Daily Archives: ஓகஸ்ட் 19, 2005

சுக்கல்கள்

1. கூகிளுக்கு செல்லுங்கள்
“failure” என்று தட்டச்சுங்கள் (படியெடுத்துக் கொண்டு ஒட்டிக் கொண்டாலும் சரி)
“I’m Feeling Lucky” பொத்தானை அழுத்துங்கள் :-))))

2. the Museum of online museums : அரும்பொருளகத்துக்கெல்லாம் ஒரு இணையத்து அருங்காட்சியகம்

3. மாயாஜால் வித்தைகள்

| |

ரஜினியும் கமலும்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி ::

ஜெயம் ரவியின் அப்பா எடிட்டர் மோகன், ஆர்.எம்.வீரப்பன், சத்யஜோதி தியாகராஜன், இப்படி, ரஜினியின் அடுத்தப் படத்தை யார் தயாரிக்கப்போகிறார்கள் என்பதில் ஒரு குட்டி பட்டிமன்றமே நடந்தது கோடம்பாக்கத்தில்.

இப்போது அதற்கு முடிவு கட்டிவிட்டார்கள். அவரது அடுத்தப் படத்தைத் தயாரிக்கப்போவது ஏவி.எம் நிறுவனம். ஷங்கர் இயக்க போகிறார். ஏவி.எம், ரஜினியை வைத்து தயாரிக்கும் ஒன்பதாவது படமாம் இது. ஆக்ஷன் கதைகளில் தூள் கிளப்பும் ஷங்கர், ரஜினிக்காக ஆக்ஷன் பிளஸ் சூப்பர் காமெடி கதையை ரெடிபண்ணி வைத்திருக்கிறாராம்.

கமலை இந்தியன் தாத்தாவாக்கிய ஷங்கர், ரஜினியை என்னவாக்கப்போகிறாரோ?

வம்பு: சுஜாதா, எஸ்ரா, ஜெமோவைத் தொடர்ந்து நமக்கு நன்றாக அறிமுகமான மற்றும் ஒரு முன்னணி எழுத்தாளர் இந்தப் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வசனுவதாக கிசுகிசுக்கிறார்கள்.

Rajinifans.com


பத்து வேடங்களில் கமல் ::

சினிமாவில் பல சாதனைகளைப் பண்ணிவிட்ட கமல், அடுத்ததாக யாரும் பண்ணாத வகையில் பத்து வேடங்களைப் போடப்போகிறார். தசாவதாரம் என்ற பெயரில் வரப்போகும் இந்தப்படத்தை கே,எஸ்,ரவிக்குமார் இயக்கப் போகிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கிறது. நாயகி வேட்டை நடந்து வருகிறதாம். புஷ், ஒஸாமா, சதாம் என்றெல்லாம் நவீன கடவுள்களாக அவருக்கு எத்தனை வேடமோ?

நன்றி: லேஸிகீக் | sify

| | | |