள் புறிந்துகொள்ள முடியாது.

  21. Unknown's avatar ஜெயக்குமார்

    /ஒருவேளை உங்களுக்குத் தெரிந்து இருந்தால் நீங்க மனுஷன் இல்ல சார்… அதுக்கு மேல!/

    “விடாது கறுப்பு” அவர்களே, ஆம் நாங்கள் உங்கள் தேசத்து மனிதர்கள் அல்ல. உயிரோட்டம் உள்ளவர்கள்.

  22. Unknown's avatar மீட்டர் முருகேசன்

    /தினமலருக்கும் என்னையா சம்பந்தம்./

    அம்மா ஜாதிக்கும் தினமலர் ஜாதிக்குமான சம்பந்தமோ?

    தினமலர் அணைத்து தரப்பு செய்திகளையும்(அரசியல், சமூகம், இலக்கியம்,கல்வி,விஞ்ஞானம்,ஆன்மீகம்,விளையாட்டு) ஓரளவுக்கு பாரபட்சமின்றியும் நியாயமாகவும் வெளியிடுகிறது. சிறுவர்களுக்காக வெளியிடும் சிறுவர்மலரில் சிறுவர்களுக்கு நல்ல தகவல்களை தருகிறது. /

    தினமலர் ஜாதி ப்ளாக்குளதான் அதிகமா பேசுக்கும் எங்குறாங்கலே

    /பெரியவர்களுக்கா வெளியிடும் வாரமலரில் உங்களைப்போன்றவர்களுக்காக துணுக்குமூட்டையும் எங்களைபோன்றவர்களுக்காக திண்ணை, கவிதைப்பக்கங்களையும் வெளியிடுகிறது./

    அட நீங்கலும் மூலைக்கு மூலை மீட்டர் தேமா பேசுற கவி ஜாதிதானா? என்னங்க பெரிசா பொளந்த வித்தியாசம். மூட்டையாப் போட்டா துணுக்கு. மூனுவரியல போட்ட கவிதை

  23. Unknown's avatar சோழநாடன்

    //////// அதிமுக-வுக்கும் தினமலருக்கும் என்னையா சம்பந்தம்.////

    ஜெயகுமார் மெய்யாலுமே என்ன சம்பந்தம்மின்னு தெரியாதா???? நீங்க ரொம்ப பச்ச கொழந்த பாருங்க. அதான் தெரியல… பாவம் ராசா

  24. Unknown's avatar ஜெயக்குமார்

    திரு மீட்டர் முருகேசன் அவர்களே,

    எனக்கு ஒரு சந்தேகம்,

    நீங்கள் மில்லி மீட்டர் முருகேசனா?
    இல்லை சென்டிமீட்டர் முருகெசனா? அல்லது டெசிமீட்டர் முருகேசனா?

  25. Unknown's avatar மீட்டர் முருகேசன்

    திருநிறைசெல்வர் ஜெயக்குமார் விஜய்காந்த் அரிவுமதி பேச்சை திசை திருப்பவேணாமேன்னு பாக்குரேன். இல்லேன்னா யொக்டோமீட்டர்ல தொடங்கி யொக்டாமீட்டர்வரை டாக்சி சார்ஜ் பண்ணுவேன். மழலை வாணாம். வேணூன்னா சாத்தமுது முருகேசன்னோ பஞ்சாமிர்தம் முருகேசன்னோ டெம்பவரியா வெச்சுக்கோப்பா. தினமலர் ஜெ சம்பந்தம் புரிஞ்சுக்கிட்டா சரிதேன்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.