ஃபையரிங் ஸ்பாட்


கே. தெய்வசிகாமணி

சமீபத்தில் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ‘உலக ஆஸ்துமா விழிப்புணர்வு தினம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தினார், டாக்டர் ஆர். ஸ்ரீதரன்.

எழுத்தாளர் சுஜாதா, கார்ட்டூனிஸ்ட் மதன், டைரக்டர் ரா. பார்த்திபன் ஆகியோர் வந்திருந்தனர்; வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

‘மனிதமே புனிதம்’ என்ற தலைப்பில் உரையாற்ற வந்த பார்த்திபன், ஜோக்ஸ் என்ற பெயரில் பேசியதில் அநாகரிகம் மேலோங்கி இருந்தது.

இதோ சாம்பிளுக்கு ஒன்று…

“த்ரிஷா ஒரு டாக்டரிடம் சென்று கேட்டாராம் – ‘டாக்டர், டாக்டர், என் மேனி அழகுக்கு சோப்புப் போட்டுக் குளிப்பதா, ஷாம்பூ போட்டுக் குளிப்பதா?’ என்று. அதற்கு டாக்டர் சொன்னாராம், ‘முதல்ல நீ தாழ்ப்பாள் போட்டுக் குளி.’ “

இது சினிமா சம்பந்தப்பட்ட விழா அல்ல. ஆஸ்துமா பற்றிய நிகழ்ச்சியில், சம்பந்தமே இல்லாத த்ரிஷாவைப் பற்றி, அவர் இல்லாத இடத்தில், தரக்குறைவாக ஜோக் அடிப்பதைத் தவிர, பார்த்திபனுக்கு கிரியேட்டிவ் ஐடியாவே கிடைக்கவில்லையா?

மதன் கூட இதே நிகழ்ச்சியில் மிகவும் நகைச்சுவையாகப் பேசினார். ஆனாலும் யார் மனமும் புண்படும்படி பேசவில்லை, தன்னைத்தானே கிண்டலடித்துக் கொண்டு பேசினார். அதில் கண்ணியமும், நாகரிகமும் மிளிர்ந்தன. ஆனால் பார்த்திபன் பேச்சு? மனித நேய மன்றம் நடத்திவரும் பார்த்திபனா இப்படி?

நன்றி: Kumudam Reporter

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.