Monthly Archives: மே 2005

அன்னியன்

பிடித்த பாடல்களின் வரிசைப்படி அடுக்கியிருக்கிறேன்.

1. அண்டங்காக்கா :: ஜஸ்ஸி கிஃப்ட், கேகே, ஷ்ரேயா கோஸல்
ரண்டக்க டக்கர் டக்கரு டக்கரோ டக்கரு… அய்யங்கார் மாமி சதா-வின் அடல்ட்ஸ் ஒன்லி டூயட். ரொம்பப் பிடிச்சிருக்கு

அண்டாங்காக்கா கொண்டக்காரி
அச்சுவெல்ல தொண்டக்காரி

2. அய்யங்காரு வீட்டு அழகே :: ஹரிஹரன், ஹரிணி – வைரமுத்து
சந்திரமுகியில் கூட கடைபிடிக்க ஆரம்பித்திருக்கும் ‘ஒரு பாட்டு; அட்லீஸ்ட் ரெண்டு ட்யூன்’ ஃபார்முலாவில் இதமான ஆரம்பம். (‘ஜகதோ தார’ என்னும் பாட்டு எங்காவது கிடைத்தால் முழுதாகக் கேட்டுப் பார்க்க வேண்டும்.) அதற்குப் பிறகு நாட்டை/கம்பீர நாட்டை என்று கர்னாடக வாசம் வீசுகிறது போல. (சொல்லிக் கொடுத்தவர்: மன்ற மையம் – Raga of songs — ஸ்ரீனி)

காதலன் சமத்து
காதலில் தொல்லை

3. காதல் யானை :: நகுல், நெல்வின், ஜீ வி ப்ரகாஷ் – நா முத்துக்குமார்
வைரமுத்து ஸ்டைலில் நாகஸாகி, ஹிரோஷிமாவை எல்லாம் பெண்ணுக்கு ஒப்பிடுகிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் வட கொரியா போல் மிரட்டுகிறாயே, அமெரிக்கா போல் எல்லா இடங்களிலும் குண்டு போடுகிறாயே என்று அரசியல் காதல் செய்வார்கள். ‘மாகரீனா’ போல் கோரஸ் பிட் வேறு வந்து படுத்துகிறது. இருந்தாலும் பரவாயில்லை!

3. கண்ணும் கண்ணும் நோக்கியா ::ஆண்ட்ரியா, லெஸ்லி லூயிஸ், வசுந்தரா தாஸ்
ஆப்பிள் லேப்டாப் செய்வதில்லையாமே… அது எல்லாம் எனக்குத் தெரியாது. முக்காபலாவிற்குப் பிறகு அதே ரகத்தில் கிடைத்திருக்கும் உருப்படியான பாட்டு. ‘அய்வா’ எல்லாம் product positioning-ஆ என்று வெளிவரவில்லை. தமிழ் சினிமா ரசிகர்களின் நாக்குகளில் வெகுகாலம் அய்வா புரளும்.

5. ஓ… சுகுமாரி :: ஹரிணி, ஷங்கர் மஹாதேவன் – வைரமுத்து
தூக்கம் வருது. கட்டாங்கடைசியில் வரும் ஹரிணியை முன்பே பாட்டில் சேர்த்துக் கொண்டிருக்கலாம். சாய்ஸில் விட்டுவிடுவேன்

என் மனம் ஒரு மலரடி
மலருக்குள் அடிதடி

‘முதல்வனை’ விட கோடி மடங்கு தேவலை. பாடல் வரிகளை அமுக்கிக் காட்டுவதில் ‘பாய்ஸ்’ ரெஹ்மானை மிஞ்சியிருக்கிறார் ஹாரிஸ். ஆனால், ‘சந்திரமுகி’யின் வித்யாசாகரை (அந்நியனில்) ஹாரிஸ் எட்டவே இல்லை.

மன்ற மையத்தில் பார்த்த ஒரு ஒப்பீடு :: The Hub :: Shanke’rs Anniyan Songs:

  • இளையராஜா = Win98 (Old but stable, not good for networking, doesnt get along with people)
  • ஏ.ஆர். ரெஹ்மான் = Windows 2000 Service Pack 4 (Solid)
  • வித்யாசாகர் = Win XP ( Colorful, lot of bugs)
  • ஹாரிஸ் ஜெயராஜ் = லிண்டோஸ் 2000 (A hybrid cross system cloned from Windows 200 with Linux)
  • யுவன் ஷங்கர் ராஜா = லீனக்ஸ் (Open source, share lot of resources around the world, you know what i mean )
  • தேவா, பரத்வாஜ், கார்த்திக்ராஜா போன்றோரை விட்டுவிட்டார் ;;-)

    முடுக்கியதும் முடுக்காததும்

    1. Google Web Accelerator: கூகிளிடம் இருந்து வலையை முடுக்கி விடுவதற்கான நிரலி வெளியாகியிருக்கிறது. தற்போதைக்கு வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மட்டுமே வெள்ளோட்டம் விட்டிருக்கிறார்கள்.

    அமெரிக்காவில் கூட அகலபாட்டை மக்களுக்கு மட்டுமே வேலை செய்யும். தள உரிமையாளர்களுக்கான வ.கே.கே.களையும் படித்து விடவும்.

    2. பேக்பாக் அருமையாக இருக்கிறதாம். யாஹுவின் 360 போலவே பட்டியல் போடலாம்; படங்கள் காட்டலாம்; விக்கி கூட செய்யலாம். jot-ஸ்பாட்டுக்கும் குமுக-எழுத்துக்கும் சரியான போட்டி என்கிறது Micro Persuasion.

    3. டாக் ஸேர்ல்ஸின் (Doc Searls) எது வலைப்பதிவு என்பது குறித்த பட-வில்லைகள், சிந்தையை அல்வா கொடுக்காமல் கிளறுகிறது.

    4. சமையலறையை புரட்சி செய்து நவீனமாக்குகிறது எம்.ஐ.டி.

    5. மசாலா அரைத்து சாப்பிட்டால் புற்றுநோய் ஆபத்து என்று (லண்டன்) டைம்ஸ் அலறுகிறது. (பக்கத்து அடுக்ககத்தில் இருப்பவரின் பையனுக்கு lead அதிகம் இருப்பதாக சொன்னார். சாயத்தில் ஆரம்பித்து பாத்திரங்களில் ஆராய்ச்சி தொடர்ந்து கடைசியில் சாம்பார் பொடியிலும் ரசப்பொடியிலும் லெட் மிகுந்திருப்பதை கண்டுபிடித்தார்கள். மில்லில் அரைக்கும்போது, துருப்பிடிக்காத மெஷினாகப் பார்த்து, அரைச்சு சாப்பிட வேண்டும்.)

    6. புத்தகப்புழுக்களுக்கு ஏற்ற வலைப்பதிவுகளை பாஸ்டன் க்ளோப் குறிப்பிட்டிருக்கிறது. அவ்வப்போது எட்டிப்பார்த்தால் அமேசான்(.காம்) உலகை அறியலாம்.

    7. அன்னையர் தினத்தை முன்னிடாமல் நியு யார்க் டைம்ஸின் கட்டுரை, மாபெரும் சபைகளில் நடக்கும் மகளிரை அலசுகிறது.

    ஷல் வீ டெல் தி ப்ரெஸிடெண்ட்?

    யார் ஜெயிப்பார்கள்?
    யூகே-வின் தமிழ் வலைவாசிகள் ஏன் தேர்தலை கண்டு கொள்ளவேயில்லை??
    டோனி ப்ளெயரின் வெற்றி நிச்சயமா???

  • பிபிசி
  • டைம்ஸ்
  • நியு ஸ்டேட்ஸ்மேன்
  • எகானமிஸ்ட்
  • கார்டியன்
  • என்.பி.ஆர்
  • முன்னுமொரு காலத்தில்

    வலையில் இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக பதிவது பெரிய விஷயம். இரண்டாண்டு காலமாக ரமணீதரன் வலைப்பதிந்து வருகிறார். வலைப்பதிவு ஏன், நியு ஜெர்ஸி பெட்னா விழா குறித்த பதிவுகள், திரைப்படங்கள், PBS / NPR-இன் All Things Considered, The Connection, On Point என்று விளாசுகிறார்.

    லிட்டில் பிக் மேன், The Hudsucker Proxy, தி ஸ்டிங், Rio Lobo, பிக் ஜேக், The Comancheros, Rio Grande , Sands of Iwo Jima, Cradle will rock, ரிபல் விதவுட் அ காஸ், ப்ளூ க்ரஷ், தி பேட்ரியாட், தி ரெக்ரூட், தி ஹவர்ஸ், தி வேனிஷிங் ஹாரி, un ami qui vous veut du bien (With a Friend Like Harry), சவுண்ட் அண்ட் ஃப்யூரி, Yadon ilaheyya (Divine Intervention), லீவிங் ஜெருசலம் பை ரயில்வே, தி எண்ட் ஆஃப் தி அஃபேர், எ க்ரையிங் கேம், மிட்நைட் இன் தி கார்டன் ஆஃப் குட் அண்ட் ஈவில், என்று பார்த்த படங்களுக்கு எல்லாம் பார்வையோ விமர்சனமோ (இப்பொழுதாவது) முன்வைத்தால் நன்றாகத்தான் இருக்கும்.

    அப்பொழுது எனக்கு வந்த சந்தேகம். மனிதர் தூங்குவாரா அல்லது கண்ணிமைக்கும் நேரங்கள்தான் உறக்கம் என்று நினைக்கிறாரோ என்று தோன்றும். பிறகு புள்ளை குட்டிக்காரர் ஆகிப்போனார். பாஸ்டன் வந்தபிறகு சகவாசமும் சரியில்லை. கெட்டுப் போயிருக்கிறார் :-/

    The redistricting plan, வானொலி நாடகங்கள், கதைசொல்லிகள், ஞானக்கூத்தனின் கவிவகுப்பு, தமிழன் அடையாளம், கண்ணில் தெரியுது வானம், அவருக்கு ரொம்பப் பிடித்தமான எழுதுபொருளான கவிதை, அன்றைய நாளிலே அவர் அஞ்சிய இன்னொரு சொல்லான பாரதி, உயர்வு நவிற்சி, சரிகைக்குஞ்சச்சொற்கள்,
    காற்றடைத்தபைக்கூற்றுகள், சில கெட்ட உறுப்புகள் என்று எழுந்தவை, எதிர்ப்பட்டவை, பார்வை, மற்றவை என்று அடுக்கி உங்களை வலைபாஸ் (தமிழில் என்ன?) பாதையில் விடப்போவதில்லை.

    (தமழ்ச் சொல் என்றவுடன் கண்ணில் படுவது: மறுப்புக்கூற்று (disclaimer), narcissist masks — தன்னீர்ப்புமுகமூடிகள் போன்ற சொல்லாக்கங்கள்.)

    வானவியற்றுறையையும் விடவில்லை. பெயரிலி ஆகிப் போனதும் இங்கே பதிவது குறைந்து போனது.

    அவருடைய பதிவுகளில் இருந்து:

  • blogger.com தனது அண்மைய அமைப்பு மாற்றுதலோடு நீண்ட உள்ளிடுகைகளை ஏற்றுக்கொள்வதைத் தடை செய்கின்ற நோக்கமேதும் கொண்டதாலேயே, இந்த இரண்டு உள்ளிடுதல்களோடும் BIG POST ERROR என்று சுருக்கமான வரப்புயர விளக்கத்தைப் பெற்றேனோ தெரியாது 🙂 [அல்லது தமிழிலே நீண்டதாய் எழுதியதை ஆங்கிலத்திலே, “நல்ல கருத்துக்களைச் சொன்னார்; கைதட்டிவிடுங்கள்” என்ற பகிடிபோல மொழிபெயர்ப்பாகச் சொல்லியதோ தெரியாது :-D]
  • இன்னொரு ஆறுதலான விடயம், இணையத்தின் அறியப்பட்ட “I don’t care what kind of cake you bake; but, I will top it with my sour cream” அறிஞ்ஞ ஆசாமிக்குஞ்சுமோன்கள் இவரின் திரைப்படவிமர்சனங்களிலே தங்கள் உள்ளீடு என்றளவிலே இதுவரை குப்பை சொட்டாமல், கொட்டாமலிருப்பது.
  • வலைப்பதிதலிலே உள்ள எதையும் விரும்பியவாறு என்ற நாட்குறிப்புச்சுதந்திரத்தைக் கண்டு கொண்டாலும், சொல்லும் பாங்கிலே கொஞ்சம் நிதானமாக, பின்னாலே இரண்டடி வைத்து நின்று நான் சொல்லவருவதை நானே கேட்டு எழுதுவதாகத் தீர்மானம். அன்றாடம் கேட்பதும் காண்பதும் வாசிப்பதுமாக உள்ளே வருவனவற்றிலே எந்தளவு உள்ளே தங்குகிறது என்று தெரியவில்லை. ஒரு மாதம் கழித்துப் பார்த்தால், ‘இத்தனையையும் உள்வாங்கிக்கொண்டதால் என்ன பயன்’ என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது. சில மாதங்களிலே அடையலின்மேலே அடையற்படிவாய்த் தேங்கி, பாறையாகிப் போய்விடுகிறது. கதை, கவிதை, கட்டுரை எழுதுவதே சூழல்–>இருப்பு–>மூட்டம் காரணமாகத் தேய்ந்து போகையிலே, இந்த வலைப்பதிவு குறைந்த பட்சம் அன்றாட அறிதலிலே ஓரிரண்டையாவது பதித்துக்கொள்ள உதவும்; இன்னும், பத்தாண்டுகளிலே திரும்பிப் பார்க்கையிலே வந்த பாதையும் அறிந்த கருத்துக்களும் எந்தளவு குறிகளையும் நிலைகளையும் மாற்றியிருக்கின்றன என்றாவது அறிவதிலே ஒரு திருப்தி ஏற்படக்கூடும்.
  • அரசு பதில்

    Kumudam Weekly ::

    எஸ்.ஜனார்த்தனன், சின்னதாராபுரம்.
    ‘தமிழ்நாடு விளங்காமல் போனதற்கு சினிமா பைத்தியங்களாக தமிழர்கள் இருப்பதுதான் காரணமா?

    அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், திரையரங்கங்கள் எல்லாம் நிரம்பி வழிந்து கொண்டிருக்க வேண்டுமே? தமிழ்நாட்டு அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக சினிமா ஆரம்ப காலத்தில் இருந்தது வேண்டுமானால் ஒரு காரணமாக இருக்கலாம்.

    வி.மாரிமுத்து, பரப்பாடி.
    சிறந்த கலைப் படைப்பு என்பதற்கு அளவுகோல் என்ன?

    (1)வாழ்க்கையின் அம்சம் ஒன்றை அந்தப் படைப்பு புதிதாக வெளிப்படுத்துகிறதா? வெளிப்படுத்தப்பட்ட விஷயம் உண்மையானதுதானா?
    (2) அது அழகாகவும், சொல்ல முற்பட்ட பொருளுக்கு ஏற்ற முறையிலும் அமைந்திருக்கிறதா?
    (3) கலைஞனுக்கும் அவன் படைத்த படைப்புக்கும் உள்ள உறவு சத்தியமானதா? மூன்றாவதாகச் சொன்ன இந்த அளவுகோல், மிக முக்கியமானது. படைப்பவனிடம் உதித்த அதே உணர்ச்சிகள், அதைப் படிப்பவனுக்கோ, பார்ப்பவனுக்கோ, கேட்பவனுக்கோ ஏற்படச் செய்வதே அந்தச் சத்தியம்தான்’ (சொன்னது டால்ஸ்டாய்)

    பரிநீதா

    இசை: ஷாந்தனு மொய்த்ரா (Shantanu Moitra)
    பாடலாசிரியர்: ஸ்வனாந்த் கிர்கிரே (Swanand Kirkire)
    சாய்ஃப் அலி கான், வித்யா பாலன், ரேகா, சஞ்சய் தத், தியா மிர்சா

    பியா போலே – சோனு நிகம், ஷ்ரேயா கோசால்
    அந்தக் கால மனீஷா கொய்ராலா போல் இருக்கிறார் நாயகி வித்யா பாலன். காதலை இயற்கையின் பல வண்ணங்களோடு ஒப்பிடும் வரிகள். 1942- எ லவ் ஸ்டோரி போன்ற மெல்லிய இசை. கொஞ்சும் ஷ்ரேயா கோசாலின் குரல் வெகு பாந்தமாக வருடுகிறது.
    மீண்டும் மீண்டும் கேட்கலாம்

    கஸ்தோ மஸா – சோனு நிகம், ஷ்ரேயா கோசால்
    குழந்தைகளுடன் பயணிக்கும் ஹீரோ அறிமுகப் பாடல். கனவுக் காதலர்களை வர்ணிக்கிறார்.
    படம் பார்த்த பிறகு மேலும் பிடித்துப் போகலாம்

    சுனா மன் கா ஆகன் – சோனு நிகம், ஷ்ரேயா கோசால்
    பிரிக்கப்பட்ட இளஞ்ஜோடிகளின் தொக்கி நிற்கும் கேள்விகள். இடைவேளைக்குப் பின் சோகத்தைப் பிழிய உதவும்.
    பரவாயில்லை

    கேஸி பஹேலி ஜிந்தகானி – சுநிதி சௌஹான்
    மும்பையில் மூடப்பட்ட பார்களில் வரும் ஜாஸ் இசை போல் இடுப்பை மெதுவாக வளைத்து ஆடிப்பார்க்க வைக்கிறார்கள். திரையில் ரேகா தோன்றுவார்.

    ராத் ஹமாரி தோ – சித்ரா, ஸ்வனாந்த்
    சுவர்க்கோழி ரீங்காரமிட, இராப்பாடகனின் சோக அழைப்போடு துவங்குகிறது.
    அமைதியான நேரங்களில் கேட்கலாம்

    தினக் தினக் தா – ரீடா கங்குலி
    கல்யாண முன்னோட்டத்தின் குரூப் டான்ஸ். திரைப்படத்தின் துள்ளல் பாடல். ஹிந்திக்குக் கிடைத்திருக்கும் புதிய இலா அருணான, ‘ரீடா கங்குலி’ வெகு சீக்கிரமே தமிழில் ரகஸியாவுக்குக் குரல் கொடுத்து விடுவார்.
    இது நம்ம பாட்டுங்க

    ஹுயி மேன் பரிநீதா – சோனு நிகம், ஷ்ரேயா கோசால்
    முதற் பாடலான பியா போலே-வின் சோகப் பதிவு.

    படத்தை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கும் பாடல்கள். பாடல்கள் கேட்க: RAAGA – Parineeta – Hindi Movie Songs

    What are Blogs? 

    What are Blogs? Posted by Hello

    Doc Searls recently spoke on the topic – "What bl…

    Doc Searls recently spoke on the topic – “What blogs are Vs What blogs are not” at Les Blogs recently. In an insightful presentation, Doc Searls explains the cardinal principles of blogging and their likely impact on the readers and society at large.

    Some snippets from the presentation:

    – Blogs inform but not deliver information

    – Blogging is about making and hanging minds

    – Blogging is about rolling snowballs dowhhill not about pushing rocks uphill

    – Blogs are an example of demand side supplying itself

    – Blogs don’t have to be sticky
    The presentation slides are available here

     Posted by Hello

    மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனை

    தினகரன் :: ராய்ப்பூர், ஏப். 28 – ராய்ப்பூரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள் நிர்வாணப்படுத்தி சோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த மார்ச் மாதம் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. அப்போது தேர்வில் காப்பி அடிப்பவர்களை பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட – பறக்கும் படையினர் ஒரு வகுப்பிலிருந்த 35 பெண்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை அவிழ்த்து பரிசோதனை செய்த பின்னரே தேர்வு எழுத அனுமதித்தார்களாம். ஒரு மணிநேரம் இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கேடு கெட்ட செயல் சட்டீஸ்கர் மாநிலம் உமாரிய என்ற ஊரில் நடந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில கல்வி அமைச்சர் ராஜேஷ் முனத் தெரிவித்தார்.

    முஸ்லிம் திருமண விவாகரத்துக்கு புதிய கட்டுப்பாடு

    vikatan.com :: முஸ்லிம்கள் மும்முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்வதற்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் புதிய கட்டுபாடு விதித்துள்ளது.

    போபாலில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் 2 நாள் பொதுக்குழு கூட்டத்தின் முடிவில், நிருபர்களிடம் பேசிய வாரியச் செயலாளர் அப்துல் ரகீம் குரேஷி “முஸ்லிம் திருமண விதிமுறை மாதிரிச் சட்டம் ‘நிக்காஹ் நாமா‘ தயாரிக்கப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

    அல்லாஹ் பார்வையில் ‘தலாக்‘ செய்வது மிகவும் வெறுக்கத்தக்க ஒன்றாகும். எனவே முஸ்லிம்கள் விவாகரத்து செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

    தம்பதிகள் விவாகரத்து செய்ய முடிவு செய்தால், அதற்குரிய கால அவகாசம் கொடுக்கப்படவேண்டும். ‘தலாக்’ என்பது கடைசி ஆயுதமாகப் பயன்படுத்தப்படவேண்டும் என்பதே ‘நிக்காஹ் நாமா’வில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சமாகும்.

    ‘தலாக்’ கூறுபவர்கள் ஒரே முறையில் மூன்று முறை ‘தலாக்’ கூறமுடியாது. ஒரு ‘தலாக்’க்கும் இன்னொரு ‘தலாக்’க்கும் குறைந்தபட்சம் ஒரு மாத இடைவெளி இருக்கவேண்டும். ஒரு முறை ‘தலாக்’ சொன்னால் அதை மூன்று மாதத்துக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

    மேலும் விவரங்களுக்கு: NDTV