‘ஐயா வணக்கம்
நல்லாயிருக்கீங்களா?’
‘ம்’
‘வீட்ல எல்லோரும்
செளக்கியமா இருக்காங்களா?’
‘இருக்காங்க!’
‘இப்ப வீடு எங்க இருக்கு?’
‘திருவான்மியூர்ல!’
‘உங்க கவிதையெல்லாம்
பிரமாதமா இருக்குமே…
தொகுதியா வந்திருக்கா?’
‘இல்ல!’
‘உங்க திறமை
எனக்கு தெரியும்
நல்லா வருவீங்க!’
‘நன்றி’
‘அடடா உங்க கூட ஒரு நிமிஷம்
பேசக் கூட முடியல பஸ் வந்துடுது
வரட்டுமா?’
‘நல்லது!’
அடுக்கடுக்காக என்னை
நலம் விசாரித்துவிட்டுப் போகிறான்
அவன்.
அன்பான விசாரணைகளை
இறுகிய முகத்துடன் எதிர்கொள்வதாக
என்னிடம் வருத்தப்பட்டுக் கொள்கிறான்
இவன்.
எப்படிச் சொல்வது இவனுக்கு?
சொல்லப்பட்டவைகளை விடவும்
நினைக்கப்பட்டவைகள் தான்
எனக்கு நன்றாகக் கேட்கும்
என்பதை.











Good one Balaji.
Thanks for posting this!