Daily Archives: நவம்பர் 21, 2005

குரங்கு கையில் வோர்ட்பிரஸ்

WordPress-இல் இலவசமாக வலைப்பதிய அழைக்கிறார்கள். வலையகம் தோறும் மடல் முகவரி வைத்துக் கொள்வது போல் இங்கும் தொடங்கலாம்.

சில சுவாரசியங்கள்:

  • எழுதியதை துறை வாரியாகப் பிரிக்கலாம்.
  • ஹாலோஸ்கான் போலவே மறுமொழிந்தவர்களின் ஐ.பி.யை தெரிந்து வைத்துக் கொண்டு மோப்பிக்கலாம்.
  • எழுதியவற்றில் ஒரு பகுதியை மட்டும் முகப்பில் காட்டும் வசதி இருக்கிறது. முழு நீளக்கதையையும் முகப்பிலேயே போட்டு பயமுறுத்தாமல், சுருக்கமாக உள்ளிழுக்கலாம்.
  • ஒவ்வொரு பதிவிலும் கொசுறாக Meta (தகவல் குறித்த) தகவல்களை கொடுக்கலாம்.
  • என்னுடைய கையில் மாட்டிய பூமாலையை பார்க்கலாம் 😉
  • மேற்கண்டவாறு இளித்தால் (:-)), சிரிப்பாகவே சிரிக்க வைக்கிறார்கள்!

    சில கடுப்புகள்:

  • இயங்கு எழுத்துரு போட முடியவில்லை.
  • வலப்பக்கம், இடப்பக்கம் என்று படங்களாகவும், இன்ன பிற சேவைகளாகவும் கூட்டி கழிக்க முடியவில்லை.
  • டெம்பிளேட்டில் கை வைக்க முடியவில்லை.
  • கூடிய சீக்கிரமே காசு கேட்கலாம்.
  • TypePadக்கு இணையாகாது.


    | |

  • மாயா

    லோகமே மாயை.

    மேலே இருக்கும் படத்தை அருகில் இருந்து பார்த்தால் ‘கோபமான அன்னியன்’ பீச்சாங்கைப் பக்கமாகவும், சாந்த சொரூபி ‘அம்பி’ வலப்பக்கமும் இருப்பார்.

    கொஞ்சம் அப்படியே 12 தப்படி தள்ளிப் பின்வாங்கினால், சோற்றங்கைப் பக்கமாக கோபாக்காரர் இடம்மாறி பிளவாளுமை காட்டுவார்.

    மாயாவி விமர்சனத்தில் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் பற்றி சொன்னார் மீனாக்ஸ்.

    கடத்தியவனையே கைப்பற்றக் காத்திருக்கிறாள் டினா மரீ ஸ்டெப்பின்ஸ்.

    நிழல் நிஜமாகிறது புகைப்படம்: Phillippe G.Schyns and Aude Oliva
    of the Univ. of Glasgow.

    சுய குறிப்பு; அடுத்த ‘புத்த(க)ம் ச.க.‘யில் எது உண்மை என்று படிக்கலாம்.


    வாரயிறுதி வருத்தம்

    மாச்சு பிச்சுவை நோக்கும் செம்மறியாடு:

    சன் டிவி டாப் டென் (ஆங்கிலப் பதிவாகும் அளவு தமிழ் வார்த்தைகளை அள்ளித் தரும் கன்னல்)-ன் சிவகாசி பட விமர்சனத்தில் கேட்டது:

    ‘ரஜினிகாந்த் படம் போல் எடுக்கப் பார்த்திருக்கிறார்கள்.’

    சே… இதை விட மோசமாக thalaivarஐ திட்ட முடியாது :-(((((

    ஆறாதக் கண்ணிருடன்,
    அற்பன்,
    பாலாஜி

    ஓவியத்தை ரசித்தவர்களின் குப்பைகளை அள்ளுபவள்: