Anniyan Trailer


அன்னியனின் திரை முன்னோட்டம் இங்கே கிடைக்கிறது. (தகவல்)

விண்டோஸ் மீடியா ப்ளேயரில் ஒலி மட்டுமே கேட்டது. ஒளியுடன் பார்க்க எனக்கு டிவெக்ஸ் தேவைப்பட்டது. உங்களுக்குப் பொருத்தமானதை இறக்கிக் கொண்டுவிடுங்கள்.

ட்ரெயிலர் பார்த்தவுடன் தோன்றிய சில:

  • நவநவீன ஆடைகளிலும் சதா அழகாய்த்தான் இருக்கிறார். (கண்ணும் கண்ணும் நோக்கியா).
  • I Know What you did last Summer-இல் ஆரம்பித்து மேட்ரிக்ஸ் வரை ‘எப்படம் யார் யார் எடுத்தாலும், அப்படம் தமிழ்ப்படம் ஆக்குவது அறிவு’ என்று கூட்டுப்பதிவு முதல் காலச்சுவடு வரை இடிபடப்போவது உறுதி.
  • ‘எகிறி குதித்தேன்’ பாடலின் ஆரம்பத்தில் வீணடிக்கப்பட்ட freeze-frames, jump-cuts, flashbacks, color shifts, and handheld camerawork, ஆக்கபூர்வமான முறையில் உபயோகிக்க வழி கண்டுபிடித்திருக்கிறார்.
  • ஜீன்ஸில் வந்த ‘அன்பே அன்பே’, அய்யங்காரு வீட்டு அழகாகவும், இந்தியனின் நிழல்கள் ரவி கொலையும், இன்னும் பல ஷங்கரின் மறக்கமுடியாத காட்சிகள் ரீ-மிக்ஸ் செய்யப்பட்டிருக்கும்!?
  • பிரும்மாண்டத்திற்கு பெயர் பெற்றவர் என்றாலும், பத்தாயிரத்து முன்னூற்றி ஏழு (10,307) கராத்தே வீரர்களை க்ளைமாக்சுக்கு அடித்து நொறுக்குவதாக காட்டுவதெல்லாம் திருப்பாச்சிக்கிரமம்.
  • விவேக், சிரிக்கும் லாரிகள், சைபர் குற்றம் (?), பிரகாஷ்ராஜ், சில் த்ரில்லர்கள், கல்கி அவதாரம் என்று ஜனரஞ்சகமாக இருக்கிறது.

    சந்திரமுகியை விரட்ட அன்னியன் தயார் போலத்தான் தெரிகிறது.

  • 4 responses to “Anniyan Trailer

    1. Unknown's avatar எம்.கே.குமார்

      அண்ணாத்தே, படம் ஓடணும். இல்லாட்டி ஷங்கர் ஏற்கனவே இருக்கும் ஒரு லிஸ்டில் சேர்ந்து மறுபடியும் ‘முதல் படத்திலிருந்து’ ஆரம்பிக்கணும்.

      விக்ரமிற்கும் இது ஜெயிக்கணும், இல்லாட்டி எலிகள் எல்லாம் விக்ரம் பூனை மேல ஏறி ஆடும்; பாடும். 🙂

      எம்.கே.குமார்

    2. >> மறுபடியும் ‘முதல் படத்திலிருந்து’

      அதுதான் ‘அன்னியன்’ என்று பேசிக்கறாங்களே 😉

    3. Unknown's avatar காஞ்சி பிலிம்ஸ்

      //’எகிறி குதித்தேன்’ பாடலின் ஆரம்பத்தில் வீணடிக்கப்பட்ட freeze-frames, jump-cuts, flashbacks, color shifts, and handheld camerawork, ஆக்கபூர்வமான முறையில் உபயோகிக்க வழி கண்டுபிடித்திருக்கிறார்//
      நீங்களும் சினி டெக்னீஷியானா (non-linear editing specialist) ? இப்படி போட்டுத்தாக்குறிங்களே?

    4. >>நீங்களும் சினி டெக்னீஷியானா

      டயலாக் விடறவன் எல்லாம் எழுத்தாளரா என்பது மாதிரிதான் காஞ்சி 😉

      (நான் சினிமா நுர்பம் தெரிந்தவன் அல்ல; ஏதாவது வித்தியாசமாய் பட்டால் எப்படி என்று கொஞ்சமாய் தெரிந்து கொண்டவன்… அவ்வளவே)

    பின்னூட்டமொன்றை இடுக

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.