இமேஜா, அதிக இடங்களா என்று யோசித்து விட்டு இமேஜ் தான் முக்கியம் என்று வைகோ முடிவு செய்து விட்டார் என தெரிகிறது. திமுக கூட்டணியில் முன்பு கூறியதை விட சற்று அதிக இடங்களை வைகோ பெறக் கூடும். அந்த வகையில் வைகோவின் எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது.
வைகோவின் முடிவு திமுக கூட்டணியை வலுவாக்கும். திமுகவை கோட்டையின் அருகே இந்த முடிவு அழைத்து சென்றிருக்கிறது என்று சொல்லலாம்.
திமுகவின் தலைமையை (கலைஞர், ஸ்டாலின்) பலப்படுத்துவதாக உள்ள இந்த முடிவு வைகோவின் எதிர்காலத்திற்கு எந்தவகையில் உதவி செய்யும் என்பதும் விவாதத்திற்குரியது. திமுக ஆளும்கட்சியாக இருக்கும் பட்சத்தில், எத்தகைய சூழ்நிலையிலும் திமுகவில் விரிசல் ஏற்படாது என்று உறுதியாக சொல்லலாம்.
அதே சமயத்தில் வைகோவின் இந்த முடிவு திமுக தொண்டர்கள் மத்தியில் வைகோவின் மரியாதையை உயர்த்தும்.
வைகோவின் அறிக்கை
அரசியல் நாணயத்தையும் நாகரிகத்தையும் கட்டிக் காக்கும் உன்னதமான குறிக்கோளோடு கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற ம.தி.மு.க., இந்த அரசியல் பண்பாட்டைப் பாதுகாக்கக் கொடுத்து இருக்கின்ற விலை அதிகமாகும்.
இதற்காக ஏற்றுக்கொண்ட துன்ப துயரங்கள் ஏராளம். அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி என்ற தாரக மந்திரத்தை நிலை நாட்டவும், செயல்படுத்தவும் குறுகிய தற்காலிக லாபங்களைக் கருதாமல், நாடாமல் தமிழகத்தின் உயர்வையும் திராவிட இயக்கத்தின் நலனையும் உயிராகக் கருதி இயங்கி வருகிறோம்.
கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணியை விட்டு விலகிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டபோதும்கூட சட்டமன்றத்தில் சில இடங்கள் கிடைத்தால் போதும் என்று கருதி இன்னொரு கூட்டணியில் இடம் பெற எண்ணிடவும் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டுவது அவசியம் ஆகும்.
அரசியல் நாணயத்தையும் அரசியல் நாகரிகத்தையும் இரு கண்களாகப் போன்றுகின்ற இயக்கம்தான் ம.தி.மு.க. என்பதைக் கடந்த 17 ஆண்டுகளின் செயல்பாடுகள் திட்டவட்டமாக விளக்கக் கூடியவை ஆகும்.
பொது வாழ்வைப் பாழ்படுத்தும் அரசியல் வர்த்தகச் சூதாட்டத்தை அறவே அகற்றுவதே எங்கள் நோக்கம். ஒளிவு மறைவு இன்றி, எடுக்கின்ற முடிவுகளைச் செயல்படுத்தும் திறந்த புத்தகமாகவே ம.தி.மு.க. திகழ்கிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் ம.தி.மு.க., அக் கூட்டணியை வலுப்படுத்தவும், தேர்தல் களத்தில் கூட்டணியை வெற்றி பெறச் செய்யவும் உறுதி பூண்டு இருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.












One thing is sure. If he had simply continued in DMK allaiance, he would have been considered as extra luggage. But, by keeping silent and finally giving a credible explanation (bottom line, he needs time to convince his second rank leaders who wanted to contest with ADMK), his stock has improved a lot. U have rightly pointed out that his image with DMK people will increase. yes, next time, being in power itself will be a curse for Stalin (if at all he comes to it!) and VaiKo can easily take the second spot if not the first. Happy that, this situation emerged without Vaiko needing to compromise on his honesty/image/idealogy/credibility. The effect of this staement on Amma is eveident as she has again resorted to her gimmick of Makkal Kootani!
நல்ல டிராமா! கொஞ்சம் பொறுங்க…இன்னும் கிளைமாக்ஸ் மிச்சமிருக்குது!
ம.தி.மு.க தமிழக அரசின் உளவுத்துறை மற்றும் ஆளும் கட்சியின் ஆசை வார்த்தைகளால் தடம் புரள நினைத்தது உண்மை. கலைஞர் சரியான நேரத்தில் குரலை உயர்த்தியதும் வைக்கோ தயங்கிய அளவிற்கு அவர் கட்சியினர் தவிக்கவில்லை என்பதே உண்மை.இப்போதும் கூட கலைஞர் ம.தி.மு.க விற்கு 19-22 தொகுதிகளுக்கு மேல் தரப்போவதில்லை.
தேர்தலுக்கு முன்னர் ம.தி.மு.க உடைந்தாலும் உடையலாம். திரு.எல்.கணேசனும், நாஞ்சில் சம்பத்தும் வைக்கோவிற்கு எதிராய் குரலை உயர்த்த வாய்ப்பிருப்பதாகவே கருதுகிறேன்.
ITs more of Pro-Vai-Ko article rather than an analyst POV.
its more of Pro-Vai.Ko perspective rather than analyst POV.