நம்பிக்கை வரம் (போட்டி)


MLK - Hope quoteநம்பிக்கை கவிதைப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் என்னுடைய தேர்வுகள் :

1. நித்யா ::

பசு ஒன்று வரைந்தாள், அதற்கு சிகப்பு நிறம் பூசினாள்
அவள் கிறுக்கிய காக்கையின் நிறமோ பச்சை
அச்சிறுமி மாம்பழம் வரைந்தாள் என்றால்
அவள் சொல்லித்தான் தெரியும்
அது என்னவென்று
ஆனால் அவள் அம்மா பெருமையுடன் சிரித்தாள்
ஓவியங்களைப் பார்த்து தனியே ரசித்தாள்
தன் பெண்ணும் பிற்காலத்தில்…
ஒரு ரவி வர்மா என்ற நம்பிக்கையுடன்…

2. காரைக்குடி ராஜ் ::

வாசு பத்தாம் வகுப்பு பாசாகிறதும்
சுப்பண்ணாவுக்கு பிரமோசன் கிடைக்கறதும்
மைதிலிக்கு அமெரிக்கா மாப்பிள்ளை அமையறதும்
சாந்தி அததைக்கு உடம்பு சரியாகிறதும்..
நன்றாக உடைபடும் தேங்காயிலிருந்துதான்
சிதறுகிறது நம்பிக்கைகளாக.
பார்த்து உடைங்க தேங்காய ஐயரே..

3. அருண் வைத்யநாதன் ::

கஷ்டப்பட்டுப் படித்திருக்கிறேன்
கண்டிப்பாய் பாஸாகிவிடுவேன்..
அப்புறம் எதற்கு முச்சந்தி விநாயகனுக்குத்
தோப்புக்கரணமும், குட்டும்?!
ஜமாலும், ஜேம்சும் ஜம்மென்று
பாஸாவதில்லையா என்ன?
மனசுக்குள் முணுமுணுத்தபடி
விநாயகர் சன்னதி திருநீறெடுத்தேன்.

4. வெங்கி ::

வார்த்தைகளைக் கோர்த்து
எண்ணங்களைக் கிறுக்கி
கவிதையெனப் பேரிட்டு
வலைப்பதிவில் இட்டு
கருத்துகளுக்கு காத்திருக்கையில்
“அருமை!” என கருத்துவர
நம்பிக்கைப் பிறக்கும்
“இனி நானும் கவிஞன்!”

இது நம்ம டாஸ்மாக் நம்பிக்கிக்கு

| | |

One response to “நம்பிக்கை வரம் (போட்டி)

  1. உன்ன எவண்டா கேட்டான்

Anonymous -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.