Freebie Politics


Dinamani.com – Editorial Page

சுமை யாருக்கு? – என்.ஆர். ஸத்யமூர்த்தி, பெங்களூர்.

அரசுகள் சலுகைகளை அள்ளிவிடும்போதும் தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதிகளை வழங்கும்போதும் இதற்கான செலவு, பெரும்பாலும் நடுத்தர வகுப்பினரின் மீதான சுமைதான் என்பது உணரப்படுவதில்லை.

திமுகவின் தேர்தல் அறிக்கையை எடுத்துக்கொண்டால், நெசவாளருக்கு இலவச மின்சாரம், இறந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை, இறந்த விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் ரத்து என்பன போன்றவை வரவேற்கத்தக்கன மட்டுமல்ல, சாத்தியமானவை. ஆனால், இருபது ரூபாய்க்கு விற்கும் அரிசியை இரண்டு ரூபாய்க்குக் கொடுப்பது, வீடுதோறும் இலவசக் கலர் டி.வி; இலவச கேஸ் இணைப்பு ஆகியவை தேவையற்றவை, நியாயமற்றவை. இருக்கின்ற கேஸ் இணைப்புகளுக்கே, அடிக்கடி கேஸ் தட்டுப்பாடு! இதற்கான மிக அதீதமான செலவுகளை நடுத்தர வர்க்கத்தினர்தான், பல வரிகள் மூலமாகச் செலுத்த வேண்டும்.

இறந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கரிசனம், தமிழ்நாட்டில் அஞ்சல்துறையில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு ஏழாண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காத விஷயத்தில் ஏன் காட்டப்படவில்லை?

இலவசக் கலர் டி.வி போன்ற சலுகைகளைவிட, தமிழ்நாட்டின் கிராமப்புறத்துப் பள்ளிகளில் 20 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் அமர்த்துவோம், கட்டடம் தருவோம், மருத்துவமனைகளில் லஞ்சமற்ற சேவைகளை உறுதி செய்வோம், ஒரு வன்னியரோ மற்றவரோ அந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்ற எளிய சான்றளிக்க ரூ. 500 முதல் ரூ. 700 வரை செலவு செய்ய வேண்டியிருக்கும் கொடுமையைக் கொளுத்துவோம், தமிழ்வழிக் கல்வியே பெறுவோம் என்ற உறுதிகள் தேர்தல் அறிக்கையில் இல்லாதது வேதனைக்குரியது.

எனவேதான், இக்கூட்டணிகளின் பதவிப்போட்டிகளுக்கு இரையாகாமல், மற்ற கட்சிகளின், சுயேச்சைகளின் நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பது தேவையாகிறது.

One response to “Freebie Politics

  1. சன் டி.வி. வேறு பே சானல் ஆகப் போகிறது. இந்நேரத்தில் “இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி” போன்ற அறிவிப்பு திடுக்கிடத்தான் வைக்கிறது.

    சூரியன் FMஐ கேட்க வைக்க (அந்த அலைவரிசை மட்டும் எடுக்கும் வகையில் தயாரித்த) இலவச வானொலி போன்ற திட்டமோ என்று எனக்கு தோன்றுகிறது.

    “for FY07 the money-driver would be the main Sun TV going pay, where they expect to earn about Rs 67-68 crore of additional profits in FY07 and Rs 90 crore in FY08.”

    http://news.moneycontrol.com/india/newsarticle/stocksnews.php?autono=208496

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.