விகடனும் விஷமும் – கருணாநிதி


சென்ற வார விகடனில், சிரிப்பு நடிகர் செந்தில் – கருணாநிதியை ‘ஏய் கருணாநிதி’ என்றும் ‘ஒண்டிக்கு ஒண்டி’ அழைத்து மேடையில் பேசியதை அட்டைப்படத்தில் வெளியிட்டு விகடனும் விஷம் கக்க ஆரம்பித்துள்ளது என்றபடி உடன்பிறப்புக்கு சீறச்சொல்லும் மு.கவின் மடல்.. வலைப்பதிவர் பார்வைக்கு. (செந்தில் போன்றவர்கள் இவ்வாறு பேசுவது அதுவும் வயதில், அரசியலில் மூத்த ஒரு தலைவரை பேசுவது ஹும். அதற்கு விகடனும் பப்ளிசிடி கொடுப்பது அதைவிட டூமச். விகடன் இனிமேல் ‘கக்குகிறான் கணேஷ்’ மாதிரி கவர் ஸ்டோரிகள் வெளியிடுவதுதான் சரி இல்லை நமீதா, ஸ்ரேயா படங்கள் வெளியிட்டு புண்ணியம் தேடிக்கொள்ளட்டும்.

-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0–0-0-0-0-0-0-0-0-0-0-0-0-

Click the link below for full view.
நன்றி: தினகரன்: 24-பிப்ரவரி 2006

8 responses to “விகடனும் விஷமும் – கருணாநிதி

  1. “வஞ்சகர் வந்தவர் தமிழால் செழித்தார்
    வாழ்வினில் உயர்ந்த பின் தமிழர் தலைவர்களையே பழித்தார்”

    இன்னமும் எத்தனை நாள்களுக்குத்தான் கருணாநிதி இந்தப் பழைய பஜனையையே செய்துகொண்டிருப்பார்?

    அவலை நினைத்து உரலை இடிப்பதுதான் தலைவருக்கு வாடிக்கை…

  2. “கிழித்தெறியத் தேடுது காண்பகைக் கூட்டத்தை ..”

    —- உடன்பிறப்புகளை ஆ.வி பத்திரிக்கையை கிழித்தெறியச் சொல்கிறாரா ??

    “வளம் பெரிய தமிழ்நாட்டில் தமிழரல்லார் வால் நீட்டினால்..”

    —- ஆ.விக்காரர்கள் தமிழர்கள் இல்லையாமா ? கைபர் வழிக் காரர்களா ?

    மறுபடியும் ஆரம்பித்துவிட்டார். உடனே சன்டிவி, தமிழ் முரசு போன்றவற்றில் விகடன் எதிர்ப்பு விஷயங்கள் அதிகம் எதிர்பார்க்கலாமோ ?

    என்னமோ போங்க.

  3. கருணாநிதியின் வழக்கமான் புலம்பல்தான். கண்டுகொள்ள வேண்டியதில்லை. அடுத்து ஒரு கலைஞர் பேட்டி போட்டா எல்லாம் சரியா போகும்.

    அதே நேரத்துல செந்தில் பேச்சில் இருக்கும் முதிர்ச்சியின்மையும்….அதைப் போய் முன்னிலைப் படுத்திய விகடனும்…ம்ம்ம்….விகடனிடத்திலும் தவறு உள்ளது.

  4. வழக்கமான கருனாநிதி ஸ்டைல்!

    “கறுப்பு-சிவப்பு கொடிகளோடு” திறண்டு வாருங்கள் என்றால் யாரையாவது அடிக்க பெரிய கம்புகள் கொண்டு வாருங்கள் என்று அர்த்தமாம்.

    அனேகமாக வருகிற தேர்தலில் தி.மு.க வெற்றி அடைய முடியாவிட்டால் அதற்க்கு பாதி காரனம் சன்.டி.வி ஆக தான் இருக்கும்

  5. Unknown's avatar முத்து(தமிழினி)

    என்னங்க இது …செந்தில் எல்லாம் ஒரு அரசியல்வாதின்னு அவர் பேசுவதை எல்லாம் அட்டையில் போட்டு விகடன் வம்பு பண்ணலாமா?

    கலைஞர் என்றதால் கட்டுரையோடு போயிற்று….மற்றவர்களாக இருந்தால் ஆட்டோ வந்திருக்கும்:)))

    என்ன பத்ரி நீங்களுமா?

  6. “ஏய் ஜெயலலிதா…!” என்று அட்டையில் போட தைரியம் இருக்குமா விகடனுக்கு ?

  7. I guess Vikatan is modified version of Murasoli.I can quote plenty of examples. Kalaignar wants to make us believe Vikatan as his opposition group.But the bottom line is Kalaignar needs vikatan and Vikatan group needs SUN TV Slots for their tele serials.

  8. Unknown's avatar மாயவரத்தான்...

    செந்தில் பேசியது கண்டிக்கத்தக்கது தான். அதே நேரத்தில் யாரோ ஒரு தொண்டர் ஓடி வந்து, ‘என்ன தலைவா எவனோ ஒரு கிறுக்கன் இப்படி பேசியிருக்கிறான்?’ என்று இவரிடத்திலே சொன்னதாக இவர் எழுதியது மட்டும் நியாயமா? செந்திலை அவன், இவன், கிறுக்கன் என்று சொன்னதிலிருந்தே (தொண்டன் சொன்னாலும் அதை எடுத்து எழுதியது இவர் தானே?) செந்திலும், இவரும் ஒரே தட்டில் அமர்ந்து விடுகிறார்களே. நாளைக்கு வேறொரு தொண்டன் இதே டயலாக்கை செந்திலிடம் போய்ச் சொன்னால்?!

    கருணாநிதிக்கு வயசாகிடிச்சு!

Gopalan Ramasubbu -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.