செய்திகள் சொல்வது போல் ஒரு வேளை வைகோ அதிமுக கூட்டணிக்கு மாறிவிட்டால், திமுக கூட்டணிக்கு லாபம்தான்.
1. கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் சட்டமன்றத் தேர்தல்களில் நிரூபிக்கப்படாத கட்சி ம.தி.மு.க ஒன்று தான். இதுவரை தனித்தே போட்டியிட்டு தனது சட்டமன்ற அரசியல் பலத்தை சற்றும் காட்டியிருக்காத கட்சி அது ஒன்று தான். பா.ம.க, காங்கிரஸ், ம.தி.மு.க ஆகியவற்றில் பலம் குறைந்ததும் அது தான்.
2. பா.ம.க, காங்கிரஸ் இரண்டையும் இன்னமும் தொகுதி ஒதுக்கி திருப்தி செய்ய முடியும். அக்கட்சிகளின் தொண்டர்கள் இன்னமும் உற்சாகத்துடன் உழைக்க வழி வகுக்கும்.
3. தி.மு.கவிற்கும் அதிகம் இடங்கள் கிடைக்கும்; தனித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் அதிகமாகும்.
4. பா.ம.க, காங்கிரஸ், ம.தி.மு.க ஆகியவற்றில், அ.தி.மு.கவுடன் மிகக் குறைந்த அளவு பொருந்துவது ம.தி.மு.க தான். அக்கட்சியின் இந்த கடைசி நிமிட முடிவு மக்களிடையே அதன் செல்வாக்கைக் குறைக்கும். ஆதலால், ம.தி.மு.க போட்டியிடும் தொகுதிகளில் அதன் வெற்றி வாய்ப்புகள் குறையும்.
5. அ.தி.மு.க கூட்டணியில் இருந்து கொண்டு வைகோ தான் சிறை சென்று வந்ததைப் பற்றி ரொம்பப் பேசி பிரசாரம் செய்ய முடியாது. அவரது ஒரு முக்கிய பலம் இதனால் குறையும்.
இவை தவிர, இது வைகோவின் எதிர்கால தி.மு.க சார்ந்த திட்டங்களை பாதிக்கும். தி.மு.கவின் எதிர்காலத் தலைமை பற்றிய கொஞ்ச நஞ்ச சந்தேகங்களும் இதனால் கலையும் என்ற அளவில் கலைஞருக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும். மேலும், கடந்த சில நாட்களாக கருணாநிதி ‘தம்பி தன்னைக் கை விடமாட்டான்’ என்ற அளவில் பேசி வருவது, இந்த கூட்டணித் தாவலால் தான் வஞ்சிக்கப்பட்டதாகக் கூறிப் பிரசாரம் செய்யவும் உதவும்.











>>இதுவரை தனித்தே போட்டியிட்டு தனது சட்டமன்ற அரசியல் பலத்தை சற்றும் காட்டியிருக்காத கட்சி அது ஒன்று தான்.<< இந்தத் தகவல் சரியானதல்ல.கடந்த தேர்தலில்,அதாவது 2001ல் மதிமுக தனித்து 211 தொகுதிகளில் போட்டியிட்டது. மாநிலத்தில் பதிவான வாக்குகளில் 4.65 சதவீத வாக்குகள் பெற்றது. (பா.ம.க. 5.56%, த.மா.க.6.73 %) திமுக அணியிலிருந்து மதிமுக வெளியேறினால் அது அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியைக் கூர்மைப்படுத்தும். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அணிக்குக் கிடைத்த தோல்விக்கு கூட்டணிபலம் ஒரு காரணம் என்ற கருத்து நிலவும் நிலையில், கூட்டணி உடைவது, வாக்காளர் மனநிலையில் திமுகவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தும். தனித்துப் போட்டியிட்டால் மதிமுக இடங்கள் எதையும் பெற இயலாது. சட்டமன்றத்தில் நுழையாத பட்சத்தில் கட்சி உறுப்பினர்களைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாது. எனவே அவர் ஏதேனும் ஓர் கூட்டணிக்குள் நுழைந்து கொள்ள முயற்சிப்பார். விஜயகாந்த் கட்சி வேறு ஒரு சவாலாக இருக்கிற நிலையில் அவர் இப்படி ஒரு முடிவு எடுப்பது தவிர்க்க இயலாது. அது அதிமுக கூட்டணி என்றால் திமுகவிற்கு எதிரான வாக்குகள் சிதறாமல் கிடைக்கும் என்பதால் அதிமுக அவரைத் தன் பக்கம் இழுத்துக் கொள்ள முயற்சிக்கும். வைகோ திமுக கூட்டணியை விட்டு வெளியேறினால் அவருக்குப் பலன் கிட்டாது. அதன் பலன் அதிமுகவிற்குப் போகும்
மாலன்,
திருத்தத்திற்கு நன்றி. நான் சொல்ல நினைத்ததைச் சரியாகச் சொல்லவில்லை. இரு பெரிய கட்சிகளைத் தவிர, மற்ற கட்சிகள் கூட்டணியிலிருந்து போட்டியிட்டு, வெற்றி பெற்று “இந்தக் கட்சி கூட்டணியில் இருந்தால், இவ்வளவு வெல்லும்” என்ற அளவில் தமது பலத்தை நிரூபித்திருக்கின்றன – they are known quantities as coalition partners – ம.தி.மு.க அவ்வாறு செய்ததில்லை என்று சொல்லவந்ததைச் சொதப்பலாக சொல்லி விட்டேன். நன்றி.
“2001ல் மதிமுக தனித்து 211 தொகுதிகளில் போட்டியிட்டது. மாநிலத்தில் பதிவான வாக்குகளில் 4.65 சதவீத வாக்குகள் பெற்றது. (பா.ம.க. 5.56%, த.மா.க.6.73 %)”
Above mentioned vote % (பா.ம.க. 5.56% and த.மா.க.6.73 % )is with alliance or without alliance?
Agreed with Maalan
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
வைகோ பேசியிருக்கிறார்..மற்றவை அவரவர் ஊகங்களுக்கு..
//கடந்த சில நாட்களாக கருணாநிதி ‘தம்பி தன்னைக் கை விடமாட்டான்’ என்ற அளவில் பேசி வருவது
//
சென்ற முறை அண்ணன் கைவிட்டதாக வைகோ பேசினார், இப்போது வைகோ வே கூட்டணியை விட்டு விலகுவது போல பேசி வருகின்றார், நிலமை நிச்சயம் வைகோவிற்கு சாதகாமனதாக இல்லை என கருதுகின்றேன்.
மதிமுக எக்ஸ்ட்ரா லக்கேஜா?