Daily Archives: ஜூன் 30, 2005

அன்னியன் தேவை (2)

Indians pay Rs 21,068 cr per year as bribe- The Times of India ::

ஆர். கே. லஷ்மண் சித்திரங்களில் வரும் ‘common man’ போன்றவர்கள் லஞ்சமாக இருபத்தோராயிரத்து அறுபத்தியெட்டு கோடிகள் கொடுத்ததாக Transparency International அறிவித்திருக்கிறது.

  • கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் 62 சதவீதம் லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
  • போன வருடத்தை விட இந்த வருடம் ஊழல் அதிகரித்துள்ளதாக மூன்றில் ஒருவர் சொல்லியிருக்கிறார்கள்.
  • முதலிடம்: காவல் துறை
    2: உள்ளூர் நீதிமன்றங்கள்
    3. நில நிர்வாகம்

    (முதலிரண்டைப் பார்க்கும்போது, மக்கள் சட்டத்துக்கு ரொம்பவே பயப்படுகிறார்கள்.)

  • நீர்வள நிர்வாகம்தான் குறைந்த அளவில் லஞ்ச ஊழலில் ஈடுபட்டுள்ளது. (தண்ணீர் இன்னும் குழாயில் வருகிறதா?)
  • கேரளாவில்தான் லஞ்சம் மிகவும் குறைச்சல். தலை பத்தில் தமிழ்நாடு இடம்பிடித்திருக்கிறது.
  • 1. பீஹார்
    2. ஜம்மு காஷ்மீர்
    3. மத்திய பிரதேசம்
    4. கர்னாடகா,
    5. ராஜஸ்தான்,
    6. அஸ்ஸாம்,
    7. ஜார்கண்ட்,
    8. ஹரியானா
    9. தமிழ்நாடு
    ….
    11. டெல்லி
    ….
    16. மஹாராஷ்டிரா
    17. ஆந்திர பிரதேஷ்
    18. குஜராத்
    19. ஹிமாசல் பிரதேஷ்
    20. கேரளா

    அன்னியன் தேவை (1)

  • போட்டி

    குருபாலும் தனபாலும் கார் பந்தயம் வைத்துக் கொள்கிறார்கள். ஐந்து கி.மீ. ரேஸில் தனபால் மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் செல்கிறான்.

    தனபால் 3/5 கி.மீ. கடந்தபின் மூன்று விநாடிகள் காத்திருந்த பிறகு குருபால் வண்டியை எடுக்கிறான். ஒவ்வொரு x-ஆவது கி.மீ.யையும், மணிக்கு 5/2*3-x வேகத்தில் கடக்கிறான்

    யார் ஜெயித்தார்கள்? எப்படி?

    கேட்டவர்: mindsport

    ஷரபோவாடன்

    டென்னிஸ் விளையாட சில துப்புகள்

    1. ‘ஆ’, ‘ஊ’, ‘ஏ’, ‘ஈ’, ‘ஓ’ என்று கத்த சண்டைக் காட்சி இயக்குநர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

    2. ஒரு புள்ளிக்கும் அடுத்த புள்ளிக்குமான இடைவெளியில் ராக்கெட்டில் உள்ள சதுரங்களை எண்ணுவதற்காக சகுந்தலா தேவியைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

    3. ஓரமாய் உட்கார்ந்திருக்கும் நடுவர்களை அனல் கக்கி முறையிட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை அணுக வேண்டும்.

    4. தலையில் துண்டு போட்டு வெயிலைத் தணிக்க, தோற்றுப் போன அரசியல்வாதிகளிடம் முக்காடிடுவது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

    5. சின்ன சின்ன விளம்பரங்களை சட்டையில் தைத்துக் கொள்ள ஆறு புள்ளி எழுத்துருவில் மறுப்புகூறை முன்வைக்கும் மென்பொருளாளர்களிடமிருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

    6. நான்கு பந்துகளை ஒரே சமயத்தில் வைத்துக் கொள்ள, நாலு தமிழக காங்கிரஸ் தலைவர்களை ஒரே சமயத்தில் மேய்க்கும் சோனியாவிடம் அறிய வேண்டும்.

    7. போன முறை ஜெயித்த பந்தையே மீண்டும் கண்டுபிடித்துப் பெற, இரும்புக் கோடரியை நதியிடமிருந்து திரும்பப் பெற்றவனிடம் கேட்க வேண்டும்.

    8. நெட்டில் பட்டு திருடிய பாயிண்டுக்கு ‘சாரி’ கேட்க, ஜார்ஜ் புஷ்ஷிடம் அறிய வேண்டும்.

    9. ஒரு செட் தோற்றாலும், மீண்டு வந்து வெல்வதற்கு தமிழ்ப்பட ஹீரோயிஸக் கதைகளைக் கண்ணுற வேண்டும்.

    10. காலில் கோடி டாலருக்கு காலணி அணிந்தாலும், பந்தில் மட்டுமே குறியாக இருப்பதை, பங்குவிலை எவ்வளவு ஏறினாலும் அசராமல் அடுத்த தொழில்நுட்பத்தை நோக்கும் கூகிளிடம் நோக்க வேண்டும்.

    போன வருட ஷரபோவா பதிவு.

    பிடித்த 10 படங்கள்

    ரீடிஃப் – சுஜாதா ::

  • மதர் இந்தியா
  • லகான்
  • சலாம் பாம்பே
  • சிதம்பரம்
  • முதல் மரியாதை
  • பதேர் பாஞ்சாலி
  • நாயகன்
  • முள்ளும் மலரும்
  • 36, சௌரிங்இ லேன்
  • கரீஜ்

    தியோடார் பாஸ்கரன், ரவி கே சந்திரன், பி. சி. ஸ்ரீராம், அடூர் கோபாலகிருஷ்ணன், மோஹன்லால், ராம் கோபால் வர்மா, சாபு சிரில், அமோல் பலேகர், கிரீஷ் காஸரவள்ளி போன்ற பிறரின் பட்டியலையும் பார்த்துவிட்டு, உங்க ‘தலை பத்தை’ சொல்லலாம். (வழி: teakada: Sujatha’s 10 Best Indian Movies)