சரியா? தவறா?


வாசகர் டிஷ்யூம்JuniorVikatan.com :: சமீபத்தில் ஆந்திர மாநில பேருந்தில் நான் பயணம் செய்து கொண்டிருந்தேன். பஸ் வேலூருக்குள் நுழைந்தது. நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு சற்று தள்ளி ஜன்னலோர இருக்கையில் இருந்த பயணி, ரோட்டில் எச்சில் துப்பினார். பஸ்ஸுக்கு பின்னால், மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த ஒரு நபர் மீது எச்சில் பட்டுவிட்டது.

சட்டென்று வேகமெடுத்த பைக் நபர், ஒவர்டேக் செய்து, பஸ்ஸை நிறுத்த வைத்தார். சடசடவென பஸ்ஸுக்குள் ஏறியவர், தன்மீது எச்சில் துப்பிய பயணியை சரியாக அடையாளம் கண்டு அவரை நெருங்கினார். அதேவேகத்தில் அந்தப் பயணி மீது “த்தூ… த்தூ…”வென சரமாரியாக எச்சிலை துப்பிவிட்டு, வந்தவழியே இறங்கிவிட்டார்.

ஒரு கன்னத்தில் அடித்தாலும் நமக்குத் தெரியும்; பதிலுக்கு பதில் கொடுத்தால் உலகமே கண்ணில்லாதவர்கள் ஆகிப் போவதும் அறிவோம்; சமீபத்திய ‘அன்னியன்’ எச்சில் துப்பலையும் படித்திருப்போம்.

இந்த சமயத்தில் நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டிருப்பீர்கள்?

5 responses to “சரியா? தவறா?

  1. //இந்த சமயத்தில் நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டிருப்பீர்கள்?//
    பஸ் ஜன்னலை விட்டு கொஞ்ச தூரமாய் நடந்துகொண்டிருப்போம்,

  2. இப்படி நீங்கள் கடிப்பதற்கு, யாராவது உங்களை திரும்ப கடிப்பதாக.. ;-))

  3. அவர் திருப்பித் துப்பியது சரியே… அதைத்தான் நானும் செய்தும் இருப்பேன்!!!

  4. முடிந்த வரை பஸ்களின் ஓரமாகப் போகாமல் இருப்பது எனது வழக்கம். அப்படிப் போய்…இப்படி ஆயிருந்தாலும் துடைத்துக் கொண்டு போயிருப்பேன்.

    ஆனால் அந்த பைக்கில் சென்றவர் செய்தது தவறல்ல. சரியே!

  5. நன்றி.

    அவர் செய்தது சரியென்றே பட்டாலும், இனிமேல் அவர் துப்புவதற்கு முன் கொஞ்சமாவது யோசிப்பார் என்றாலும், வேறு ஏதாவது வித்தியாசமான ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது 😕

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.