Intellectuals should be Elected Unopposed?


இவர்கள் சட்டப்பேரவைக்குப் போவது சாத்தியமா?

கடந்த கால ஆட்சியில் மீண்டும் செப்பனிட முடியாத அளவுக்கு தமிழகத்தில் கேடுகள் நிறைந்துவிட்டன. இந்த கேடுகளை களைய வேண்டுமானால் இப்படிப்பட்டவர்கள் தான் சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும். அவர்கள் எல்லாம் போட்டியிட்டு செல்வது என்பது இந்த யுகத்தில் நடக்காது. எனவே அவர்களை போட்டி இல்லாமல் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று யோசனை கூறியுள்ளது MS Uthayamoorthy தலைமையிலான மக்கள் சக்தி இயக்கத்தின் நாமக்கல் கிளை.

இதன்படி போட்டி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்கள் யாரெல்லாம் தெரியுமா?

ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் பொறியாளர் சி.எஸ். குப்புராஜ், உந்துனர் அறக்கட்டளை அ.கி. வேங்கடசுப்ரமணியன், கல்வியாளர் வா.செ. குழந்தைசாமி, சிலம்பொலி செல்லப்பன், ஆனந்தகிருஷ்ணன் – இப்படி நீண்டுகொண்டே போகிறது.

சரி – அப்படி என்ன கேடு ஏற்பட்டுவிட்டது தமிழகத்துக்கு? கேடுகள் குறித்தும் நீண்ட பட்டியல் போட்டுள்ளது அந்த இயக்கம். அவற்றில் சில:

  • முல்லைப்பெரியாறு, காவிரி ஆறுகளின் தமிழக பங்கு பறிபோய்விட்டது. தமிழகத்துக்கு வரவேண்டிய பல பெரிய திட்டங்கள் வேறு மாநிலங்களுக்குப் போய்விட்டன.
  • ஆறுகளில் படிந்திருந்த மணல் அள்ளப்பட்டு ஆறுகளின் பயன்பாடு மனித சமுதாயத்துக்கு கிட்டாமல் போய்க் கொண்டிருக்கிறது.
  • பண வசதி படைத்தோருக்கு மட்டுமே உயர்கல்வி என்றாகிவிட்டது.

    அரசியல் நோக்கம் ஏதுமின்றி, பொதுவான சிந்தனை உள்ள நிபுணர்கள் சட்டப் பேரவைக்குச் சென்றால், மக்கள் நலனில் அக்கறையுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று இந்த அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    போட்டியில்லாமல் இதுபோன்ற நிபுணர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது சாத்தியமாகுமா?

    Thanks : Thinamani

  • 3 responses to “Intellectuals should be Elected Unopposed?

    1. Intellectural என்று யாரைக்குறிப்பிடுகிறீர்களோ அவர்களெல்லாம் முதலில் அரசியலுக்கு வரவிரும்புகிறார்களா? தேர்தலில் வெற்றிபெறுவோமா என்ற ஐயப்பாடு மாத்திரமே அவர்கள் வரத்தயங்குவதற்குக் காரணமல்ல. ஒருவேளை தேர்ந்தெடுக்கப்பட்டாலும், சட்டசபையிலோ, நாடாளுமன்றத்திலோ `தனியொருவராய் என்ன பண்ணமுடியும்’ என்ற யதார்த்த நிலையை உணர்ந்தமைதான்.

      ஒரு நல்ல அரசியல்வாதிக்கு உறுதுணையாக, ஆலோசகராக வேண்டுமானால் இருக்கலாம். நேரடி அரசியலுக்கு வந்த அறிவுஜீவிகள், சராசரி அரசியல்வாதிகளைவிட சில சமயங்களில் தரம் தாழ்ந்துபோயிருக்கிறார்கள் (ஒரு காலத்தில் சு.சாமி அறிவுஜீவியாகக் கருதப்பட்டதை உதாரணமாகச் சொல்லலாம்).

      அதுபோகட்டும், முதலில், state first rank வாங்குபவர்கள் யாரையாவது கேளுங்கள், நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்று. ஒருத்தரும் சொல்லமாட்டார், தான் அரசிலுக்கு வரவேண்டும் என்று.

    2. —தனியொருவராய் என்ன பண்ணமுடியும்—

      இப்படி யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றாலே அவர்கள் தேர்தலில் நிற்பது/சட்டசபையில் செயலாற்றுவது எல்லாமே இயலாத ஒன்றாகிவிடுமே.

    3. Atimes ppl get confused by the real meaning of Intellectual otherwise they wouldn’t have allowed Kamaraj to lose the election or Kakkan needn’t died in Govt. Hospital with no body to look after him!!!. This is tamilnadu.

    பின்னூட்டமொன்றை இடுக

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.